கேள்விகளும்‌ ‌பதில்களும் (COD 2:20) Jeffersonville, Indiana, USA 64-0823E 1நாம்‌ ‌நின்ற‌ ‌வண்ணமாக‌ ‌சற்று‌ ‌நேரம்‌ ‌ஜெபிப்போம்.‌ ‌ அன்புள்ள‌ ‌தேவனே,‌ ‌இன்றிரவு‌ ‌நாங்கள்‌ ‌எங்கள்‌ ‌இரட்சகர்‌ ‌இயேசுவுக்காக‌ ‌உமக்கு‌ ‌முதலாவதாக‌ ‌நன்றி‌ ‌செலுத்து‌‌கிறோம். ‌‌அவர்‌ ‌நேற்றும்‌ ‌இன்றும்‌ ‌என்றும்‌ ‌மாறாதவராயுள்ள‌ ‌காரணத்தால்‌ ‌உமக்கு‌‌ நாங்கள்‌ ‌நன்றி‌ ‌செலுத்துகிறோம்.‌ ‌அதை‌ ‌விசுவாசிக்கின்ற‌ ‌மக்களுக்காக‌‌ உமக்கு‌ ‌நன்றி‌ ‌செலுத்துகிறோம்.‌ ‌எங்களுக்கு ‌‌கற்பனையான‌ ‌ஒரு‌‌தேவன்,‌ ‌கற்பனையான‌ ‌ஒரு‌ ‌விக்கிரகம்,‌ ‌கற்பனையான‌ ‌ஆவி‌ ‌இல்லாமல்,‌‌ எங்களோடும்‌ ‌எங்களுக்குள்ளும்‌ ‌வாசம்‌ ‌செய்து,‌ ‌எங்கள் ‌‌மூலமாய்‌ ‌கிரியை‌ ‌செய்யும்‌ ‌உண்மையான,‌ ‌ஜீவிக்கிற‌ ‌தேவன்‌ ‌எங்களுக்கு‌ ‌இருக்கிறபடியால் ‌‌நாங்கள்‌ மகிழ்ச்சி‌‌யுள்ளவர்களாயிருக்கிறோம்.‌ ‌அதில் ‌‌கற்பனையான‌ ‌எதுவுமே‌ ‌இல்லை.‌ ‌நாங்கள்‌ ‌தேவனுக்கு‌ ‌விக்கிரகங்களை‌‌ உண்டாக்குகிறதில்லை,‌ ‌நாங்களே‌ ‌தேவனுடைய‌ ‌ஜீவிக்கிற‌ ‌ரூபங்களாய் ‌‌இருக்கிறோம்...‌ ‌பரிசுத்த‌ ‌ஆவி‌‌யானவர்‌ ‌ஒரு‌ ‌விக்கிரகத்தின்‌ ‌மூலம் ‌‌பேசாமல்,‌ ‌மீட்கப்பட்ட‌ ‌ஒரு‌ ‌பாண்டத்தின்‌ ‌மூலம்‌ ‌பேசுகிறார்‌ ‌-‌ ‌தேவன்‌ ‌மாம்சத்தில்‌ ‌வெளிப்படுதல்.‌ ‌ இதற்காகவும்,‌ ‌மகத்தான‌ ‌அக்கினி‌ ‌ஸ்தம்பம்‌ ‌எங்களைப் ‌பின்தொடரும்‌கிறதற்காகவும்,‌ ‌அதாவது‌ ‌நாங்கள்‌ ‌அக்கினி‌ ‌ஸ்தம்பத்தை‌ ‌பின்‌ ‌தொடருகிறதற்காகவும்.‌ ‌அதே‌ ‌ஆவி,‌ ‌அது‌ ‌பூமியில்‌ ‌வரும்போ‌தெல்லாம்‌ ‌செய்து‌ ‌வந்துள்ள‌ ‌அதே‌ ‌கிரியையை‌ ‌இப்பொழுதும்‌ ‌ செய்து அதே மகத்தான அடையாளங்கள் காணப்படுகிறதற்காகவும் நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! அது எவ்வளவாய் எங்களுக்கு ஆறுதலளிக்கிறது! கர்த்தாவே, இன்றிரவு நாங்கள், வேறெந்த நோக்கத்துக்காகவும் அல்ல, உம்முடைய உதவியினால் நாங்கள் எப்படி அறிந்துகொள்வதென்றும், எப்படி கற்றுக்கொள்வதென்றும், எவ்விதம் மேலான கிறிஸ்தவர்களாக ஆகி, நாங்கள் அணுகிக் கொண் டிருக்கும் இந்த மணிநேரத்தில் நாங்கள் எவ்விதம் மேலான பொருத்தமுள்ள கிறிஸ்தவர்களாக இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்துக்காகவே கூடி வந்துள்ளோம். எங்களுக்கு உதவி செய்யமாட்டீரா, கர்த்தாவே, நீர் எங்களுக்குத் தேவையாயிருக்கிறீர். இயேசுவின் நாமத்தில். ஆமென் நீங்கள் உட்காரலாம். 2இன்னும் ஏறக்குறைய முப்பது நாற்பது கேள்விகள் உள்ளன. இவைகளுக்கெல்லாம் எவ்விதம் பதில் சொல்லி முடிக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று பிற்பகலில், வழக்கமான அளவிற்காவது அதை முடிக்க முடியுமா என்று கடினமாக முயன்று பார்த்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால் இதைக் கூற விரும்புகிறேன், அதாவது என்னால் இயன்றவரையிலும் இக்கேள்விகளுக்கு பதில் கூற நான் முயல்வேன். ஏனெனில் இவை கிறிஸ்தவர்களின் இருதயங்களில் எழுந்த அருமையான கேள்விகள். எனக்குத் தெரிந்தவரையில் இக்கேள்விகளுக்கு ஞானமான பதில்களை உரைக்க நான் நிச்சயம் விரும்புகிறேன்.இன்று காலையில் இந்த கேள்விகளுக்கு பதிலுரைக்க அவர் உதவி செய்து, அவர் நமக்களித்த விடைகளுக்காக நான் கர்த்தருக்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்பொழுது, இக்கேள்விகளையெல்லாம் கலந்து வைத்திருக்கிறேன். அவை 150க்கும் அதிகமான கேள்விகள் என்று எண்ணுகிறேன். இப்பொழுது நாம் துவங்குவதற்கு முன்பாக, மேளங்கள் கொட்ட, சபை 'ராக்' இசைக்கிறது என்னும் கட்டுரையை யாராகிலும் காண விரும்பினால் -அந்த பிரஸ்பிடேரியன் போதகர் தன் சபையை திருவிருந்துக்காக “ராக் அண்ட்ரோல்” இசையுடன் நடத்திச் செல்லுதல்... இதை நான் ஒரு நிமிடம் பார்க்கட்டும். 3“வாலிப அங்கத்தினர்கள் 'ஜாஸ்' (Jazz) இசைக்கு நடனமாடுதல். இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்த நாடகம். நவீன 'ராக் அண்டு ரோல்' இசை சிலுவையில் அறையப்படுதலைத் தெரிவிக்கிறது' என்னும் தலைப்பு. அங்குள்ள போதகர் இளைஞர் அனைவரையும் அங்கு நடத்திச் சென்று, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை 'ராக் அண்டு ரோல்', 'ஜாஸ்' இசையின் மூலம் நடித்துக் காண்பிக்கச் செய்தார். நல்லது. அது மேரிலாண்டில் நடந்தது. அது ஏதோ ஒன்றைக் குறிக்கவில்லையா? இதோ, இங்கு அந்த புகைப்படம்... இன்று காலை நான் 'பீட்டில்ஸ் (Beatles) பாடகர்களைக் குறித்து கூறிக் கொண்டிருந்தேன். அந்த கட்டுரை 'பீட்டில்ஸ் திரும்ப வருதல்' என்னும் தலைப்பு கொண்டது. அந்த பத்திரிகையில் உள்ள கட்டுரையை நீங்கள் படிக்கவேண்டும்.“.... அவர்கள் ஒரு புது மார்க்கத்தை நிறுவியுள்ளனர். அவர்களுடைய மேலாளர்.... அந்த செய்தித்தாளிலிருந்து நான் குறிப்பு எழுதிவைத்துக் கொண்டிருக்கிறேன். நமக்கு நேரமில்லை... இவைகளை யாராகிலும் படிக்க விரும்பினால் இவைகளை நான் அறிவிப்பு பலகையில் தொங்க விடுகிறேன், அப்பொழுது நீங்கள் அதைப் படிக்கலாம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரம் அதிர்ச்சியுண்டாக்கக் கூடியது என்பதை உங்களுக்குக் காண்பிக்கவே விரும்பு கிறேன். ஒருக்கால் உங்களால் இதைப்புரிந்து கொள்ள முடியாது, ஆனால், மக்களே, இவை என்னவென்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நான் சகோ. காப்ஸிடம், இதை படிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவருக்கு நல்ல கல்வியறிவு உண்டு. அவரால் என்னை விட நன்றாக படிக்க முடியும். 'பீட்டில்ஸ்ஸின் மேலாளர் கூறியுள்ளதை இக்கட்டுரையிலிருந்து படிக்கும்படி அவரைக்கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதை செய்வீர்களா, சகோ. காப்ஸ்? 4(சகோ. காப்ஸ் 'பீட்டில்ஸ்' பற்றி எழுதப்பட்ட கட்டுரையைப் படிக்கிறார் - ஆசி). பீட்டில்ஸ் தங்களைக் குறித்து வியந்துள்ள எந்த பதிலையும். பெறுவதில்லை. “அது நம்பமுடியாத ஒன்று. முற்றிலுமாக நம்ப முடியாத ஒன்று” என்று கூறுகிறார், 'பீட்டில்ஸ்ஸின் செய்திதுறை ஆசிரியரான (Press Officer) டெர்ரிக் டெய்லர். “லிவர்பூலைச் சேர்ந்த இந்த நான்கு வாலிபர் இதோ உள்ளனர். அவர்கள் முரட்டுத்தனமுள்ளவர்கள்; அவர்கள் தேவனை நிந்திப்பவர்கள்; அவர்கள் இழிவானவர்கள்; இருப்பினும் அவர்கள் உலகையே கைப்பற்றி யுள்ளனர். அவர்கள் ஒரு புது மார்க்கத்தை நிறுவியது போல் உள்ளது. அவர்கள் முற்றிலும் கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள். நானும் கூட கிறிஸ்துவுக்கு விரோதமானவனே; ஆனால் அவர்கள் மிகவும் அதிகமாக கிறிஸ்துவுக்கு விரோதமாக இருக்கும் நிலை என்னில் அதிர்ச்சியுண்டாக்குகிறது, அது எளிதான காரியமல்ல. ஆனால் அவர்கள் என் மனதை ஆக்கிரமித்துள்ளனர். ஒவ்வொரு வரும் அப்படித்தான் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுடைய நேர்மை என் மனதைக் கவர்ந்துள்ளது. அவர்களை மிகவும் அதிகமாக விரும்பும் மக்கள், மிகவும் அதிகமாக அவமானப்படுத்தப்பட வேண்டிய மக்களே.” “உதாரணமாக, ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு முறையும் அவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கும் போது, டீகாலே வந்திறங்கினது போல, இன்னும் சொல்லப்போனால் மேசியாவே வந்திறங்கினது போல இருந்தது. வழிநெடுக ஜனங்கள் திரளாக நின்று கொண்டிருந்தனர். சப்பாணிகள் தங்கள் கக்கத் தண்டங்களைத் தூக்கியெறிந்தனர். நோயாளிகள், அந்த வாலிபர்களில் ஒருவர் தொட்டால் அவர்கள் சுகமடைந்து விடுவார்கள் என்பது போல, காரை நோக்கி விரைந்து ஓடினர். நாங்கள் சாலையில் கடந்து சென்ற போது, வயோதிப ஸ்திரீகள் பேரக் குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நோக்கினர். அவர்களுடைய முகங்களில் இருந்த தோற்றத்தை என்னால் காணமுடிந்தது. ஏதோ ஒரு இரட்சகன் அந்த இடத்திற்கு வந்தது போலவும், இனி மேல் காரியங்கள் நன்றாக ஆகிவிடும் என்பதைப் போலவும் ஜனங்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களாய், பாரம் நீங்கினவர்களாய் காணப்பட்டனர்”. டெய்லர் பேசுவதை சற்று நிறுத்திக்கொண்டு, வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, “இனி பீட்டில்ஸ் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, சுகமளிக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதே என்றார். 5இயேசு அதைதான் கூறினாரல்லவா? “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, நாங்கள் .......செய்யவில்லையா? என்பார்கள். பாருங்கள்? நீங்கள் சுகமளிக்கும் கூட்டங்களில் உங்கள் நம்பிக்கையை வைக்க முடியாது என்பதை உங்களால் காண முடியவில்லையா? அப்படிப்பட்ட எந்த அடையாளத்திலும் உங்கள் நம்பிக் கையை நீங்கள் வைக்க முடியாது. நீங்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒன்றே ஒன்று வேதத்திலுள்ள கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் மட்டுமே. இப்பொழுது சபையே, உங்களை அங்கு தான் வைக்க நான் முயன்று வந்திருக்கிறேன். என் பிள்ளைகளே. எனக்கு ஏதாகிலும் நிகழ்ந்து தேவன் என்னை இந்த உலகிலிருந்து எடுத்துக்கொள்வாரானால், நீங்கள் ஒரு போதும் தவற வேண்டாம்; அதாவது, வார்த்தையில் நிலைத்திருங்கள். வார்த்தையை விட்டு விடாதீர்கள். அதற்கு முரணான எதையும், அது எதுவானாலும் அதை தனியேவிட்டு விடுங்கள். அப்பொழுது அது சரியென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்? ஒரு சுகமளிக்கும் கூட்டமாம்! தங்கள் இழிவான செயலினாலும் அழுக்கான காரியங்களினாலும் தங்கள் சொந்த மேலாளர்களுக்கே அதிர்ச்சியை விளைவிக்கும் பாவமுள்ள மனிதர்; ஜனங்கள்தங்கள் கக்கதண்டங்களை தூக்கியெறிந்து விட்டு, இந்த பையன்களைக் காணும்போது சுகமடைகின்றனராம். இது அழுக்காயும் அந்திக்கிறிஸ்துவாயும் இருக்கிறது. பாருங்கள். இது சாத்தான் நடத்தும் போலி கூட்டம். பாருங்கள்? சாத்தானால் கிறிஸ்து செய்த எதையும் செய்யக்கூடும், ஆனால் அவனால் வார்த்தையை உறுதிப்படுத்த முடியாது. பாருங்கள்? அவன் இங்கு ஒரு பாகத்தையும் அங்கு ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான், ஆனால் அவனால் முழுவதுமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவனால் மொத்தமாக எடுத்துக்கொள்ள முடியாது. பாருங்கள்? எனவே, பாருங்கள், அந்திக்கிறிஸ்துவின் ஆவி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும் என்று வேதம் உரைத்துள்ளதில் வியப்பொன்றுமில்லை. அவர்களுடைய சொந்த செய்தித்துறை மேலாளர், பத்திரிகை ஏஜெண்டு, அவர்கள் சார்பில்இருந்து கொண்டு, அவர்களை விசுவாசித்து, அவரும் அதே காரியத்தை மனதில் கொண்டவராயிருப்பதாக கூறுகிறார், ஏனெனில் அவர்கள் அவரை கவர்ந்து விட்டனர். 6அந்த பொல்லாத காரியங்கள்... இப்பொழுது, உங்களால் காணமுடியவில்லையா, பெண்களே. நான் ஏன் உங்களிடம் குட்டை கால்சட்டை அணிதல், தலைமயிரைக் கத்தரித்தல், தலை மயிரை 'பாப்' செய்து கொள்ளுதல் (bobbing) ஆகியவைகளைக் குறித்து கூறுகிறேன் என்றால், அது ஒரு ஆவி! சபையில் ராக் அண்டு ரோலைக் குறித்தும் இன்னும் மற்றவைகளைக் குறித்தும் நமது தலை சிறந்த பத்திரிகைகளில் காணப்படுகிறது. ஏன். அது சாத்தானுக்கு ஒரு நல்ல அமைப்பு, அவை இன்னும் சபைகளாகவும் ஸ்தாபனங்களாகவும் உள்ளன. பிள்ளைகளே, உங்களால் இயன்றவரை வார்த்தைக்கு விரைவாக திரும்புங்கள்; அதை விட்டுவிலகத் துணிச்சல் கொள்ளாதீர்கள். அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள். பாருங்கள், எவ்வாறு அந்த அந்திக்கிஸ்துவின் ஆவி, அது அந்நிய பாஷையில் பேசும், அது அடையாளங்களையும் அற்புதங் களையும் காண்பிக்கும்; அது வியாதியஸ்தரை சொஸ்தமாக்கும்; அது இவையனைத்தையும் செய்யும். பாருங்கள்? இந்த மக்கள் தேவனை அணுகுவதாகவும், இந்தப் பையன்கள் தேவனால் அனுப்பப்பட்டவர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் சபையானது வார்த்தையை விட்டு விலகி விட்டது. இந்தப் பையன்கள் ஒரு சபையைச் சேர்ந்தவர்களே. எல்விஸ் பிரஸ்லி ஒரு பெந்தெகொஸ்தேகாரர். பாட்பூன் கிறிஸ்து சபையைச் சேர்ந்தவர். இந்த ஆசாமிகளைப் பாருங்கள், பெந்தெகொஸ்தேயினர், கிறிஸ்து சபையினர், இத்தகைய இவ்வனைவரும் தங்கள் மேல் பொல்லாத ஆவிகளைக் கொண்டுள்ளனர். ரெட்ஃபோலி, மிகவும் கணீரான குரல், கிறிஸ்து சபையைச் சேர்ந்தவர், யாரும் பாட முடியாத அளவுக்கு பக்தி பாடல்களை அருமையாகப் பாடுபவர், ஆனால் அதே குரலை உபயோகித்து அவர் 'ராக் அண்டு ரோல் பாடல்களைப் பாடுகிறார். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். அவர்கள் எந்த சபைகளில் சேர்ந்துள்ளனர் என்பதைப் பாருங்கள். எல்விஸ் பிரஸ்லி அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை சேர்ந்தவர். பார்த்தீர்களா, அவர்கள் ஒவ்வொருவரும் அதை விரும்பினர், சாத்தான் அதை அவர்களுக்குக் கொடுத்தான். உங்களால் காண முடியவில்லையா, நண்பர்களே, எப்படி... அந்த வார்த்தையை தளர விட்டுவிடாதீர்கள். பாருங்கள், அது உங்களைப் பிடிக்கும் ஒரு ஆவி. 7இந்த ஸ்திரீகள் இந்த உடைகளை அணிந்து கொண்டு தங்களை கவர்ச்சியுடையவர்களாக காண்பிக்கும்போது, அவர்கள் விபச்சாரம் செய்ததற்காக தேவனுக்கு பதில் சொல்லியாக வேண்டுமென்று நான் அவர்களிடம் கூறுகிறேன். நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன். தீர்க்கதரிசி என்று அழைப்பதை விசுவாசிப்பீர்களானால், நான் உங்களிடம் கூறுவதற்கு செவிகொடுங்கள். பாருங்கள்? ஒருக்கால் உங்களால் அதை புரிந்துகொள்ள இயலாதிருக்கலாம். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் சொல்வதைச் செய்யுங்கள். நான் கூறுவதற்கு தேவன் என்னை பொறுப்பாளியாக்குவார். பாருங்கள்? நீங்கள் கூர்ந்து கேளுங்கள், அவை ஆவியென்பதை நினைவில் கொள்ளுங்கள். சாதாரணமாக, ஒருக்கால் அந்த நபர்.... அண்மையில் நான் சருமத்தினால் மூடப்பட்ட தேவன் என்னும் தலைப்பில் பிரசங்கித்தது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா, (பாருங்கள், பாருங்கள்?)- தம் மேல் சுருமத்தைக் கொண்டுள்ள தேவன்? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நம்மில் சிலர் அந்த ஆதிக்கங்களுக்குள் சென்று இவைகளை எடுத்துரைக்க இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாருங்கள்? அது முன்னறிவு : அது தேவன் பேசுதல், காண்பித்தல். நீங்கள் ஏதாவதொன்றை மாம்சத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறுவீர்களானால், அவர்கள் குற்றமற்றவர்கள் (இங்கு பாருங்கள்), அருமையானவர்கள், நேர்மையுள்ளவர்கள், உங்களிடம் ஒரு பொய் கூட சொல்லமாட்டார்கள். ஆனால் முழு காரியமே பிசாசாயுள்ளது. மார்க்க வைராக்கியம் கொண்டவர்கள், சுகமளிக்கும் கூட்டம் ஒன்றையும் கூட துவங்குவார்கள். பாருங்கள்? ஆனால் அது முற்றிலும் அந்திக்கிறிஸ்துவாய் உள்ளது. பாருங்கள்? அந்த பிரஸ்பிடேரியனும் அவையனைத்தும். அந்த ஸ்தாபனங்களும் அதே காரியத்தைச் செய்வதைப் பார்த்தீர்களா? 8ஏன், அண்மையில் இங்கிலாந்து தேசத்தில் உள்ள லண்டனில் ஒரு 'ராக் அண்டு ரோல்' குழு கிறிஸ்துவையும், யூதாஸையும் மற்றவர்களையும் பாவனை செய்து நடித்துக் காண்பித்தது. அவர்கள் கிறிஸ்துவை “டாடி - ஓ ” என்று அழைத்து, அந்த வெறிபிடித்த பையன்கள் பேசும் எல்லாவிதமான சொற்களையும் பேசினர். பாருங்கள்? அந்த இளைஞர்கள் உலகத்தை ஆட்கொண்டுவிட்டனர். வேதம் அதை முன்னுரைத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். நன்றியறியாதவர்கள், பரிசுத்தமில்லாதவர்கள், சுபாவ அன்பில்லாதவர்கள், இணங்காதவர்கள். தாய் தகப்பன்மார்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் (பாருங்கள்?) (2தீமோ. 3:2-5). இளைஞர் உலகத்தை ஆட்கொள்ளுதல். அவர்கள் அதைச் செய்து விட்டனர். அன்றொரு நாள் நான் ஒரு இடத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே அவர்கள் அந்த அசுத்தமான 'ஜூக்பாக்ஸில் (juke box) கிராமபோன் தட்டுகளைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர் என் குடும்பத்தை அங்கு கொண்டு செல்ல எனக்கு விருப்பமில்லை. அங்கிருந்த பெண்ணிடம் நான், “ஒருகிராம போன் தட்டு போட்டுக் கேட்க எவ்வளவு காசு அதில் போட வேண்டும்?” என்று கேட்டேன். “ஒன்றுக்கு பத்து சென்டுகள்” என்றாள். “ஒரு மணிநேரத்துக்கு எவ்வளவு தட்டுகள் கேட்கலாம்?” என்றேன். அவள் பதில் சொன்னாள். நான் “இதோ பணம். அதை எடுத்துக்கொண்டு மின்சாரப் 'பிளக்' கை கழற்றி விடு” என்றேன். அவள், “என்னால் முடியாது. கிராமபோன் தட்டுகளைப் போட்டுக் பேட்க அந்த இளைஞர் வருகின்றனர்” என்றாள். அங்கு நான் பணத்தை செலவழிக்க முடியவில்லை; நான் வேறோரிடத்துக்குச் சென்றேன். பாருங்கள்? அந்த கிராம போன் இசை உங்களுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். அதைக் கேட்ட பிறகு, நீங்கள் சென்று, நரம்பை அமைதிப்படுத்தும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டிவரும். அது கிறிஸ்தவனுக்கு வெறுப்பூட்டுகின்றது. அப்படிப்பட்ட இசை உங்களுக்கு பிடிக்குமானால், உங்களில் என்ன தவறென்று உங்களுக்குத் தெரியுமா?நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும், ஏனெனில் உங்களில் உள்ளது வார்த்தையைத் தவிர வேறெதோ ஒன்றைக் கொண்டு போஷிக்கப்பட்டு வருகிறது. இயேசு அப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பார் என்று உங்களால் நினைத்தும் கூட பார்க்க முடிகிறதா? தீர்க்கதரிசிகளில் ஒருவன் அவ்விதம் செய்திருப்பான் என்று உங்களால் நினைத்தும் கூட பார்க்க முடிகிறதா? நண்பர்களே, எங்கு பார்த்தாலும் இந்த காரியம் பிசாசினால் உண்டானதென்று உங்களால் காணமுடியவில்லையா? அவன் எவ்விதம் மார்க்கவேஷத்தை தரித்துக்கொண்டு, கிறிஸ்துவைப் போல் செய்வான் என்று வேதம் உரைக்கிறது. பாருங்கள்? ஆனால் அதை நீங்கள் கண்டுகொள்ளக் கூடிய ஒரே வழி, இந்த சபையை, அந்த சபையை சேர்ந்து கொள்வதனால் அல்ல, ஆனால் வார்த்தையில் நிலைத்திருப்பதன் மூலமாகவே; அவரே வார்த்தையாயிருக்கிறார். 9இப்பொழுது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக. நாம் நேரடியாக கேள்விகளுக்குச் செல்லப் போகின்றோம். இப்பொழுது ஏறக்குறைய ஒரு மணி பதினைந்து நிமிடங்களுக்கு... இந்த கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்லி முடிக்க முடியாது. இவை குவியலாக இங்குள்ளன. அவை நல்ல கேள்விகள் என்பது என் கருத்து. அவை மிகவும் அருமையானவை நான் குனிந்து இவைகளை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து.. அவைகளுக்கு பதிலுரைப்பேன். யாராகிலும் இங்கு வந்து கேள்விகளைப் பொறுக்கி எடுத்து படித்தால், நான் அவைகளுக்கு “ஆம்”, “இல்லை” என்று பதில் சொல்லி விடலாமென்று எண்ணினேன். ஆனால் அது ஜனங்களுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. அவைகளுக்கு பதில் உரைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இந்த கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர். நான் அவ்விதம் செய்யமாட்டேன். என்னால் முடிந்த வரை , கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்; என்னால் பதிலளிக்க இயலாத கேள்விகளுக்கு அடுத்த முறை பதிலளிப்பேன் இப்பொழுது நான் .... அடுத்த ஞாயிறு, எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரிவிக்கிறேன்; இப்பொழுதிலிருந்து புதன் கிழமைக்குள் நீங்கள் பில்லியுடன் தொடர்பு கொண்டால்.. நாங்கள் ஒருக்கால் புறப்பட்டுச் செல்ல வேண்டியதாயிருக்கும். 10இப்பொழுது, ஒரு காரியம். நான் முடிக்க வேண்டிய பேட்டிகள் நிறைய உண்டு. பில்லி இன்னும் இவ்வளவு உயரமுள்ள பேட்டிகளின் குவியலை எனக்குக் காண்பித்தான், இவைகள் காத்திருக்கின்றன. சில பேட்டிகள் மாதக்கணக்காக காத்திருக்கின்றன. நல்லது, இங்கு நான் உள்ள போது, அவைகளில் சிலவற்றை முடிக்க வேண்டும், சில கூட்டங்களுக்கு செல்லவேண்டும். இவைகளைச் சமநிலைப்படுத்த நான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இவ்வாரம் நான் வெளியே சென்றிருக்கும் போது, நான் ஆண்டவரிடம், “நான் என்ன செய்ய வேண்டும், இவைகளை முடிக்க வேண்டுமா, அல்லது பேட்டிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்று ஜெபித்துக் கேட்கப் போகிறேன். நான் பேட்டிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நான் ஞாயிறன்று வீடு திரும்பி, நாள் முழுவதும் எங்காவது போட்டிகளை நடத்திக் கொண்டே செல்ல வேண்டும். இல்லாவிடில் நான் திரும்பி வரும் வரைக்கும் பேட்டிகளை தள்ளிப்போட்டு விட வேண்டும். நான் பேட்டிகளை நடத்தவில்லையென்றால், கேள்விகளுக்கு பதிலுரைப்பேன்... நான்... பில்லி உங்களுக்கு கடிதம் அனுப்பித் தெரிவிப்பான். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; இந்த அருமையான வாலிபப் பிள்ளைகள் ஒருவரையொருவர் எவ்வாறு நேசிக்கின்றனர், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பைக் குறித்து உங்களிடம் கூறுவது மிகவும் நன்றாயுள்ளது. ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கிறார். இந்த மற்றவர் மற்றவருக்கு... பில்லி நூற்றைம்பது மைல் தூரத்திலுள்ள பகுதியிலுள்ள ஒருவரை தொலைபேசியில் அழைத்து அறிவிக்கிறான், உடனே மற்றவர்களுக்கு அது அறிவிக்கப்படுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். அவர்கள் எதையும் இழக்க விரும்பவில்லை. இங்கு என்ன நடக்கிறதென்று காண, அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் இங்கிருக்க விரும்புகின்றனர்; கர்த்தர் ஏதாவதொன்றை அளிப்பாரானால், அதைப் பெற்றுக்கொள்ள அவர்கள் இங்கிருக்க விரும்புகின்றனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். 11இப்பொழுது. ஞாபகம் கொள்ளுங்கள், அருமை நண்பர்களே . இந்த கேள்விகள் சிலவற்றின் பேரில் இன்று காலையில் நான் ஒரு அறிக்கை விடுத்தேன். இன்று காலையில் நாம் பார்த்த சில கேள்விகள் (ஆம்!) பெரும்பாலும் ஜனங்கள் அரிசோனாவில் குடியேறுவதைக் குறித்தவை என்பதை நான் கவனித்தேன். பாருங்கள்? நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, அதை தெளிவுபடுத்துவது நலமென்று எண்ணினேன். ஜனங்கள் எங்கு தங்க வேண்டும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்கு சொல்ல முயல்கிறேன் என்று எண்ண வேண்டாம். இதை நான் கூற முற்படுகிறேன், என் அன்பார்ந்த சகோதரனே. அரிசோனாவுக்கு குடியேற வேண்டும் என்று நினைக்கும் உத்தமமான மக்கள் உள்ளனர். யாருக்காவது அங்கு குடியேற விருப்பமானால், அங்கு நான் உள்ளவரைக்கும், அதைக் குறித்து நான் மகிழ்ச்சி கொள்வேன் என்பது உறுதியாகும்... நான் அங்குள்ளதைவிட பத்து மடங்கு அதிகமாக இங்கிருக்கிறேன். எனக்கு.... இப்போதைக்கும் கிறிஸ்துமஸுக்கும் இடையே உள்ள காலத்தில், நான் நான்கு நாட்கள் அங்கிருப்பேன். அதன் பிறகு நான் உடனே வெளிநாடுகளுக்குச் செல்கிறேன். எழுப்புதல் கூட்டங்களுக்காக நான் வெளிநாடு செல்வதற்கு முன்பாக - இந்த வசந்த காலத்தில் நான் அதை மேற்கொள்வது வழக்கம்- இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நான் இந்த கூடாரத்தில் இருப்பேன். அங்கிருந்து அரிசோனா முழுவதிலும் எனக்கு ஒரு கூட்டம் மட்டுமே உண்டு. அது ஜனவரி மாதத்தில் பீனிக்ஸ் கிறிஸ்தவ வர்த்தகருடன் இரண்டு இரவுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் அங்கு அதிகமாக பிரசங்கிப்பதில்லை.... அங்குள்ள ஜனங்கள் மட்டும்... அந்த ஒலிநாடாவை பதிவுசெய்வதை நிறுத்தி விடுவீர்களா? (சகோ . பிரான்ஹாம் ஒலிநாடாவைப் பதிவு செய்யும் கருவியை நிறுத்திவிடக் கூறிவிட்டு, சபையோரிடம் பேசுகின்றார் - ஆசி) 12இப்பொழுது, இன்றிரவு இக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் துவங்குகையில், நான் இங்குள்ள கேள்விகளில் ஒன்றை எடுத்து ... நீங்கள் இவைகளை அனுபவித்து மகிழ்கின்றீர்களா? அப்படியானால் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). இந்த நேரத்தில் அது நமக்கு இலாபமானதென்று எண்ணுகிறேன். ஒ, நான் நம்புகிறேன், விரைவில்.... இங்கு வருவதற்கு முன்பாக இன்று காலையில் நான் வேதத்திலுள்ள சில வசனங்களையும், சில இடங்களையும் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் நினைத்துக் கொண்டேன், “ஓ, அது எவ்வளவு அற்புதமாக இருக்கும்... கர்த்தருடைய வருகைக்காக நாம் காத்திருக்கையில், பழைய ஏற்பாட்டிலுள்ள மக்களை நாம் எடுத்துக் கொண்டு - யோபுவையும் மற்றவர்களையும் - அவர்களைக் குறித்து தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தினால், அது எவ்வளவு அற்புதமாக இருக்குமென்று நினைத்துக் கொண்டேன் (அது அற்புதமாயிருக்கும் அல்லவா), அது இந்நாளுக்கு எவ்வாறு முன்னடையாளமாயுள்ளது என்பதை உங்களுக்குக் காண்பிக்க (வார்த்தை முழுவதும் ஒன்றோடொன்று இணைகிறது), பண்டைய காலத்தில் ஏற்பட்ட அழிவுகள் அனைத்தையும் குறித்தும், அவை எவ்வாறு இந்நாளுக்கு முன்னடையாளங்களாக உள்ளன என்பதைக் குறித்தும்; எவ்வாறு பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லாமே கர்த்தராகிய இயேசுவின் வருகையைக் குறிக்கின்றன என்பதைக் குறித்தும். 13கேள்வி: இப்பொழுது, இக்குவியலிலிருந்து நான் கையிலெடுத்த முதலாம் கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஒரு கிறிஸ்தவள் தன் தலைமயிரைச் சுருள வைக்கும் 'பின்'களை (pincurls) போட்டுக் கொள்வது தவறா? மேலும், அவளுடைய உடையின்கைகள் (sleeves) எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்? நன்றி. ஒரு சகோதரி. இது அந்த ஸ்திரீக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இங்குள்ள சகோதரராகிய நம்மில் சிலர், “ஓ, முட்டாள் ஸ்திரீ” என்று நினைக்கக் கூடும். ஆனால் அவளுக்கு அது முட்டாள் தனமாகத் தோன்றவில்லை. அவள் அறிய விரும்புகிறாள். இப்பொழுது தலைமயிரை, அது என்ன, பன்றிவாலைப் போல் (pig tails) சுருள வைத்துக் கொள்வது. நான் வருந்துகிறேன். நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை.... அது... நான் வருந்துகிறேன். தலைமயிரைச் சுருள வைக்கும் 'பின்'களை போட்டுக்கொள்வது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். பின் 'செட்டு'கள் - பன்றிவால். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவ்விதம்தான் பெண்கள் தங்கள் தலை மயிரில் அணிந்து கொள்வது வழக்கம். உங்களுக்கு ஞாபகமுள்ளதா, ஒருவிதமான... அது சரிதானே? அவர்கள் அதை 'பன்றிவால்' (pigtails) என்று அழைப்பதுண்டு. மயிர் சுருள்கள் கீழே தொங்கிக் கொண்டிருக்கும். இல்லை, 'பின்' சுருள்கள், என்னை மன்னித்துக் கொள், சிநேகிதியே. “உடையின் கைகளை எவ்வளவு நீளமாக அவள் அணிந்து கொள்ள வேண்டும்?” இப்பொழுது, அதைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. பார்? வேதத்தை நான் ஆதாரமாகக் காண்பிக்க முடியாத எதைக் குறித்தும் நான் அதிகம் பேச விரும்பவில்லை. 14இப்பொழுது, இதை நான் என் கருத்திற்கேற்ப உன்னிடம் கூறுகிறேன். ஏனெனில் இதற்கு ஆதாரம் காட்ட எனக்கு வேதத்தில் ஒன்றுமேயில்லை. தலைமயிரைக் குறித்து நான் ஸ்திரீகளுக்கு வேதத்திலிருந்து எடுத்துக்காட்டக் கூடிய ஒன்றே ஒன்று, அவர்கள் அதைக்கத்தரிக்கக் கூடாது என்பதே. அவர்கள் தலைமயிரை எவ்விதம் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களைப் பொறுத்தது. தலைமயிரைச் சுருள் வைக்கும் 'பின்'களைக் குறித்து, உண்மையில், அவை என்னவென்று எனக்குத் தெரியாது. துணிகள் பறந்து போகாமலிருக்க போடும் 'கிளிப்புகளைப்' போல் காணப்படுபவைகளை அவர்கள் தலையில் போட்டுக் கொள்கிறார்களே, அதுவாக இருந்தாலன்றி. நான்... எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று... உடைகளின் கைகளின் நீளம், நீ கிறிஸ்தவளாயிருப்பதால், அவையெல்லாவற்றையும் குறித்து தேவன் உன்னிடம் கூறுவாரென்று நினைக்கிறேன். பார்? ஒரு கிறிஸ்தவள் என்ற முறையில், அந்த விஷயத்தில் நீ என்ன செய்ய வேண்டுமென்று உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன். தேவன் ஒரு குறிப்பிட்ட நீளத்தை நிர்ணயிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நீ நாணயமுள்ளவளாயும், மதிக்கத்தக்கவளாகவும், சுத்தமாகவும் காட்சியளித்தால், அது சரியென்று நினைக்கிறேன். இல்லையா? பார்? இது என் கருத்து, இது நான் கூறுவது, ஏனெனில்,அதை வேத வசனங்களினால் ஆதாரம் காண்பிக்க என்னால் இயலவில்லை. 15தலைமயிருக்கு நிறச்சாயம் பூசிக் கொள்வதைக் குறித்த ஒரு கேள்வி இன்று காலையில் எழுந்தது என்று எண்ணுகிறேன். அதைக் குறித்தும் என்னால் ஒன்றும் கூற இயலாது. எனக்குத் தெரியாது. உங்கள் தலைமயிருக்கு நிறச் சாயம் பூசிக் கொள்ளக் கூடாது என்று கூறும் வேதவசனத்தை எனக்கு காண்பிக்க இயலாது. இப்பொழுது, அது.... ஸ்திரீகளாகிய நீங்கள் காண்பதற்கு அழகாயிருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் காண்பதற்கு அழகாயிருக்க வேண்டும். சகோ. பிரான்ஹாம், பிள்ளைகளாகிய உங்களுக்கு விரோதமாயில்லை. நீங்கள் என் பிள்ளைகள்; உங்களை நான் நேசிக்கிறேன், உங்களை நோக்கி கூச்சலிட நான் விரும்பவில்லை. நான் காரணமில்லாமல் அவ்விதம் செய்வதில்லை. உங்களுக்கு நான் உதவிசெய்யவே முயல்கிறேன். இப்பொழுது பாருங்கள், உங்களைக் கேட்கிறேன்.... அந்த கேள்விக்கு விடையாக இதை நான் கூறுகிறேன். நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகும் சகோதரிகளே, இதோ அது. அதைக் குறித்து ஒரு கேள்வி எழுமானால், அதைச் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியினால் நிறைந்து, அதைச் செய்ய வேண்டுமென்று மனதில் எண்ணம் கொண்டால், அது வேதம் கூறுவதில் தலையிடாமல். எந்த கேள்வியையும் எழுப்பாமல், அது கர்த்தருடைய சித்தமென்று நீங்கள் பூரண திருப்தியடைவீர்களானால், அதைச் செய்யுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் அதைச் செய்யக்கூடாதென்று எந்த வேதவசனமும் கூறவில்லை. 16ஏசாயா 5ம் அதிகாரம். அந்த அதிகாரம் தான் என்று நினைக்கிறேன், ஸ்திரீகளைக் குறித்தும் அவர்கள் எவ்விதம் மாற்று உடைகளை அணிவார்கள் என்றும் உரைக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனால் அது பெருமையும், பெரிதாகக் காண்பித்துக் கொள்வதுமாயிருக்கிறது. அதை நீங்கள் பெருமைக்காகச் செய்வீர்களானால், அது தவறு. பாருங்கள்? தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை சோதித்துப் பாருங்கள். அதைச் செய்யக் கூடாது என்ற வேதவாக்கியம் இல்லாமலிருந்து ஆவியானவர் உங்களை நடத்துவாரானால், நீங்கள் அதைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் தலைமயிர் நீளமாயிருக்க வேண்டுமா அல்லது குட்டையாயிருக்கலாமா என்னும் விஷயத்தில் நீங்கள் நீண்ட தலைமயிரை உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படித்தான் வேதம் கூறுகிறது. இங்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு இப்பொழுதே பதில் சொல்லி விடுகிறேன். அது இங்குள்ளது. அதை இன்று காலையில் அல்லது வேறு எப்பொழுதோ கண்டேன். “நீங்கள் எப்பொழுதுமே ஸ்திரீகளைக் குறித்து அவர்கள் எவ்விதம் தங்கள் தலைமயிரை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆனால் ஆண்களைக் குறித்து நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை என்று அக்கேள்வியில் எழுதப்பட்டுள்ளது. 17ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயைப் போல் நீண்ட தலைமயிர் தன் முதுகில் தொங்கிக் கொண்டு இங்கு வருகிறதை நான் கண்டால், நான், “மிஸ்டர், நீர் ஏன் அம்பட்டன் கடைக்குச் செல்லக்கூடாது? நீர் ஒரு பெண்ணைப் போல் காட்சியளிக்கிறீர்” என்பேன். பாருங்கள்?ஆனால் மனிதர் சாதாரணமாக அவ்விதம் செய்வதில்லை. பாருங்கள்? மனிதர்... மனிதர் பிழையற்றவர் என்று நான் கூற வரவில்லை, அவர்கள் ஸ்திரீகளைப் போலவே குற்றமுள்ளவர்கள். இதைக் கூற முற்படுகிறேன். அவ்விதம் செய்யத் தன் மனைவியை அனுமதிக்கும் ஒரு மனிதன் இரட்டிப்பாக குற்றமுள்ளவனாயிருக்கிறான். ஏனெனில் வீட்டார் அவன் சொற்படிதான் நடக்க வேண்டும். அந்த மனிதனுக்கு அவனுடைய சொந்தவீட்டாரின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனால், அவன் எவ்விதம் அதை தேவனுடைய வீட்டில் செய்ய முடியும்? பாருங்கள்? இங்கு வருகை தருகின்ற நமது ஸ்திரீகளின் கூட்டத்தைக் குறித்து நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இதை நான் மரியாதையோடும் அன்போடும் கூறுகிறேன். இது உண்மையென்று தேவன் அறிவார். தென் பகுதியில் எனக்கு ஒரு போதகர் நண்பர் இருந்தார். நான் அதுவரை கண்டிராத அவ்வளவு சுத்தமாகக் காணப்படும் சபைகளில் ஒன்றை அவர் கொண்டிருந்தார். ஸ்திரீகளைக் குறித்து பேசுகையில், மிகவும் அழகான பெண்கள் அங்கு வந்து பரிசுத்தமுள்ளவர்களாய், தேவபக்தியுள்ளவர்களாய், நீண்ட தலைமயிரை உடையவர்களாய் உட்காருவார்கள். அந்த சபைக்கு சென்று அவர்களைக் கண்டு பேரானந்தமடைய நான் விரும்பின்துண்டு. ஆனால் இன்றைக்கு அவர்களையும் மங்கச் செய்யும் ஸ்திரீகளைக் கொண்ட ஒரு சபையை கர்த்தராகிய இயேசு எனக்கு அருளியிருக்கிறார். நான் நீசத்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களைக் கடிந்து கொள்வதில்லை. உங்களைக்குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். சாத்தான் எங்காவது காலடி எடுத்து வைக்க எனக்கு பிரியமில்லை. நீங்கள் மேல் நோக்கிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன், பின் நோக்கி அல்ல. எந்த ஒரு மனிதனும் நயமான சொற்களினால் உங்களை வஞ்சிக்க இடம்கொடாதீர்கள். “ஓ, நல்லது. அதுவல்ல...'' என்று யாராகிலும் கூற அனுமதிக்காதீர்கள். பாருங்கள்? அப்படித்தான் சாத்தான் ஏவாளுக்கு வார்த்தையை வியாக்கியானித்துக் கொடுத்தான் பாருங்கள்? வார்த்தை என்ன உரைக்கிறதோ, அதை அப்படியே விசுவாசியுங்கள். சரி. 18கேள்வி: மிகவும் அவசரம், சகோ. பிரான்ஹாமே, காலம் முடிவடைந்து நித்தியம் துவங்குகிறது என்று அறிந்திருப்பதனால், விவாகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஒரு தம்பதிகளுக்கு உங்கள் ஆலோசனை என்ன? நீங்கள் முன் சென்று விவாகம் செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் இன்னும் நூறாண்டுகள் இவ்வுலகில் வாழப் போகின்றீர்கள் என்பது போல் அதை சென்று நிறைவேற்றுங்கள். உங்கள் இருதயத்தை கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள், இவ்வுலகக் காரியங்களின் மேல் உங்கள் இருதயங்களை வைக்காதீர்கள். கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள். பாருங்கள்? நீங்கள் சென்று. விவாகம் செய்து, பிள்ளைகளைப் பெறுங்கள். தேவன் உங்கள் விவாகத்தில் உங்களை ஆசீர்வதிப்பாராக. 19கேள்வி: அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, நான் இயேசுவின்'' நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன். அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று வார்த்தை உரைக்கிறது. 'அது பரிசுத்த ஆவியின்அபிஷேகத்தைக் குறிக்கிறதா, அல்லது அந்த அபிஷேகத்துடன் நான் ஒரு நிச்சயமான அனுபவத்தைப் பெற வேண்டும் என்பது அதன் அர்த்தமா? நான் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட வேண்டுமென்று மிகவும் விசாரமுள்ளவனாயிருக்கிறேன். இந்த நீண்ட குறிப்புக்காக என்னை மன்னிக்கவும், இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் நீண்டகாலமாய் காத்திருக்கிறேன். நன்றி. அந்த நபர் தன் பெயரைக் கையொப்பமிட்டுள்ளார். அவர்கள் இந்த நகருக்கு வெளியே வாழ்பவர்கள். இப்பொழுது, அது நல்ல கேள்வி. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஒரு நபர் பெறவேண்டிய திட்டவட்டமான அனுபவமாகும். இதை நான் ஒரு நிமிடம் தெளிவாக்கட்டும். பாருங்கள்? அநேகர் கொண்டிருக்கும் கருத்து என்னவெனில்.... அது திரிக்கப்பட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். இங்குள்ள இந்த சபைக்கும். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சபைக்கும் ஒருக்கால் ஒரு கேள்வி இருக்கக் கூடும். அந்நிய பாஷைகளில்பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் தொடக்க அடையாளம் என்பதை நான் விசுவாசிப்பதில்லை என்று நான் குறிப்பிடும் போது (அதை நான் ஏற்றுக் கொள்வதில்லை),தேவனுடைய உதவியைக் கொண்டு அது தவறென்று வேதவாயிலாக என்னால் நிரூபிக்க முடியுமென்று நான் நம்புகிறேன் (பாருங்கள்?), ஏனெனில் அந்நிய பாஷைகள் பேசுவது பரிசுத்த ஆவியின் ஒரு வரமாகும். எத்தனை பேருக்கு அது தெரியும்? தெய்வீக சுகமளித்தலும், பரிசுத்த ஆவியின் ஒரு வரமே. இப்பொழுது 'பீட்டில்ஸ்' (Beatles) அதை செய்கின்றனர். பாருங்கள்? இந்த வரங்களில் எந்த ஒன்றையும் பிசாசினால் பாவனை செய்யமுடியும். ஆண், பெண் மந்திரவாதிகள் அந்நிய பாஷைகள் பேசி அவைகளுக்கு அர்த்தம் உரைக்க முடியும். காட்டுப் பிரதேசங்களில், அநேக முறை ஒரு மந்திரவாதி அந்நிய பாஷைகள் பேசி, மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்து, அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைக்கிறான். 20அரிசோனாவில் அவர்கள் தானிய நடனம் (Corn dance) என்னும் அந்த பழைய கொண்டாட்ட நடனத்தைச் செய்யும் போது. இந்தியர்கள் தங்கள் தானிய விளைச்சலுக்காக மழையை அனுப்ப தெய்வத்தினிடம் வேண்டிக் கொள்ளும்போது, அவர்கள் பெரிய பாம்புகளை தங்கள் மீது சுற்றிக் கொள்கின்றனர். அவர்கள் அதை 'தானிய நடனம் என்றழைக்கின்றனர். அவர்கள் தானியத்தின் மகரந்தக் குஞ்சத்தை எடுத்து, அவர்கள் மேல் அதை வைத்து, ஒரு மேகத்தின் உருவை உண்டாக்கிக் கொண்டு நடனமாடுகின்றனர். மந்திரவாதி வைத்தியன் தன் தலையில் கொம்புகளை, எறுமை கொம்புகளைச் சூடிக் கொண்டு வருகிறான். அவர்கள் இந்த பெரியபாம்புகளை தங்கள் மேல் சுற்றிக் கொண்டு நடனமாடுகின்றனர். அந்த இடத்தில் மந்திரவாதிகளும் புகை குழாயை உபயோகித்து புகை பிடிப்பவர்களும் மற்றவர்களும் உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் ஒரு வெள்ளையனையும் அங்கு அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நான் 'இரு கண் தூரப் பார்வை கண்ணாடியின் (binoculars) மூலம் அவர்களைப் பார்த்திருக்கிறேன், மட்டுமல்ல அத்தகைய நடனத்தில் கலந்து கொண்ட இந்திய நண்பர்கள் எனக்குள்ளனர். அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்த தானிய நடனத்தை அவர்கள் பாம்புகளைச் சுற்றிக் கொண்டு ஆடுகின்றனர். மந்திரவாதி அங்கு வந்து தன்னை கத்திகளால் கீறிக் கொண்டு எல்லாவற்றையும் செய்கிறான். முடிவில் அவர்கள் ஆவிக்குள்ளாகி, அந்நிய பாஷைகள் பேசி, அதற்கு அர்த்தம் உரைக்கின்றனர். இங்கிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேர பயணத்தில் உங்களை நான் ஓரிடத்துக்கு கொண்டு செல்ல முடியும். அங்கே அசுத்த ஆவியினால் இயக்கப்படுகின்ற ஒருவன் (medium)ஒரு பென்சிலை மேசையின் மேல் வைத்து, நிஷ்டையில் ஆழ்ந்து, தன் கைகளை ஆட்டுகிறான். அப்பொழுது அந்த பென்சில் நேராக நின்று, அந்நிய பாஷையில் எழுதுகிறது. அந்த மந்திரவாதி எழுந்து நின்று அது என்ன சொல்லுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துரைப்பான். 21இப்பொழுது, அது பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல. பாருங்கள்? அதை நீங்கள் நம்பமுடியாது. ஆவியின் கனியையும் நீங்கள் நம்ப முடியாது. ஏனெனில் ஆவியின் முதற்கனி அன்பு, 'கிறிஸ்தவ விஞ்ஞானிகள்' என்று அழைக்கப்படுகிறவர்கள் எனக்குத் தெரிந்தவரையில், மற்றெல்லாரைக் காட்டிலும் அதிக அன்பு செலுத்துகின்றனர், ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கின்றனர். பாருங்கள்? என்னைப் பொறுத்தவரையில், பரிசுத்த ஆவியின் ஓரே அத்தாட்சி இந்நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையில் உண்மையான விசுவாசம் கொண்டிருத்தலே! இப்பொழுது, அந்த யூதர்கள் வருகின்றனர்; அவர்களுக்கு சீஷர்களைக் காட்டிலும் அதிக மதப்பற்று இருந்தது. அவர்கள் சீஷர்களைக் காட்டிலும் வேதத்தில் அதிகம் பயிற்சிப்பெற்ற மக்களாயிருந்தனர், ஏனெனில் சீஷர்கள் மீன் பிடிக்கிறவர்களும், சுங்க வரிவசூலிப்பவர்களும், இத்தகைய தொழில்களைச் செய்தவர்களாயிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளில் உண்மையான விசுவாசம் இருந்தது. இப்பொழுது, இதைக் கூர்ந்து கவனியுங்கள்; இதைக் காணத்தவறாதீர்கள். பாருங்கள்? தயவு, சாந்தம் என்பது போன்ற ஆவியின் கனிகளைப் பெற்றிருக்கும் விஷயத்தில் இயேசு கிறிஸ்துவை விட அதிகம் பிரகாசிக்காதவர்கள் அந்த ஆசாரியர்களில் ஒருவரும் கூட இல்லையென்று நினைக்கிறேன். இயேசு தேவாலயத்துக்கு பின்னின கயிறுடன் சென்று, அவர்களைக் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய மேசைகளைக் கவிழ்த்துப் போட்டு. அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியே துரத்தினார். அது சரியா? அவர் அவர்களைக் கோபத்துடன் பார்த்ததாக வேதம் உரைக்கிறது. வேதம் அவ்வாறு உரைக்கிறது அது முற்றிலும் உண்மை. 22எனவே பாருங்கள், அந்த ஆசாரியர்கள் தயவுள்ளவர்களாகவும், சாந்தகுணமுள்ளவர்களாகவும், மக்களைப் புரிந்து கொள்ளுகிறவர்களாகவும் இருந்தனர். ஆவியின் கனிகளைப் பெற்றிருக்கும் விஷயத்தில் இயேசுவைக் காட்டிலும் அதிக கனிகளை அவர்களால் காண்பிக்க முடிந்தது. வேதசாஸ்திரம் பயிலும் விஷயத்திலும், அவர் எந்த வேதசாஸ்திரப் பள்ளியிலிருந்து வந்தாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. “இந்த மனிதன் எங்கிருந்து வந்தான்? அவனுக்கு எந்த ஐக்கியச் சீட்டு உள்ளது? அவன் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன்? அவன் எங்கிருந்து வந்தான் என்று எங்களுக்குத் தெரியாது. அவன் முறை தவறிப்பிறந்து முற்றிலுமாக வெளியே தள்ளப்பட்ட ஒருவன். அவனை நாங்கள் சில நிமிடங்களில் வாயடைத்து விட்டு, எங்கள் பிரமாணங்களைக் கொண்டு காண்பிக்க முடியும்.... ”அந்த விஷயத்தில் அவர்கள் செய்ததைச் செய்ய அவர்களுக்கு உரிமை இருந்தது. ஏன்? ஏனெனில் அவர் அந்நேரத்துக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை என்பதை அவர்கள் காணத்தவறினர். இயேசு அவர்களுடைய இருதயங்களிலிருந்த சிந்தனைகளை அறிந்து, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வெளிப்படையாய் அறிவித்து வார்த்தையை செயல்படுத்தின அந்த ஒரு வழியில் மட்டுமே அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் தேவனுடைய வார்த்தையின்படி தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் உரைத்த ஒவ்வொரு வார்த்தையும்,வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறினது. 23அவர் தேவனுடைய தீர்க்கதரிசி, ஊழியக்காரன், தீர்க்கதரிசியாகிய தேவன். தேவனுடைய தீர்க்கதரிசி அவர்களுக்கு முன்னால் இருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய தேவன், தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல. மல்கியா, எரேமியா, ஏசாயா, எலியா போன்றவர்களே தேவனுடைய தீர்க்கதரிசிகள். ஆனால் இவரோ தீர்க்கதரிசியாகிய தேவன், தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல. உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா? அவருடைய வாழ்க்கையை பாகங்களாக சித்தரித்த தீர்க்கதரிசிகள் அனைவரும், தங்கள் பாகத்தை ஏற்று நடித்தனர். ஆனால் இவருக்குள் தீர்க்கதரிசிகள் அனைவரின் பரிபூரணமும் இருந்தது. தீர்க்கதரிசிகளுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. ஆனால் இவரோ வார்த்தையும் தீர்க்கதரிசியுமானவர், அதே நபர். பாருங்கள். 24இப்பொழுது, இப்பொழுது, ஒரு மனிதன் அவனிருக்கும் தற்போதைய நிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது. நீங்கள் அதை சரியென்று.... பாருங்கள்? அவர்களில் சிலர், “நல்லது, நான் ஒரு லுத்தரன்' என்கின்றனர். நல்லது. அதற்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால் கழுகுகள் அந்த ஆகாரத்தை தின்பதில்லை பாருங்கள்? அது நீண்டகாலம் முன்பு நடந்த ஒன்று. அது அந்நாளின் புதிய ஆகாரம். “நான் ஒரு வெஸ்லியன்” அது சரிதான், ஆனால் நீங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது, அந்த ஜனங்கள், “ஆபிரகாம் எங்கள் தகப்பன் என்றனர். அந்த தீர்க்கதரிசி, “இந்தக் கல்லுகளினாலே தேவன் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ணவல்லவராயிருக்கிறார்” என்றான் (மத். 3:9). பாருங்கள்? “நாங்கள் இதை சேர்ந்தவர்கள், அதை சேர்ந்தவர்கள்”. அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அவன் “விரியன் பாம்புக்குட்டிகளே, வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? 'ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண. வல்லவராயிருக்கிறார்” என்றான் (மத்.3:7,9). பாருங்கள்? எனவே நன்கு பயிற்சி பெற்ற வேதசாஸ்திர பண்டிதனுக்கு இதனுடன் யாதொரு தொடர்பும் இல்லை. சாந்தமும் தயவும் உள்ளவர்களாயிருப்பதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அவரை வித்தியாசமாக்கினது எது? அவர் வார்த்தை மாம்சமானவர். மோசேயின் காலத்துக்கான வார்த்தை அல்ல. மோசே அந்த காலத்தின் வார்த்தையாயிருந்தான்; நோவாவின் காலத்துக்கான வார்த்தை அல்ல, நோவா அவன் காலத்தின் வார்த்தையாயிருந்தான்; எலியாவின் காலத்துக்கான வார்த்தை அல்ல, எலியா அவன் காலத்தின் வார்த்தையாயிருந்தான்; ஆனால் அவர் நிகழ்கால வார்த்தையாயிருந்தார், அவர்களோ முன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். 25அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறது! தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டுணர்ந்து, அதை ஏற்றுக்கொள்வீர்களானால், அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட தன் அத்தாட்சி. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாயிருந்தீர்கள் என்றோ, அதைப்பற்றி ஒன்றுமில்லை. தேவன் இப்பொழுது உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதே முக்கியம். அதுதான் அத்தாட்சி. இயேசு உரைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட தன் அத்தாட்சியை அவர் யோவான் 14ம் அதிகாரத்தில் உரைத்திருக்கிறார். அவர், “இன்னும் அநேகங் காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அதற்கு எனக்கு இப்பொழுது நேரமில்லை. பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது, அவர் உங்களுக்குப் போதித்து, நான் உங்களிடம் கூறினதை உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்றார் (யோவான் 16:12-13). உங்களால் காண முடியவில்லையா? அதுதான் அத்தாட்சி. வரப்போகிற காரியங்களை முன்கூட்டி அறிவித்து, எழுதப்பட்ட வார்த்தைக்கு தெய்வீக வியாக்கியானம் உரைப்பது. அது தீர்க்கதரிசியின் அடையாளம் அல்லவா? வேதத்தில் காணப்படும் ஞான திருஷ்டிக்காரன் (seer) முன்னறிவித்தது பிழையின்றி அப்படியே நடந்தது, யாரோ ஒருவர் அவன் மேல் கைகளை வைக்கவில்லை, அதுவரம். தீர்க்கரிசி என்பவன் முன் குறிக்கப்பட்டு தீர்க்கதரிசியாயிருக்கப் பிறந்தவன். பாருங்கள்? அவனுடைய வாழ்நாள் முழுவதுமே அவன் தீர்க்கதரிசியாயிருக்கிறான், அது ஒரு உத்தியோகம். அங்கு தான் ஜனங்கள்... 26இங்குள்ள பல கேள்விகள், “நல்லது, மணவாட்டி இதை செய்வாளா?” “இது நடக்குமா?” “சபை என்ன செய்யும்?” என்பதன் பேரில் உள்ளன. பாருங்கள்?அவர்களைப் நீங்கள் பிரிக்க முடியாது. மணவாட்டி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள். சபை உபத்திரவக் காலத்தின் வழியாய் செல்கிறது. அவர்களைக் குறித்து விருப்பமுள்ளவன் வரக்கடவன்'' என்று கூறப்பட்டுள்ளது. மணவாட்டி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்து விதமான உத்தியோகங்கள் உண்டு. “தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகரையும், மேய்ப்பரையும், போதகரையும் ஏற்படுத்தினார் (எபே.4:13). தேவன் அதை செய்தார். மனிதன் மகன் மார்போன்றவர்களை ஏற்படுத்திக்கொள்கிறான், ஆனால் பாருங்கள், சபை சீர் பொருந்தும் பொருட்டு தேவன் சபையில் இவர்களை ஏற்படுத்துகிறார் - அதை பிரிக்க முடியாது. இப்பொழுது, பரிசுத்த ஆவி வரும்போது, இந்த வார்த்தை சரியென்று உங்களுக்கு சாட்சி கொடுக்கிறது (பாருங்கள்?) - இன்றைக்கான வார்த்தை, லூத்தரின் காலத்துக்கான வார்த்தையல்ல, மோசேயின் காலத்துக்கான வார்த்தையல்ல. அது சத்தியமென்று நாம் சாட்சி பகருகிறோம், ஆனால் அது வேறொரு காலத்துக்குரியது. 27இப்பொழுது, இயேசு இவ்வுலகிற்கு வந்து, “மோசே எல்லாரையும் எகிப்தை விட்டு வெளியே கொண்டு சென்றது போல நானும் உங்களை எங்காவது கொண்டு செல்வேன்” என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும். அவர், “நாம் போய் ஒரு பேழையைக் கட்டுவோம். நான் தேவனாகிய கர்த்தர். நான் உலகத்தையும் அதில் உள்ளவர்களையும் மூழ்கடிக்கப் போகிறேன்” என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? அவர் வார்த்தைக்கு அப்பாற்பட்டிருப்பார்... பாருங்கள், அவர் அவ்விதம் வருவாரென்று வேதம் உரைக்கவில்லை. அப்படியானால் அவர் மேசியாவாய் இருந்திருக்கமாட்டார் அவர் எவ்வளவு தான் பேழையைக் கட்டினாலும், அவர் என்ன செய்திருந்தாலும், அவர் மேசியா வாவதற்கு தகுதியைப் பெற்றிருக்கமாட்டார். அல்லேலூயா! பார்த்தீர்களா? அது தகுதி. ஆம், ஐயா! 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் இவ்விதம் உரைக்கிறது. “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்” (1 கொரி. 13:10). எனவே சிறுவர்களைப் போல் மேலும் கீழும் குதித்தல், அந்நிய பாஷையில் பேசுதல் போன்ற இந்த சிறு காரியங்கள் அனைத்தும், நிறைவானது வரும் போது... இன்றைக்கு நமக்கு, தேவனுடைய உதவியினால், தெய்வீக உறுதிப்படுத்துதலுடன் கூடிய வார்த்தையின் நிறைவான வியாக்கியானம் கிடைக்கப்பெற்றுள்ளது. அப்பொழுது குறைவானது ஒழிந்துபோம். “நான் குழந்தையாயிருந்தபோது, குழந்தையைப் போலப் பேசினேன். குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ, குழந்தைக் கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” (1கொரி: 13:21). ஆமென்! நான் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டால், மற்ற கேள்விகளைப் பார்க்க முடியாது. 28சகோ. பிரான்ஹாமே... (அந்த கேள்விக்கு பதில் கூறி முடித்து விட்டேனா? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து நான் கூறினேனா?... ஆம், அதுதான் அது. இல்லையா? சரி, அதைநான் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான்.... இவை மிகவும் அருமையான கேள்விகள். ஒரு கேள்வியின் பேரில் ஒரு இரவு முழுவதும் நிலைத்திருந்து, சகோதரனே, அதை தொட்டிருக்கவும் முடியாது). நம் தேவனுடைய ஊழியக்காரனாயிருப்பதை நான் மெச்சுகிறேன். சத்தியத்தின் செய்தியை நான் விசுவாசிக்கிறேன். என் மனைவி எனக்கு செவிகொடுப்பதில்லை, அவள் இந்த செய்தியைக் குறித்து ஒன்றுமே கூறுவதில்லை, அவள் செய்தி ஒலிநாடா எதையும் கேட்பதில்லை. என் வேலையைக் குறித்து எனக்கு நரம்பு கோளாறு ஏற்பட்டுள்ளது. என் மனைவியும் விசுவாசித்து என் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சகோ.பிரான்ஹாமே, நான் தேவனுடைய நண்பனாயிருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நான் தேவனுடைய சித்தத்தில் காணப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். அவருடைய ஊழியக்காரனாயிருக்க விரும்புகிறேன் (அந்த நபர் “அடுத்த பக்கம்” என்று சொல்லி கையொப்பமிட்டிருக்கிறார். ஒரு நிமிடம் பொறுங்கள். நான் சிறுவனாயிருந்தபோது, நான் ஒரு பிரசங்கியாயிருக்க விரும்புகிறேன் என்று எல்லோரிடமும் கூறியிருக்கிறேன். நான் என்ன செய்யவேண்டுமென்று தேவன் விரும்புவாரென்று எனக்குத் தெரியவில்லை. நான் கர்த்தருக்காக எதையும் செய்ய சித்தமாயிருக்கிறேன். இவன் கர்த்தருக்குள் உங்களுடையவன். இப்பொழுது, நல்ல கேள்வி. அந்த மனிதன் உத்தமமானவர். அவருடைய மனைவி, அவருடைய பாகமாயுள்ள அவருடைய துணைவி... இதனுடன் நான் ஒன்றைக் கூட்டலாமா? என் சகோதரரே, இதை நான் கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். இந்நாட்களில் ஒன்றில், கர்த்தருக்குச் சித்தமானால், நான்: “விவாகமும் விவாகரத்தும்” என்னும் செய்தியை இந்தக் கூடாரத்தில் பிரசங்கித்து, அதை ஒலிநாடாவில் பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன். அது பிரிக்குமானால், அது பிரிக்கத்தான் வேண்டும். அது கர்த்தருடைய வார்த்தை என்று நாம் நிரூபிக்க போகின்றோம். 29பாருங்கள், என் சகோதரரே, இதைச் செவிகொடுத்து கேளுங்கள். அநேக சமயங்களில் இவ்வுலகில் நீங்கள் தவறான துணைவிகளைப் பெறுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சில அழகிய பழுப்பு நிறமுள்ள, அல்லது நீல நிறமுள்ள, அல்லது சாம்பல் நிறமுள்ள கண்கள் உங்களை மயக்கி, நீங்கள் செவிகொடுத்திருக்கக் கூடாத இடத்துக்கு உங்களைக் கவர்ந்துவிடுகிறது. மனிதர் பலர் அதை உணருகின்றனர். விவாகம் செய்கின்ற ஒரு மனிதன், முதலில் அதை ஜெபத்துடன் அணுக வேண்டும். வெளித்தோற்றத்தில் அழகாயுள்ள பெண்ணை நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது, உட்புறத்தில் அழகாயுள்ள பெண்ணை, உங்கள் பிள்ளைகளுக்கு தாயாயிருப்பவளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 30பிரசங்க பீடத்திலிருந்து ஒரு ஊழியக்காரன் இதைக் கூறும்போது, அது பயங்கரமாகத் தொனிக்கும் என்று அறிந்திருக்கிறேன். நான் மேற்கில் இருந்த போது, கால்நடைகளை வாங்குபவர்களுடன் நான் சென்றிருக்கிறேன். நாங்கள் குட்டிப் போடும் கால்நடைகளை வாங்குவோம், அவர்கள் ஒரு மந்தையைத் தொடங்க விரும்புவார்கள். அங்கு நான் நிறைய கற்றுக்கொண்டேன். மாடுகளை ஏலம் விடுபவர்கள் செய்வதையும் வாங்குபவர்களின் செயல்களையும் நான் கவனித்திருக்கிறேன். நான் இந்த சபைக்கு வருகிற ஒரு வயோதிபனுடன் அங்கு செல்வது வழக்கம். அவர் தொடக்கத்தில் நாத்தீகனாயிருந்தார், அவரை நான் கிறிஸ்துவினிடத்தில் நடத்தினேன் - திரு. ஜேவரெஸ். உங்களில் பலருக்கு அவரை ஞாபகமிருக்கும். அவர் கொலராடோவில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். நாங்கள் செல்வோம், அவர்கள் பசுக்களை கவனிப்பார்கள். ஒரு நாள் ஒரு பசுங்கன்று 11,000 டாலர்களுக்கு விற்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். அது சிறுகன்று. அது குட்டி போட்டதேயில்லை. ஜேவ் என்னிடம், “என்னிடம் போதிய பணம் இருந்தால், இந்தக் கன்றுக்குட்டியை நான் வாங்கி விடுவேன்” என்றார். “அவர் மாட்டுப் பண்ணை சொந்தக்காரர். அவருடைய தொழிலை அவர் புரிந்துகொண்டிருக்கிறார்” என்று நான் நினைத்துக் கொண்டேன். நான், “ஜேவ், நீர் ஏன்... இந்த கன்றுக்குட்டிக்குள்ள தகுதி என்ன? அது ஹியர்ஃபோர்ட் ரகத்தைச் சேர்ந்தது. அங்குள்ள மற்றக் கன்றுக்குட்டி சிறிது நேரத்துக்கு முன்பு 300 டாலர்களுக்கு விற்கப்பட்டது. எனக்கு அது பெரிய கன்றுக்குட்டியாக காணப்பட்டது” என்றேன். அவர், “பாருங்கள், பில்லி, கன்றுகள் வாங்கும் விஷயத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் தெருப் பிரசங்கம் செய்வதில் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும்மென்று எண்ணுகிறேன். ஏனெனில் கால்நடைகளை குறித்து உங்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. அங்குள்ள அந்த கன்றுக்குட்டியைப் பாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அது இருந்த இடத்துக்கு நடந்து சென்று. “ அதன் கண்களில் முறைப்பான பார்வையைக் கண்டீர்களா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்றேன். அவர், “அதன் குட்டிகளுக்கும், பேரக் குட்டிகளுக்கும், கொள்ளுப் பேரக்குட்டிகளுக்கும் அந்த முறைத்த பார்வை வழிவழியாக வந்து கொண்டிருக்கும். அவை தங்களையே அழித்துக்கொள்ளும். தங்கள் கன்றுக்குட்டிகளுக்கு அவை ஒருபோதும் தாயாக இருக்காது. அவைகளை நீங்கள் கொழுக்க வைக்க முடியாது; அவை இறைச்சிக்கு உதவாது. இப்பொழுது விற்கப்பட்ட அந்த சிறு கன்றுக்குட்டியை கவனியுங்கள். அதன் பார்வை எவ்வளவு சாந்தமாயுள்ளது! அதன் அமைதியான பார்வையை, தயவுள்ள பார்வையைக் கவனியுங்கள். அதன் கண்களில் ஒரு முறைப்பும் கூட இல்லை. அது தன் கன்றுக்குட்டிகளுக்கு உண்மையான தாயாக இருக்கும். அதன் குட்டியின் கன்றும், அந்தக் கன்றின் கன்றும் தொடர்ந்து இந்தப் பார்வையை பெற்றிருக்கும். அவையனைத்தும், இனச் சேர்க்கைக்கு சரியான காளைகளை கிடைக்குமானால், தங்கள் குட்டிகளுக்கு தாயாக இருக்கும். ஆனால் இந்த முறைப்பானபார்வை கொண்ட கன்றுக்குட்டியை ஒரு மனிதன் வாங்கினால், அது சொற்பமான மந்தையையே உண்டாக்கும்” என்றார். நான், “ஆம், ஐயா! நன்றி!” என்றேன். 31அது ஸ்திரீகளுக்கும் பொருந்தும். முகத்தில் வர்ணம் பூசின , முறைப்பான கண்களைக் கொண்ட, ஏதோ ஒரு விதமான மிருகத்தைப் போல் காணப்படும் ஒருத்தியை உங்கள் மனைவியாகத் தெரிந்துகொள்வீர்களானால்; அவள் மானிட தோற்றத்தை உருக்குலைக்கிறாள், அவள் எதையுமே சாதிக்கமாட்டாள். அவள் எல்லா நேரங்களிலும் ஓடிக்கொண்டேயிருப்பாள். கிறிஸ்தவ மார்க்கம் - என்பது வெளிப்புற அழகல்ல, அது உட்புறத்தில் உள்ளது; சமாதானம், அமைதி, தங்களை சமாதானமுள்ள, அமைதியான ஆவியினால் அலங்கரித்துக் கொள்ளுதல்; அதுவே கர்த்தருக்கு முன்பாக விலையேறப்பெற்ற பொக்கிஷமாய் உள்ளது. அதையே நாம் ஸ்திரீகளிலும், மனிதரிலும், யாராயிருந்தாலும், காண விரும்புகிறோம். இப்பொழுது... 32கேள்வி: சகோ. பிரான்ஹாமே: கேள்விகள்: ஒரு கிறிஸ்தவ பெண்மணி சாதாரண ஆபரணங்களை, கழுத்து மாலையாக அல்லது முத்துக்களை அணிந்து கொள்ளலாமா? நல்லது, சகோதரியே, இது உனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று எண்ணுகிறேன். நான் உண்மையைக் கூறுவேன் என்று என் பேரில் நீ நம்பிக்கை வைத்துள்ளதால், அது எனக்கும் முக்கியம் வாய்ந்தது. இப்பொழுது, ஞாபகம்கொள், வேதம், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய, இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. என்று உரைக்கிறது (1 தீமோ . 2:9-10) இப்பொழுது, சகோதரியே, அதன் மூலம் இதை நான் கூற வரவில்லை, உனக்கு ஒரு ஆடை ஊசி (pin) இருக்குமானால்.... இப்பொழுது, இது நான் கூறுவது, கர்த்தர் அல்ல. ஒரு ஆடை ஊசியை, அல்லது உன் கணவர் உனக்கு வாங்கித் தந்த ஒரு கழுத்து மாலையை நீ அணிந்துகொள்ள விரும்பினால் - அல்லது அதைப் போன்ற ஒன்றை நீ ஏற்கனவே அணிந்திருந்தால், என்னைப் பொறுத்த வரையில், அது தவறல்ல. இது நான் கூறுவது. இதை ஞாபகம் கொள், நான் தெளிவாகக் கூறுகிறேன், இது என் கருத்து. அது நீ அணுகும் முறையைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்; அதை நீ செய்யும் விதத்தைப் பொறுத்தது. பார்? அதைச் செய்வதற்கான நோக்கம் என்னவென்பதைப் பொறுத்தது. அது உன்னை விடாப்பிடியாய் பற்றிக் கொள்கின்றது என்பதை நீ காணும் போது, அதை விட்டுவிடு. நான் நினைக்கிறேன், நீ விவாக மோதிரத்தை அணிந்திருப்பாயானால்.... 33நசரீன் மக்களே, விவாக மோதிரத்தை அணிந்துள்ள ஒரு ஸ்திரீக்கு நீங்கள் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை என்று எனக்குத் தெரியும். அந்த மனப்பான்மை அவசியமில்லை என்று நினைக்கிறேன். வேதாகம காலத்தில் அவர்கள் விவாக மோதிரங்களை அணிந்திருந்தனர், அது 'தலை மாலை' என்று அப்பொழுது அழைக்கப்பட்டது. அதை அவர்கள் தலையில் அணிந்து கொண்டிருந்தனர், அதில் ஒன்பது வெள்ளிக் காசுகள் இருந்தன. ஆனால் நான்.... அவர்கள் விவாகமானவர்கள் என்பதைக் காண்பிக்க. அது சரியென்று நான் நினைக்கிறேன். ஸ்திரீகள் உடுத்து, நாணயமாக, சுத்தமாக, நேர்த்தியானது போல் காணப்பட விரும்பினால், என்னைப் பொறுத்த வரையில் அதனால் ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் பெருமைகொள்ள அவ்விதம் செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் தவறு செய்கின்றீர்கள். அது உங்கள் மனப்பான்மையைப் பொறுத்தது. சிலகாலத்துக்கு முன்பு அவர்கள் 'ஸ்காண்டில் பாவாடைகள்' என்று அழைக்கப்பட்ட பாவாடைகளை உடுத்திக்கொண்டது ஸ்திரீகளாகிய உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? அவை மறுபடியும் வெளியே வருகின்றன என்று நினைக்கிறேன்... இப்பொழுது, அவைகளை 'ஸ்காண்டில்' என்பதற்கு பதிலாக 'ஸ்காண்ட் லெஸ்' என்று அழைக்கின்றனர். அந்த பெண்களும் வாலிப ஸ்திரீகளும்... வயோதிப ஸ்திரீகளும் கூட அதை உடுப்பது வழக்கம். ஏனெனில் அவர்கள் அனைவரும் இளமையாகக் காணப்பட விரும்புகின்றனர். சகோதரிகளாகிய உங்களை நான் கூறவில்லை. உலகப்பிரகாரமான ஸ்திரீகளையே குறிப்பிடுகிறேன். அவர்கள் தங்கள் பாவாடைகளை ஒவ்வொரு முறையும் ஒரு அடி உயர்த்தி வெட்டுவார்கள். அவர்கள் அழகான உள்ளாடையை அணிவார்கள். அவர்கள் அடியெடுத்து வைக்கும் போது, பின்னல்' (lace) சுருக்கம் (frill) வைத்துதைக்கப்பட்ட உள்ளாடை காணப்படும். அந்த உள்ளாடையைக் குறித்து உங்களுக்குத் தெரியும். 34'டன்கர்ட்' (Dunkard) பெண் ஒருத்தி என்னிடம் வந்தாள். அவள் சற்று முன்பு தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அவள் 'அசெம்பிளீஸ் ஆப் காட்' சபையைச் சேர்ந்தவள். இது நான் விவாகம் செய்து கொண்ட இந்தியானாவிலுள்ள ஃபோர்ட் வேய்ன் என்னுமிடத்தில் நடந்தது. அவள் என்னிடம் வந்தாள், மிகவும் அருமையான பெண். அவள், “சகோ. பிரான்ஹாமே, உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றாள். நான், “சரி, சகோதரியே, அது என்ன?” என்று கேட்டேன். அவள், “ஒரு கிறிஸ்தவப் பெண் 'ஸ்காண்டில் பாவாடை' உடுத்துவது தவறென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றாள். நான், “சகோதரியே, அது என்ன விதமான பாவாடை என்று எனக்குத் தெரியவில்லை. 'ஸ்காண்டில் பாவாடை' என்றால் என்ன?” என்று கேட்டேன். அவள் அது என்னவென்று எனக்கு விளக்கித்தந்தாள். நான்.... அவள், “அது உள்ளாடையைக் காண்பிக்கும் ஒன்று” என்றாள். “உள்ளாடையை ஏதோ ஒரு மனிதனுக்கு காண்பிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் உள்ளத்தில் என்ன உள்ளது? அவ்விதம் செய்வதற்கு ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு என்ன வேலை? ஒரு கிறிஸ்தவ பெண் அவ்வாறு செய்வதை எண்ணிப் பார்க்க முடிகிறதா?” என்று கேட்டேன். 35இப்பொழுது, பாருங்கள், ஒரு மனிதனுக்கு தன் உடலில் காண்பிக்க அதிகம் ஒன்றுமில்லை. அவன் அரை நிர்வாணியாய் நடந்து சென்றால், யாரும் அவதூறு பேசமாட்டார்கள். நான் ஆண்கள் சார்பில் பேசுவதாக எண்ண வேண்டாம், ஆனால் அவர்கள்... 'ஷர்ட்டைக் கழற்றிப்போட்டு, குட்டை கால்சட்டையுடன் நடந்து செல்லும் ஒரு மனிதனைப் பார்த்து எந்த விதமான பெண் கவரப்படுவாள் என்று உங்களுக்குத் தெரியும். பெரிய திடகாத்திரமுள்ள உடல், அது காண்பதற்கு அருவருப்பாய் உள்ளது. அங்குள்ள இந்த மனிதரைப் பாருங்கள். அதைக் காணும்போது ஒரு ஸ்திரீக்கு வாந்திப் பண்ணத்தான் தோன்றும்... ஆனால் ஒரு ஸ்திரீயை நீங்கள் எடுத்துக்கொண்டு அவளை அந்த விதமான நிலையில் வைத்தால், அது வித்தியாசமான ஆலயம். உங்களுக்குப் புரிகிறதா? சரி. நான் நினைக்கிறேன், கழுத்து மாலையைப் பொறுத்த வரையில்... நீங்கள்... நீங்கள் பத்து சென்டு அங்காடிக்கு போனதைப்போல் நிறைய ஆபரணங்களை அடுக்கிக் கொண்டு, காந்தத்தை உங்கள் மேல் கொண்டவர்களாய் செல்வீர்களானால், நான் நினைக்கிறேன், அது... அவ்விதம் கூறினதால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அவ்விதம் கூறவேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனால் அது தவறு. 36நான் முதன்முதலாக அமெரிக்காவைக் குறித்து வெட்கமடைந்து, அதற்கு விரோதமாக என்னைத் திருப்பின் சம்பவம் என்னவென்றால்... ஒரு நாள் நான் ஸ்விட்சர்லாந்தில் இருந்தேன். லாசேன் என்னுமிடத்தில் நானும் சகோ.ஆர்கன் ப்ரைட்டும், ஒரு பெரிய, நல்ல 'ஸ்டீக்' கிடைக்குமிடத்தைக் கண்டு பிடித்தோம். அது இவ்வளவு பெரிதாயிருந்தது, ஏறக்குறையமுக்கால் பவுண்டு எடையுள்ளதாயிருந்தது, அதன் விலை அமெரிக்க நாணயத்தில் முப்பது சென்டுகள் மட்டுமே. ஓ, நாங்கள் ராஜாக்களைப் போல் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் அங்கு செல்வோம். அங்குள்ள எல்லோருமே திராட்சரசம் குடிப்பார்கள், அது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. நான் அந்த திராட்சரசம் குடிக்க மறுத்துவிட்டேன், எனவே நான் மருந்து கடைக்குச் சென்று அவர்கள் வைத்திருந்த வடிகட்டின தண்ணீர் ஒரு குப்பி வாங்கிக் கொண்டேன். நான் சென்றவிடமெல்லாம், அதை என்னுடன் கொண்டு சென்றேன். எல்லோரும், “அந்த மனிதன் தன் சொந்த ரகம் திராட்சரசத்தை கூடக் கொண்டு செல்கிறார்” என்று நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். எனவே அதை என் கையில் பிடித்திருந்தேன். ஒரு நாள் நாங்கள் இந்த 'ஸ்டீக்'குகள் விற்கும் இடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது அமெரிக்கா அழகுராணி (Miss America) காரில் அங்கு வந்தாள். அவள் 1928ம் மாடல் ஷெவர்லே காரை ஓட்டி வந்தாள். அவள் 'பூடுல்' ரக நாய் ஒன்றை மடியில் வைத்திருந்தாள். அதையும் அவள் கடைக்குள்ளே கொண்டு வந்தாள். அவளுக்குப்போதிய ...அந்த ஸ்திரீகள் இருவரும் பத்து சென்டு அங்காடியில் கிடைக்கும் நிறைய நகைகளை அணிந்திருந்தனர், பெரிய, நீண்ட, காதணிகள் கீழே தொங்கிக் கொண்டிருந்தன, முகத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்குமே ஐம்பது வயதிருக்கும், என் வயது. அவர்கள் பதினைந்து வயது பெண்களாக ஆக விரும்பினர் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். அவர்கள் என்ன செய்ய முயன்றனர்? அவர்கள் வாழ்க்கை சாலையில் காரோட்டிக் கொண்டு, பின்புறம் காணும் கண்ணாடி வழியாய் பார்த்து, அவர்கள் முன்பு எவ்விதம் காணப்பட்டனர் என்பதை பின் நோக்கிக் காண முயன்றனர். 37இப்பொழுது, கிறிஸ்தவர்களே, அப்படிச் செய்யாதே ஒரு கிறிஸ்தவன். அவன் முன்பு காணப்பட்ட விதமாக இருக்க முயல்வதில்லை; அவன் முன்பு எங்கிருந்தான் என்பதை நோக்கி பாராமல், அவன் எங்கு செல்கிறான் என்பதையே நோக்குகின்றான். பாருங்கள், பாருங்கள்? முன்பு எவ்விதம் இருந்தாய் என்பதைக் குறித்து கவனம் செலுத்தாதே; அதை நீ வாழ்ந்து முடித்துவிட்டாய். அதற்கு நீ திரும்பிச் செல்லப்போவதில்லை; அது முன்காலத்து ஒன்று. காரிலுள்ள பின்புறம் காணும் கண்ணாடியின் வழியாக வாழ்க்கை சாலையில் காரோட்டிச் செல்லும் எந்த மனிதனும் விபத்துக்குள்ளாகி நாசமடைவான்; அப்படித்தான் கிறிஸ்தவ சாலையில் பயணம் செல்லும் உங்களுக்கும் நேரிடும். நீ என்னவாயிருந்தாய் என்று பின்நோக்கிப் பாராதே, நீ என்னவாய் இருக்கப் போகின்றாய் என்பதை முன்நோக்கிப்பார். பவுல், “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்றான் (பிலி. 3:13-14). அது உங்களை வெட்கத்துக்குள்ளாக்கியது. அவர்கள் இந்த சிறு, நாற்றமெடுத்த நாயை உள்ளே கொண்டு வந்து மேசையின் மேல் உட்காரவைத்தனர். அது எவரையும் வாந்திபண்ணச் செய்யும்! அங்கு தங்கள் கைகளினால் அந்த நாயிடம் அங்கு விளையாடிக் கொண்டு, அதே கைகளை உபயோகித்து அதை தின்றனர். உணவு கொண்டு வருகிறவன் (waiter) அங்கு வந்து அவர்களிடம் ஏதோ ஒன்றைத் தன் மொழியில் உளறினான். டாக்டர் குக்கென்புல் அப்பொழுது என்னுடன் இருந்தார். அவர் சிரிக்கத் தொடங்கி, தலையைத் திருப்பிக் கொண்டார். நான், “அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டேன். “அந்த 'வேய்ட்டர்' அந்த நாயை கீழே இறக்கி விடக் கூறினான். ஆனால் அங்கிருந்தவர்கள் 'அவளை விட்டு விடு. அவள் அமெரிக்க நாட்டுப் பெண்' என்றனர்'' என்றார். அதாவது “அவளுக்கு இதை விட நல்லது வேறொன்றும் தெரியாது” என்னும் அர்த்தத்தில் கூறினர். பாருங்கள்? நான் ரோமாபுரியிலுள்ள வாடிகன் நகரத்திலுள்ள செயின்ட் ஆஞ்சலோ என்னுமிடத்துக்குச் சென்றிருந்தபோது (இதை சிந்தித்துப் பாருங்கள்), அவர்கள் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருந்தனர்: “அமெரிக்க ஸ்திரீகளே, நீங்கள் சவ அறையில் பிரவேசிக்கும் முன்பு, இறந்தோரை கெளரவிக்க உங்கள் உடைகணை அணிந்து கொள்ளுங்கள்” கத்தோலிக்க சபை. பாருங்கள்? 38கேள்வி: சகோ. பிரான்ஹாமே, பூமி வெடித்து எரியும் போது, மணவாட்டி எங்கிருப்பாள்? வாதைகள் விழுந்த போது, இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டைப் போல் அது ஒரு இடமாக இருக்குமா? அது நடக்கும் போது மணவாட்டி பூமியில் இருப்பாளா? அப்படியானால், அவள் எங்கிருப்பாள்? எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் நேரத்தில் மணவாட்டி அனைவரும் ஒரே இடத்தில் இருப்பார்களா? மணவாட்டி, பூமி வெடிக்கும் போது... எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் நேரம், மரித்தோர் நித்திரையினின்று எழும்பி, உயிரோடிருப்பவர்களுடன் ஒன்று சேர்ந்து, எடுத்துக் கொள்ளப்படுதலில் அவர்களைக் கொண்டு செல்லும். இப்பொழுது, மணவாட்டி ... இப்பொழுது, பாருங்கள், எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு நடைபெற வேண்டிய சம்பவங்களில் ஒன்றாகும். பூமி எரியும் சம்பவம், ஆயிரம் வருட அரசாட்சிக்கும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கும் இடையே நடக்கும் ஒன்று. பாருங்கள்? பரிசுத்தவான்கள் பூமியின் பரப்பில் பாளயமிறங்கியிருக்கும் போது, சாத்தான் அந்த அன்பார்ந்த நகரத்தை சுற்றி வளைவான். தேவன் அப்பொழுது வானத்திலிருந்து அக்கினியையும் கந்தகத்தையும் பொழிந்து அவர்களை அழித்துப்போடுவார். சரி, வேதம் அவ்வாறு உரைக்கிறது. 39கேள்வி: மேலும், சகோ. பிரான்ஹாமே, ஒரு ஸ்திரீ தன் புருஷனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் கிறிஸ்தவ ஸ்திரீ ஒருத்திக்கு, உங்கள் ஆராதனைகள் ஒன்றுக்கும் கூடவராத பாவியான புருஷன் ஒருவன் இருந்து, அவன் மனைவியிடம் தலை மயிரைக்கத்தரித்துக் கொள்ளவும், குட்டை கால் சட்டை அணிந்து கொள்ளவும், தேவபக்தியற்ற இடங்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தினால், அந்த ஸ்திரீ இந்த மனிதனுக்கு அவ்வழியில் கட்டுப்பட்டிருக்க வேண்டுமா? தயவுகூர்ந்து இதை இன்னும் தெளிவாக விளக்குங்கள், ஏனெனில் இது அடிக்கடி கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகும். இப்பொழுது, சகோதரியே, அப்படிப்பட்ட ஒருவனுக்கு நீ கீழ்ப்படிய வேண்டியதில்லை. இல்லவே இல்லை. இந்த காரணத்திற்காக, நீ எல்லாவற்றையும் விட்டு தேவனிடம் இசைந்திருக்க வேண்டும். இப்பொழுது, காரியம் என்னவெனில்... அந்த மனிதன் உன்னுடன் வாழ விரும்பி, நீ கிறிஸ்தவளாக இருக்க சம்மதித்தால்.... ஆனால் அவன் உன்னை குட்டை கால் சட்டை அணியவும், தலை மயிரை கத்தரிக்கவும், மற்ற காரியங்களைச் செய்யவும், தேவபக்தியற்ற இடங்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தினால், முதலாவதாக நீ தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடு. அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு நீ கட்டுப்பட்டவள் அல்ல. வேதம் என்ன கூறுகிறதென்றால், “அவளும் அவனும் ஒன்றாக வாழ திருப்தி கொண்டால், அவர்கள் .... இப்பொழுது, அந்த வேத வசனத்தை நான் குறித்து வைக்கவில்லை, ஏனெனில் சில நிமிடங்களுக்கு முன்புதான் இந்தக் கேள்வியை நான் கையிலெடுத்தேன். இப்பொழுது நான் ஒன்றைகையிலெடுக்கிறேன், எனக்கு நேரமில்லாமல் போய் விடுகிறது .... 40பவுல் என்ன சொல்லியிருக்கிறான் என்றால், அவிசுவாசியான ஒரு புருஷனுக்கு விசுவாசியான ஒரு மனைவி இருந்து, அவன் தேவனுக்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தூண்டாமல், அவளுடன் வாழ விரும்பினால்.... “இனியவளே. நீ போய் வா, உனக்கு சபைக்கு போகவேண்டுமென்றால் போ, ஆனால் நான் வரமாட்டேன், அதில் எனக்கு விசுவாசம் இல்லை; அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. நீ போய் வா. ஆனால் அவன், ''நீ போகக்கூடாது'' எது. அதற்கு நீ கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தேவனுக்கென்று எல்லாவற்றையும் விட்டு பிரிந்து விடு. 41சகோ. பிரான்ஹாமே, (நாம் பார்ப்போம்)... விவாகரத்து செய்யப்பட்ட துணைவி உயிரோடிருக்கையில், செய்திக்கு வருவதற்கு முன்பு மறு விவாகம் செய்து கொண்ட ஒரு நபர் ஊழியம் செய்வது முறையாகுமா? நல்லது, நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், இந்த கேள்விக்கு விடையாக 1 தீமோத்தேயு 3:2, தீத்து 1:6 ஐ நீங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் (இவைகளை நான் எழுதி வைத்திருக்கிறேன்). பாருங்கள்? ஒரு மனிதன் கண்காணிப்பாளன் அல்லது பிரசங்கியின் உத்தியோகம் வகிக்க ஆவல் கொண்டால் (அல்லது சபையில் வேறெந்த உத்தியோகத்தையும்), அவன் ஓரே மனைவியை உடையவனாயிருக்க வேண்டும். அது உண்மை ! ஒரு போதகர். இப்பொழுது, அது 1.தீமோத்தேயு 3:2ம், தீத்து 1:6ம். ஆம்! நல்லது. தேவனுடைய வீட்டில் ஊழியக்காரனாயிருக்கும் ஒருவன் ஒரே மனைவியை உடையவனாயிருக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். 42கேள்வி: அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேவன் என்னைச் சந்தித்து அன்பின் வரம் என்னவென்பதை எனக்கு வெளிப்படுத்தினார். அன்று முதல் அதற்கு நான் திரும்ப வேண்டும் என்பதே என் ஜெபமாயுள்ளது. நான் மரிக்கும் முன்பு அதைப்பெற்றுக் கொள்வேனா? என் கணவர் வார்த்தைக்கு செவிகொடுப்பாரா, நான் என்ன செய்ய வேண்டும்? அது ஒரு நல்ல கேள்வி. இப்பொழுது, அவள் கூறியிருக்கிறாள். இங்கு, என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அவள் “என் கணவர்” என்று கூறியுள்ளதால், அதைக்கூறினது ஒரு ஸ்திரீயாக இருக்க வேண்டும். இப்பொழுது, அவள் ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்துவிட்டாள். பாருங்கள்? அவள் ஆவியில் குளிரடைந்து விட்டாள். இப்பொழுது, சகோதரியே, நீ இன்னும் சபைக்கு வந்து கொண்டிருந்து, சரியான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறபடியால், உன் இரட்சிப்பை நீ இழந்து போகவில்லை, ஆனால் உன் இரட்சிப்பின் சந்தோஷத்தை தான் இழந்து போயிருக்கிறாய். ஒரு முறை தாவீது, “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும்” என்று கதறினான் (சங்.51:12). நீ இன்னும் கிறிஸ்தவளாகத்தான் இருக்கிறாய் எனவே நீ என்ன செய்ய வேண்டுமென்றால், சகோதரியே, உனக்குத் தெரிந்த வரைக்கும் எல்லாவற்றையும் புறம்பாக்கிவிட்டு, தேவனை தேடி ஜெபம்பண்ணு . “என் கணவர் வார்த்தைக்கு செவி கொடுப்பாரா, நான் என்ன செய்ய வேண்டும்?” இன்று காலை கூறினது போல, உப்புத்தன்மை கொண்டவளாயிரு. “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் . உன் கணவர் உன் கற்புள்ள வாழ்க்கையைக் கவனிப்பார். அவிசுவாசியான புருஷன் விசுவாசமுள்ள தன் மனைவியினால் கர்த்தருக்கு பரிசுத்தமாக்கப்படுகிறான். கர்த்தரைத் தேடி, தாழ்மையுடன் இருந்து, எல்லா நேரத்திலும் ஜெபம் செய்து, தேவனுக்கு துதியைச் செலுத்தி, உன் கணவர் தற்போதைய நிலையில் உன்னுடன் வாழ சித்தம் கொண்டுள்ள வரைக்கும் அவருடன் தயவாய் நடந்துகொள். 43கேள்வி: இது ஞாயிறு ஆராதனைகளுக்காக. ஒரு ஸ்திரீ ஒரு தவறைச் செய்து... (இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள்; இதை நான் முதலில் படிக்கட்டும். பாருங்கள்? சகோ.பிரான்ஹாம் தனக்குள் அந்த கேள்வியைப் படிக்கிறார் - ஆசி) சரி, அது பரவாயில்லை). ஒரு ஸ்திரீ விவாகமான ஒரு மனிதனுடன் ஒரு தவறைச் செய்து, மனந்திரும்பி, வேதத்தின்படி தன் கணவருடன் அதை சரி செய்து கொண்டு விட்ட பிறகு, அவள் ஈடுபட்ட அந்த மனிதனின் மனைவிக்கு இதைக்குறித்து ஒன்றும் அறியாமலிருந்தாலும், அவளிடம் சொல்ல வேண்டியது அவசியமா? அல்லது அந்த மனிதன் அவளிடம் முதலில் சொல்ல வேண்டுமா? அல்லது அவளைப் புண்படுத்துவது அவசியம்தானா? இது நடந்து முடிந்தபிறகு, நட்புத் தன்மை ஈடுபட்டுள்ள இவ்விஷயத்தில் எவ்வளவு தூரம் நாம் சென்று இதை சரி செய்து கொள்ள வேண்டும்? நல்லது, என் அருமை சகோதரியே, நீ ஒரே ஒரு காரியத்தை மட்டும் சரியாகச் செய்திருக்கிறாய். நீ அதில் ஈடுபட்டாய் என்று நினைக்கிறேன், அல்லது உனக்குத் தெரிந்த யாரோ ஒருத்தி இந்த தவறான செயலில் ஈடுபட்டிருக்கிறாள். நீ வேறொரு ஸ்திரீயின் துணைவருடன் இந்த சமூக செயலைச் செய்திருக்கிறாய். நீ அதைச் செய்த போது கிருபையிலிருந்து விழுந்துவிட்டாய். அதன் பிறகு நீ மனந்திரும்பினாய். நீ அந்த மனிதனிடம் சென்று அதை சரிசெய்து கொள்ளும் வரைக்கும் உன்னால் மனந்திரும்ப முடியாது. நீ அந்த செயலில் ஈடுபட்ட அந்த மனிதனிடம் உன் கணவரையும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த காரியத்தை தான் நீ செய்திருக்க வேண்டும். அது தான் வேதப் பிரகாரமானது. 44இங்குள்ள லூயிவில்லில் வசிக்கும் ஒருத்தி என்னிடம் வந்திருந்தாள். அவள் ஒரு வாலிபப் பெண். அவள் ஒரு மனிதனுடன் தொடர்பு கொண்டிருந்தாள். அதன்பிறகு அவள்... அவள் செய்வது தவறென்று அறிந்துகொண்டாள். எனவே அவள் நகரத்தை விட்டு, தூரத்திலுள்ள வேறொரு நகரத்துக்கு சென்று, அவளுடைய பெயரை மாற்றிக்கொண்டு, அங்கிருந்த சிலருடன் வாழ்ந்து வந்தாள். இந்த மனிதன் அவளைப் பின்தொடர்ந்து அங்கு அடைந்து அவளிடம், அவள் மேல் இந்த சுமை உள்ளதென்றும், அவள் அவனுக்கு மனைவியாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், இல்லையென்றால் அவன் இந்த விவகாரத்தைக் குறித்து கூறிவிடுவானென்றும் பயமுறுத்தினான் (அவள் அந்த இடத்தில் ஒரு அருமையான கிறிஸ்தவனை மணந்து கொண்டாள். அவள் அவ்விதம் நடந்து கொள்ளாவிட்டால் அவன் முழு விவகாரத்தையும் அம்பலப்படுத்திவிடுவதாக மிரட்டினான். எனவே அவள் தொடக்கத்தில் தன் நிறத்தைக் காண்பிப்பதற்கு பதிலாக இந்த இரு மனிதருக்கும் வாழ்க்கைப்பட வேண்டியதாயிற்று. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு இப்பொழுது பதினெட்டு வயதாகின்றது. இவர்களில் யார் அவளுடைய தகப்பன் என்று அவளுக்குத் தெரியாது. இப்பொழுது அவளுடைய மாதவிடாய் நின்றுவிட்டது, அது அவளுக்கு நேர்ந்துவிட்டது. இப்பொழுது அவளால் என்ன செய்ய முடியும்? நான், “நீ செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று. ” என்றேன். அவள், “என் கணவரிடம் இதைப் பற்றி கூறினால், அவர் என்னை விட்டுப் போய் விடுவார். என் மகள் அறிந்தால், அவள் தற்கொலை செய்து கொள்வாள்” என்றாள். நான் அவளிடம், “இதை நீ மனதிலே வைத்துக் கொண்டிருந்தால், நீ நரகத்துக்குப் போவாய். இப்பொழுது, நீ எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்” என்றேன். செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அதை துடைத்து சரிபடுத்திக் கொள்வதே. அது முற்றிலும் உண்மை. உண்மையுள்ளவளாயிரு. 45உங்களுக்குத் தெரியும், அநேக சமயங்களில், ஸ்திரீகளும் மனிதரும் வரும்போது, தரிசனங்களில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் வாழ்க்கையில் செய்தவைகளை தோண்டி எடுத்து வெளிப்படுத்துவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், கண்டிருக்கிறீர்கள், அது உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? அவர்கள் என்ன செய்ய வேண்டும் மென்பதையும் அவர் அவர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவர்கள், “நல்லது. நான் அதை ஏற்கனவே கர்த்தரிடம் சரி செய்து கொண்டுவிட்டேன் என்கின்றனர். ஆனால் நீங்கள் உங்கள் கணவரிடமோ அல்லது உங்கள் மனைவியிடமோ சென்று அவர்களிடம் இதைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் அதை அறிக்கைசெய்ய வேண்டும். இப்பொழுது, இந்த நபர், அவள் குற்றவாளியாயிருப்பாளானால், அவள் அதைச் செய்துவிட்டாள், அவள் தன் கணவரிடம் சென்று அறிக்கை செய்து விட்டாள். இப்பொழுது, சகோதரியே, உன்னை நீ சுத்தப்படுத்திக் கொண்டு விட்டாய், ஏனெனில் இடையில்... நீ உன் கணவருக்கு விரோதமாக விபச்சாரம் செய்தாய். நீ உன் கணவரிடம் சென்று அறிக்கையிட்டு உன்னை சுத்தப்படுத்திக் கொண்டு விட்டாய். அதன் பிறகு அந்த மனிதனிடமும் சென்று அங்கேயும் அதை சரிசெய்து கொண்டுவிட்டாய். நீ சுத்தமாயிருக்கிறாய். உன் கணவர் உன்னுடன் தொடர்ந்து வாழ விரும்பினால், நீ மறுபடியும் அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாதபடிக்கு நற்பண்புள்ளவளாயிரு அவர் அக்குற்றத்தை மன்னிக்காவிட்டால், அது அவருடைய சொந்த விஷயம். அவர் உன்னைத் தள்ளிவிடலாம். முற்றிலும் உண்மை. இப்பொழுது, அச்செயலில் நீ ஈடுபட்ட அந்த மனிதன், அவர் தான் தன் மனைவியிடம் சென்று அவளை உன்னிடம் கூட்டிக் கொண்டு வர வேண்டும். உன் பாகத்தை நீ செய்து விட்டாய், அவர் தன்னுடைய பாகத்தை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பார். 46இந்த ஸ்திரீ அந்த மனிதனுடன் அந்த செயலில் ஈடுபட்டாள். அவள் தன் கணவரிடம் சென்று அதை அறிக்கையிட்டு விட்டு, அந்த மனிதனிடமும் சென்று அதை அறிக்கையிட்டு விட்டு, அதை சரிசெய்து கொண்டு விட்டாள். அந்த மனிதனும் விவாகமானவர். இப்பொழுது அவர் தன் மனைவியிடம் சென்று அவளைக் கூட்டிக்கொண்டு இந்த ஸ்திரீயிடம் வரவேண்டும். அப்பொழுது அது சரியாகி விடும். நான் கூறுவது விளங்குகிறதா? அப்பொழுது அது தீர்ந்து விடும். அதை செய்யாமல் போனால், உன் இருதயம் உன்னைக் குற்றப்படுத்திக் கொண்டிருக்கும். அண்மையில், முதலாம் உலகப் போர் முதற்கொண்டு இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்த ஒரு ஸ்திரீ என்னிடம் வந்திருந்தாள் . அவள், “ஓ, சகோ. பிரான்ஹாமே” என்றாள். அவள் மனநிலை நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து விட்டாள். அங்கு நான் உட்கார்ந்து கொண்டு அந்த அறையில் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மேடா அவளை இங்கு கொண்டு வந்திருந்தாள். அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு, கைக் குட்டையை தன் கையில் இப்படி பிசைந்து கொண்டு, “உலகம் வெடித்து விடப் போகிறது போன்ற உணர்வு எனக்கு உண்டாகிறது. நான்...” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தாள். நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் “இது ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. உன் வாழ்க்கையில் எங்காவது ஏதாகிலும் நடந்ததுண்டா?” என்று கேட்டேன். அவள், “இல்லை, நான் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை என்றாள். நான், “சரி” என்றேன். அங்கு சிறிது உட்கார்ந்து கொண்டு அவளைக் கவனித்தேன். “நான் பச்சை நிறக் கார் ஒன்றைக் காண்கிறேன், நீ வெள்ளை தலைமயிர் கொண்ட ஒரு மனிதனுடன் அதில் இருக்கிறாய். ஒரு ரயில் வண்டி ஏறக்குறைய அந்த காருடன் மோதி விட்டது” என்றேன். அவள், “அதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றாள். நான், “உன் கணவர் அப்பொழுது இராணுவத்தில் இருந்தார்” என்றேன். அவள் அழுது புலம்பி மேலே குதித்தாள். “அதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றாள். பாருங்கள்? அது அவள் உள்ளுணர்வில் குடி கொண்டிருந்தது. அவள், “நான் நீண்ட காலத்துக்கு முன்பே அதை தேவனிடம் அறிக்கை செய்து விட்டேன்” என்றாள். நான் “ஒரு நிமிடம் பொறு. நீ தேவனுக்கு விரோதமாக தவறு செய்யவில்லை. உன் விவாகப் பொருத்தனைக்கு விரோதமாக நீ ஒரு பாவத்தைச் செய்திருக்கிறாய். நீ உன் கணவரிடம் சென்று அதை முதலில் சரி செய்துகொள்ள வேண்டும்” என்றேன். அவள், “அவர் என்னை விட்டுப்போய் விடுவார்” என்றாள். நான், “தேவன் எப்படியும் உன்னை விட்டு போய்விட்டார். இப்பொழுது, யார் உன்னை விட்டுபோக வேண்டுமென்று நினைக்கிறாய்? உன் கணவரிடம் போ” என்றேன். அவள், “ஓ, நான் - நான்... அவர் இதை செய்வார், எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்றாள். நான், “நல்லது, இவ்வளவு தான் நான் உன்னிடம் கூற முடியும். மனநிலை நிபுணர் அதை உனக்குள்ளிருந்து வெளியே கொண்டு வரவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். உன்னை நான் என் வாழ்க்கையில் கண்டதேயில்லை! என்றேன். அவள், “அது முற்றிலும் உண்மையே. நல்லது, நான் அவரிடம் கூற முடியாது” என்றாள். நான், “நல்லது. நான் .... உன்னை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குச் சென்று விட்டேன். மேடா அங்கு வந்தாள். மேடா, “அவள் உங்களைக் காண விரும்புகிறாள்” என்றாள். ' நான் அங்கு சென்று, “உனக்கு என்ன வேண்டும்?” என்றேன். அவள், “சகோ. பிரான்ஹாமே, அதை என் கணவரிடம் என்னால் கூற இயலாது” என்றாள். நான், “உன் கணவர் கறுப்பு தலைமயிர் கொண்டவர்” என்றேன். “ஆம். நான், “அதேவிதமான ஒரு காரியத்தை அவர் உன்னிடம் அறிக்கை செய்ய வேண்டியவராயிருக்கிறார்” என்றேன். அவள், “ஓ, என் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல” என்றாள். நான், “நீ போய் அவரை இங்கு கூட்டிக் கொண்டு வா. ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ உனக்குத் தெரியுமா, அவள் 'பிங்க் நிற ஆடை அணிவதுண்டு. அவள் ஒரு குறிப்பிட்ட மோட்டார் வாகன நிர்வாகத்தின் அலுவலகத்தில் வேலை செய்கிறாள்” என்றேன். அவள், “நிச்சயமாக” என்றாள். நான், “அவளை ஒரு குறிப்பிட்ட பெயரால் அழைக்கிறார்கள் அல்லவா?” என்றேன். “ஆம்.” நான், “இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு 'பீச் (beech) மரத்தின் அடியில் ஒருபழுப்பு நிற ஷெவர்லே காரில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதன் லைசென்ஸ் நம்பர் இன்னின்னது. அவர்கள் அதே செயலில் ஈடுபட்டிருந்தனர்” என்றேன். அவள், “அது என் கணவராக இருக்காது” என்றாள். நான், “சரி, அவரை இங்கு கூட்டிக் கொண்டுவா” என்றேன். அவள் சென்றாள். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் இருவரும் வந்தனர். அவர், “அது உண்மை ” என்றார். நான், “பார்த்தாயா? நீ போய் தேவனிடம் சொல்” என்றேன். 47ஆனால் முதலாவதாக, நீ பலிபீடத்தினிடத்தில் வரும்போது, குறை உண்டென்று கண்டால், நீ போய் அதை சரி செய். அந்த நபர் தன் மனைவியிடம் அதை கூறாமல் குற்றவாளியாயுள்ளவரைக்கும்...... இந்த மனைவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள். இப்பொழுது அது மற்ற பெண்ணையும் அவளுடைய கணவரையும் பொறுத்தது. இந்த மற்ற மனிதனும் அவருடைய மனைவியும் அதை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னால் முடியாது .... நீ என்ன செய்த போதிலும், நீ அதை சுத்தமாக கழுவிக் கொள்ளாவிட்டால், அது உன்னை உன் வாழ்நாள் முழுவதும் அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். அதைச் செய்வதற்கு ஒரே வழியுண்டு; அதை அறிக்கை செய். அது உன் தோலை உரித்தாலும், அதை எப்படியும் செய். உண்மையைச் சொல், அப்பொழுது நீ அதை சரியாக பெற்றுக் கொண்டாய். ஆமென்! இந்த ஒலிநாடாவைக் கேட்கும் அநேகர், “இது தவறு என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அதை ஒருமுறை முயன்று பார்த்து அது சரியா என்பதைக் கண்டுக்கொள்ளுங்கள். சரி. 48ஞாயிறு காலைக்கு கேள்வி: (வருந்துகிறேன், இதை இந்த நேரத்தில்தான் பார்க்க முடிகிறது, ஆனால்...) பரிசுத்த ஆவியைப் பெறும் நேரத்தில், அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுகையில், ஏதாகிலும் வித்தியாசம் உண்டாகின்றதா? ஒரு நபர் அந்நிய பாஷையில் பேசுகின்றாரா? அப்படி எப்பொழுதும் இல்லாமல் போனால், வேறெந்த அடையாளம் காணப்படுகிறது? நல்லது. ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் ஒரு தாய் அதை அறியாமலிருப்பாளா? அவள் அதை அறியாமலிருக்க வேண்டுமென்றால், அவள் மயக்கமுற்ற நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது, அதை அறியாமலிருக்க முடியாது. ஏதோ ஒன்று உங்களில் நடக்கிறது. பாருங்கள்? ஏதோ ஒன்று உங்களை மாற்றுகிறது. உங்கள் முழுஅமைப்பு, உங்கள் ஆவிக்குரிய அமைப்பு முழுவதும் மறுபடியும் புதிதாகின்றது, வேதம் கூறுவது போல் நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகி விடுகின்றீர்கள். அதை நீங்கள் உணர்வீர்கள்.... இப்பொழுது, நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, அப்படியானால் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்பதை நீங்கள் நம்புவதில்லை” எனலாம். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான் என்பதை நிரூபிப்பதற்காக அல்ல. 49என் சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் தேவனிடத்தில் கேட்பீர்களானால், தேவன் அதை உங்களுக்குத் தந்தருளுவார். ஆனால் இதை உங்களிடம் கூற முற்படுகிறேன். அதாவது, பரிசுத்த ஆவியைப் பெற்றிராமல் அந்நிய பாஷையில் பேசும் அநேக ஜனங்களை நான் அறிவேன். தனக்கும் தன் சபையாருக்கும் உண்மையாயுள்ள எந்த ஒரு போதகரும் இதைப் பற்றி சபையாரிடம் கூறாமலிருக்கமாட்டார். பிசாசினால் அதை பாவனை செய்ய முடியும். பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், வேதத்திலுள்ள சகல இரகசியங்களையும் நான் அறிந்திருந்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், இவையனைத்தையும் செய்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்கிறான். அவன் மேலும், நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்' என்கிறான்,'' அதாவது நிறைவானது தெரியப்படுத்தப்படும்போது. அதன் பேரில் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. அதை இன்றிரவு பார்த்து விடுவேன் என்று நம்புகிறேன். அது முத்திரைகள் திறக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதைக் குறித்தது. ஒருக்கால் இந்த கேள்விக்கு அது சரியான பதிலாய் அமையும். 50கேள்வி: சகோ. பிரான்ஹாமே, நாங்கள் என்ன செய்வோம்? ஏதோ ஒன்று என் மேல் தங்கியுள்ளது, அதிலிருந்து விடுபட என்னால் முடியவில்லை. போன இலையுதிர்காலத்தின் போது, நான் வெள்ளை மணலில் காணாமற்போனதாக கனவு கண்டேன். அப்பொழுது இருளாகிக் கொண்டிருந்தது. என்னால் என் வழியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சென்ற இலையுதிர் காலம் முதற்கொண்டு அந்த கனவு எனக்கு உண்டாகிக் கொண்டேயிருக்கிறது. இப்பொழுது நான் இருளில் தடுமாறும் ஒருவனைப்போல் இருக்கிறேன். என் மகன் எர்வினும் என் மனைவியும் என் கனவில் இருந்தனர் அவர்களும் இருளில் இருக்கின்றனர். நாங்கள் பதற்ற முற்றிருக்கிறோம். எங்கள் இருதயங்களில் என்ன உள்ளதென்று தேவன் உமக்குக் காண்பிப்பார் என்று விசுவாசிக்கிறோம்.(திருமதி... ஓ, சரிதான்). நாங்கள் தவறாகவோ அல்லது பாவம் செய்கிறவர்களாகவோ இருப்போமானால், தயவுகூர்ந்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நாங்கள் சரியாக இருக்க விரும்புகிறோம். அந்த அம்மணியை எனக்குத் தெரியாது. அம்மணியே நீ இங்கிருக்க நேர்ந்தால், இதுதான் உன்கோளாறு என்று நினைக்கிறேன். ஏதோ ஒன்று உனக்கு சம்பவிக்க நீ அனுமதித்ததன் காரணத்தால், அது உனக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் “வெள்ளை மணல்” தூய்மைக்கும் நீதிக்கும் எடுத்துக்காட்டாயுள்ளது. சாத்தான் ஏதோ ஒன்றை உன் மேல்சுமத்த நீ அனு மதித்துக் கொண்டிருக்கிறாய். உன் கனவு, தவறு எதுவுமில்லை என்பதை நிரூபிக்கிறது. நீ பயம் கொண்டிருக்கிறாய், இதை நீ செய்வதன் மூலம், அதைக் குறித்து யோசித்துக் கொண்டேயிருப்பதன் மூலம் உன் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் பயந்துபோகும்படி செய்கிறாய். அவ்விதம் செய்வதை நிறுத்து; தேவனால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை உரிமை கோரு. நீ வெள்ளை மணலில் இருப்பதாக கண்ட சொப்பனத்தின் அர்த்தம், எல்லாமே சரியாயுள்ளது என்பதை நிரூபிக்கிறது. நீ தான் பயந்து போயிருக்கிறாள். நீ குடும்பத்திலுள்ள ஒருவர் பயந்து போகும்படி செய்தால் அது அடுத்த அங்கத்தினருக்கு, அடுத்த அங்கத்தினருக்கு பரவுகிறது. அப்பொழுது நீங்கள் அனைவரும் பயந்துவிடுகிறீர்கள். குடும்பத்திலுள்ள ஒருவர் ஏதாவதொன்றைக் குறித்து கவலை கொண்டால், அது அடுத்தவருக்கு, அடுத்தவருக்கு பரவி விடுகிறது. அப்பொழுது குடும்பம் முழுவதுமே கவலைக்குள்ளாகின்றது. அது சாத்தான். குடும்பத்திலுள்ள ஒருவர் களிகூர்ந்தால், குடும்பத்திலுள்ள மற்றவர் அவருடன் களிகூரட்டும். எனவே குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அதைச் செய்ய முயலுங்கள். 51பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உதவிசெய்யுங்கள். அம்மா, நீ .... அப்பா, உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள். அந்த இருண்ட, அவிசுவாசமான ஆவி உங்களைப் பீடிக்க இடங்கொடாதீர்கள். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். தேவனால் அளிக்கப்பட்ட உரிமைகள் 'உங்களுக்கு உண்டு. “புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அதையே சிந்தித்துக் கொண்டிருங்கள்” என்று வேதம் உரைக்கிறது. (பிலி: 4:8). தவறான காரியத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள். சகோதரியே, அதுவே உன் தொல்லை என்று நினைக்கிறேன், அருமை சகோதரியே. இதன் பேரில் நீண்ட நேரம் நிலைத்திருக்கக் கூடும். ஆனால் நான் வாக்களித்தபடி, இன்னும் இருபது நிமிடங்களில்... எத்தனை கேள்விகளைப் பார்க்க முடியுமோ, அவைகளைப் பார்க்க விரும்புகிறேன்... விடை திருப்தியளிக்கவில்லை என்றால், அதை மறுபடியும் மேசையின் மேல்வைத்து விடு, அதை மீண்டும் பார்ப்போம். 52சிலர் சகோ.பிரான்ஹாம் மனுஷகுமாரன் என்கின்றனர். என் கருத்தின்படி அக்கினி ஸ்தம்பமே மனுஷகுமாரன். நான் தவறா? நல்லது. அது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி . நான் அந்த மனுஷகுமாரன் அல்ல, ஒரு மனுஷகுமாரன். இவ்விரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு மனுஷ குமாரன், தேவ குமாரன், தாவீதின் குமாரன். இந்த நபர் இந்த கேள்வி கேட்டதன் காரணம்; அல்லது இவ்விதமான கருத்து நிலவி வருவதன் காரணம். ஜனங்கள் என்னை ஞானதிருஷ்டிக்காரனாக (scer) எண்ணுகின்றனர். நான் ஒருபோதும் அவ்விதம்... அதன் பேரில் என்னை பயங்கரமாக திட்டுகின்ற ஒரு கேள்வி என்னிடம் உள்ளது. பாருங்கள்? ஆனால் நான் - நான் - நான் - நீங்கள் - நீங்கள்... இந்தக் கேள்விகளை நான் படிக்கும்போது. நான் இந்த விதமாக ஏன் பதிலளிக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். நான் ஏதாவதொன்றைச் செய்ய நிச்சயமாக வழி நடத்தப்படும் வரைக்கும்; அப்பொழுது நான் கூற வேண்டியதைக் கூறுவேன். ஆனால் அந்த நேரம் இன்னும் வரவில்லை. எனவே நான் அபிஷேகிக்கப்பட்ட மனுஷகுமாரன் அல்ல. நான் அவருடைய தீர்க்கதரிசி என்று உரிமை கோருவதில்லை. அநேக முறை. இதை நான் கூறவில்லை என்று நினைக்கும் போது, இதை கூறியிருக்கிறேன். நான் கூறியுள்ளதை ஒலிநாடாவில் கேளுங்கள். சில சமயங்களில் இதைநான் கூறுகிறேன். ஏனெனில், தீர்க்கதரிசி என்னும் ஆங்கிலச் சொல் 'பிரசங்கி' என்று அர்த்தம் கொண்டது. அது எல்லோருக்கும் தெரியும். அகராதியைப் பாருங்கள். தீர்க்கதரிசி என்றால் பிரசங்கி' என்று ஆங்கில அகராதி கூறுகிறது. ஆனால் எபிரேயு அல்ல கிரேக்க மொழியில் தீர்க்கதரிசி' என்றால், “ஞானதிருஷ்டிக்காரன், ஒன்றை முன் கூட்டிக்கண்டு, அதை முன்கூட்டி அறிவிப்பவன்” என்று பொருள். ஆனால் ஆங்கில அர்த்தத்தின்படி, அது 'பிரசங்கி'. எனவே, என்னை உங்கள் சகோதரன் என்று அழைத்துக் கொள்வதை தவிர, மற்ற எந்த பெயராலும் என்னை அழைத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் உங்கள் சகோதரன், நீங்கள் என்னை சகோ. பில் அல்லது சகோ.பிரான்ஹாமாகக் கருதுங்கள், அல்லது நீங்கள் அதைக் குறித்து என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அது நன்றாயிருக்கும். வேறெந்த... நீங்கள் என்ன விசுவாசிக்கின்றீர்களோ, அதை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். பாருங்கள்? 53இப்பொழுது, மற்ற கேள்வி என்ன? இவற்றில் நான் மிகவும் காயப்படுகிறேன், மற்றவைகளை மறந்து விடுகிறேன். கேள்விகளில் ஒன்று, நான் மனுஷகுமாரனா என்பது. மற்றது இது தான் என்று நினைக்கிறேன் .... “ அக்கினி ஸ்தம்பம் மனுஷகுமாரனா?” இல்லை! அக்கினி ஸ்தம்பம் என்பது அபிஷேகம் செய்யும் ஒன்று. அக்கினி ஸ்தம்பம்... இது உங்களுக்கு சற்று ஆழமாக இருக்கலாம். இங்குள்ள சில வேதபண்டிதர்களுக்கு - இங்குள்ள சகோ. டாக்டர் வேய்லுக்கும், ஆர்கான்ஸாவிலிருந்து இங்கு வந்துள்ள சில போதர்களுக்கும், இங்குள்ள எனது சில நண்பர்களுக்கும் இது ஒருக்கால் தெரிந்திருக்கலாம். இப்பொழுது, அந்த அக்கினி ஸ்தம்பம் என்பது தேவனிடத்திலிருந்து புறப்பட்டு சென்ற லோகாஸ்' (Logos). லோகாஸ்' என்பது உண்மையில் தேவனுடைய பரிபூரணத்தின் தன்மையாகும் (attribute). தேவன் காணக்கூடிய ரூபமான போது, அந்த மகத்தான ஆவியின் அபிஷேகம் புறப்பட்டுச் சென்றது. அது தன்னைத் தாழ்த்தி, இறங்கி வருகிறது. பிதாவாகிய தேவன், இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேலேயிருந்த 'லோகாஸ்'... அவர் பரிசுத்தமுள்ளவரானதால், அவரால் பாவத்தைச் சகிக்க முடியவில்லை. ஏதேனில் அதற்காக இரத்தம் செலுத்தப்பட வேண்டியதாயிருந்தது. பிறகு அந்த லோகாஸ் மாம்சமாகி, நமது மத்தியில் வாசம் பண்ணினார்; லோகாஸ் வாசம் செய்த மானிட சரீரம் பலியாக செலுத்தப்பட்டது... 54மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட போது... அதன் பிறகு தேவன் மனிதனை மீட்டுக்கொள்வதற்கென மனுஷ சாயலானார்; அது மனிதனையும் தேவனையும் ஒன்றாக இணைத்தது. பரலோகமும் பூலோகமும் தழுவி ஒன்றையொன்று முத்தம் செய்து கொண்டன. லோகாஸ் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் . செய்த போது, தேவனும் மனிதனும் பிதாத்துவத்திலும் குமாரத்துவத்திலும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர். இயேசு, “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன்” என்றார் (யோவான் 16:28). அது சரியா? அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, தேவனுடைய வலதுகரத்தில் (பாரிசத்தில்) வீற்றிருக்க, அவருடைய சரீரம் மேலே எடுக்கப்பட்ட போது... தேவனுக்கு வலதுகரம் உள்ளதாக நான் கூறு முற்படவில்லை, தேவன் ஆவியாயிருக்கிறார். வலதுகரத்தில் என்பது “தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறதாயுள்ளது. அவருடைய நாமத்தினால் பரலோகத்திலுள்ள ஒவ்வொன்றும் பெயரிடப்பட்டு, அதற்கு கீழ்ப்படிந்துள்ளது. பூலோகத்திலுள்ள ஒவ்வொன்றும் அந்த நாமத்தினால் பெயரிடப்பட்டு அதற்கு கீழ்படிந்துள்ளது. இயேசு கிறிஸ்து என்னும் நாமம் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமாயுள்ளது. இப்பொழுது, அவருக்குள் வாசம் செய்திருந்த தேவனுடைய ஆவியான, அபிஷேகமான, இந்தலோகாஸ், இரத்தத்தின் பரிசுத்தமாக்கும் கிருபையினால், அநேக தேவ குமாரர்களைக் கொண்டு வந்தது, அவர்களும் இந்த அதே லோகாஸினால் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர். 55இப்பொழுது, பெந்தெகொஸ்தே நாளில், அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்து, அக்கினி மயமான நாவுகளாகப் பிரிந்து ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. அவர்களுடைய நாவுகள் அல்ல, அக்கினி மயமான நாவுகள், தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டம் மக்களின் மேல் அமர்ந்தது. அவர்கள் இந்த அக்கினி ஸ்தம்பத்தினால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டனர். அது தேவன் தம்மை மனிதனுக்குள் பிரித்துக் கொண்டார் என்பதைக் காண்பிக்கிறது. உங்களுக்கு புரிகிறதா? லோகாஸ் ஆகிய தேவன், தம்மை மனிதனுக்குள் பிரித்துக் கொள்ளுதல்! தேவன் ஒரு நபருக்குள் அல்ல, அவர் உலகம் முழுவதிலுமுள்ள தமது சபைக்குள் இருக்கிறார். ஆகையால் தான் இயேசு, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வீர்கள்” என்றார் (யோவான் 14:12). ஜேம்ஸ் அரசனின் வேதாகமம் “பெரிய கிரியைகள்” என்றுரைக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் சரியான மொழிபெயர்ப்பு'' இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வீர்கள் என்பதே. தேவன் இயேசு என்னும் ஒரு மனிதனில் அடைக்கப்பட்டு (bottled) அவரில் உட்பட்டிருந்தார். ஆனால் இப்பொழுதோ அவர் உலகம் பூராவிலும் வியாபித்திருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய சபை முழுவதிலும் அடைக்கப்பட்டு, அதில் உட்பட்டிருக்கிறார். இப்பொழுது, தேவன் நம்முடன் நம்முடைய இருதயங்களில் பேசிக்கொண்டிருக்கும் இதே தருணத்தில், அவர் ஆப்பிரிக்காவில் இருக்கிறார், அவர் ஆசியாவில் இருக்கிறார், அவர் ஐரோப்பாவில் இருக்கிறார், அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். விசுவாசிகள் எங்கெல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் அவர் இருக்கிறார். 56இப்பொழுது, அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, அவர் பரிசுத்த ஆவியாக வந்தார். பவுல் - அப்பொழுது அவன் சவுல் என்று அழைக்கப்பட்டான் தமஸ்குவுக்குப் போகும் வழியில், அவன் லோகாஸ் ஆகிய அக்கினி ஸ்தம்பத்தால் கீழே வீழ்த்தப்பட்டான். ஒரு யூதன், அதே லோகாஸ் தான் அவனுடைய ஜனங்களை வனாந்தரத்தில் வழிநடத்திச் சென்றது என்பதை அறிந்திராமல் போனால், அந்த அக்கின ஸ்தம்பத்தை அவன் “ஆண்டவரே” என்று ஒருக்காலும் அழைத்திருக்கமாட்டான். பாருங்கள்? அது மனுஷகுமாரன் அல்ல, அது லோகாஸ். இப்பொழுது, இதை நாம் பயபக்தியோடும், அன்போடும், மரியாதையோடும் கூறுகிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதால், லோத்தின் காலத்திற்கு முன்பு, இல்லை, சோதோமில் லோத்தின் நாட்களில் நடந்தது போல, கடைசி நாட்களில் மனுஷகுமாரன் தம்மை மறுபடியும் வெளிப்படுத்துகிறார், அவர் தம்மை மறுபடியும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த கடைசி நாட்களில், இயேசுவின் மேல் தங்கியிருந்து, அங்கிருந்து மறுபடியும் அக்கினி ஸ்தம்பத்துக்கு திரும்பிச் சென்ற லோகாஸ் பூமிக்கு இறங்கி வந்துள்ளது. (நான் ஏதோ ஒன்றைக் கூறப்போனேன். ஆனால் நான் ஒலிநாடாவை கவனித்தேன். நீங்கள் சொன்னாலும் அவர்கள் அதை நம்பமாட்டார்கள். அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. அவர்கள்... ஜனங்கள் அதை நம்பமாட்டார்கள். அதை கூறாமல் விட்டு விடுகிறேன் - அவர் இறங்கி வந்துள்ளார், இப்பொழுது புலன் விசாரணை நியாயத்தீர்ப்பு (investigating judgement) போன்ற ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. 57இப்பொழுது, இன்று பூமியிலுள்ள இந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் விஞ்ஞானப் புகைப்படக் கருவிகளாலும் கூட முற்றிலுமாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிட்டது. அதன் புகைப்படம் அதோ அங்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படம் இப்பொழுதும் அங்குள்ளதென்று நினைக்கிறேன், அது சரியா? அது அங்குள்ளதா? நமக்குள்ள மிகச் சிறந்த ஒருவரால் அது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க போலீஸ் துப்பறியும் பிரிவில் கைரேகை மற்றும் தஸ்தாவேஜுகளை ஆராயும் பகுதியின் தலைவரான ஜார்ஜ். ஜே.லேஸி என்பவர், “சங்கை பிரான்ஹாமே. நானும் கூட அதை மனோதத்துவம் என்று தான் அழைத்து வந்தேன். ஆனால் ஒளி புகைப்படக் கருவியின் 'லென்ஸ்' மேல்பட்டது. அதை நான் நான்கைந்து நாட்களாக அல்ட்ரா வயலட் கதிர்களைக் கொண்டு பரிசீலனை செய்தேன். ஒளி 'லென்ஸ்' மேல்பட்டது. இந்த லென்ஸ் மனோதத்துவத்தை புகைப்படம் எடுக்காது” என்று கூறினார், இப்பொழுது அது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விட்டது. அது செய்யும் கிரியைகளைக் கவனியுங்கள். நமது மத்தியிலுள்ள அது, ஒரு காலத்தில் பாலஸ்தீனாவில் வாழ்ந்த அதே இயேசுவை நிரூபிப்பதாய் உள்ளது. அவர் மேல் தங்கியிருந்த அதே ஆவி, ஒரு சரீரத்தின் வழியாக வந்து மறுபடியும் தலைமைக்கு (Headship) வந்து முடிகிறது. அவர் சீக்கிரமாக வந்து சரீரத்தை உரிமைகோரி பெற்றுக்கொள்வார். ஆமென்! தலையானது சரீரத்துக்கு வருகிறது. உங்களுக்கு புரிகிறதா? அது தேவகுமாரன், மனுஷகுமாரன், தாவீதின் குமாரன், இருக்கிறேன் என்பவராய், சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம், விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கும். 58நான் அவரல்ல; நான் அவருடைய ஊழியக்காரன். அக்கின ஸ்தம்பம் அவரல்ல; அது ஆவியின் ரூபத்தில் உள்ளது. (பாருங்கள்?) அது மனுஷகுமாரனின் மேல் தங்கியிருந்து, இப்பொழுது மனுஷகுமாரர்களை அபிஷேகிப்பதற்கென இறங்கி வந்து, தலையையும் சரீரத்தின் மற்ற பாகங்களையும் ஒன்றாக இணைப்பதற்கென, அவர் உரைத்த விதமாகவே ஓரு ஊழியத்தை திரும்பக்கொண்டு வந்துள்ளது. ஏனோக்கு கட்டின அந்தக் கூர் நுனிக் கோபுரம் போல. கூர்நுனிக் கோபுரத்தின் மேல் அவர்கள் தலைக்கல் வைக்கவில்லை என்பதாக நாம் அறிகிறோம். ஏன்? தலைக்கல் இனி வரவேண்டும். கூர்நுனிக் கோபுரத்தில் உள்ள ஏழுபடிகள்... அதை என்றாவது ஒரு நாளில் பார்ப்போம். அது எவ்வளவு உண்மையாக பரிபூரணமாக வேதவாக்கியங்களுடன் இணைகிறது என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். 59இப்பொழுது, உங்கள் அமெரிக்க டாலர் நோட்டை நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த மகத்தான தலைக்கல், ஒரு கண், “அந்த மகத்தான முத்திரை” என்று கூறுகிறது. அது வரும். அந்த கற்களைக் கவனியுங்கள். இங்குள்ள எவராகிலும் எகிப்திலுள்ள கூர்நுனிக் கோபுரங்களைக்காண எப்பொழுதாகிலும் சென்றதுண்டா? நல்லது. நீங்கள் கவனிப்பீர்களானால்.... அங்கே, அவைகளைக் கண்டுள்ளதாக பின்னால் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சரி. அந்த கற்கள் அங்கே மிகவும் பரிபூணமாக வைக்கப்பட்டுள்ளன, அந்த உச்சியில், வளைவாக உள்ள அந்த உச்சியில், அந்த கல் வரும் போது, ஒரு பெரிய இரத்தினக் கல் அதில் மிகவும் பரிபூரணமாக பொருந்துவதாக இருக்கும். இப்பொழுது, அந்த கல் கீழேயுள்ள அஸ்திபாரத்தில் பொருந்தாது. அது இரண்டாம் அஸ்திபாரம் அல்லது மூன்றாம் அஸ்திபாரத்தில் பொருந்தாது. அது மேலேயுள்ள அஸ்திபாரத்தில் மட்டுமே சரியாக பொருந்தும். அப்பொழுது கட்டிடம் முழுவதுமே அந்த கல்லுடன் பொருந்தினதாய் இருக்கும். சபையானது. விசுவாசிகளின் சரீரமும், இயேசு ஒரு காலத்தில் விட்டுச் சென்ற அந்த ஊழியம் மறுபடியும் வருகிற வரையிலும் அவர் வர முடியாது... அப்பொழுது. அது எதைக்கொண்டு வருகிறதென்றால்..“ அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு” என்று பவுல் எபிரெயர் 11ம் அதகாரத்தில் கூறியுள்ளான்.“அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கும். காலங்கள் தோறும் இருந்த லுத்தரன்களை, வெஸ்லியன்களை, இன்னும் மற்றவர்களை உயிரோடெழுப்ப அவர்களுக்கு இந்த ஊழியம் இருக்க வேண்டியது அவசியம். அது வரும்போது, கழுகுகள் கூடும் அந்த பாகம் வரும்போது... பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்”. (மத். 24:28). அதுதான் கேள்வி. ஓ, அது மிகவும் பரிபூரணமாய் உள்ளது. அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு விட்டதென்று நம்புகிறேன். 60கேள்வி: சகோ.பிரான்ஹாமே, பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள ஒரு நபரில், சாத்தான் பாஷைகள் பேசும் வரம் அல்லது தீர்க்கதரிசன வரத்தை உபயோகிக்க முடியுமா? அது ஒரு நல்ல கேள்வி, இல்லையா? ஆம், ஐயா.... அது மிகவும், மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும். நீங்கள் கவனிப்பீர்களானால், 1 கொரி 14:29ல், இதைக் குறித்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு... பாருங்கள்? இந்த கேள்வியை எழுதின நபர் தன் பெயரைக் கையொப்பமிடவில்லை; அவர் “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று மட்டும் கூறியுள்ளார். பாருங்கள்? 1கொரி.14:29ன்படி, சபையில் உள்ள எந்த ஒரு வரமும் முதலில் நிதானிக்கப்பட வேண்டும் என்று நாம் காண்கிறோம். பாருங்கள்? நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் பொல்லாத ஆவிகள் மெல்ல உள்ளே நுழைந்து விடும். ஏனெனில், மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோதுமையை முதிரப்பண்ண அனுப்பப்பட்ட அதே மழை, அதே தண்ணீர், களையையும் முதிரப் பண்ணுகிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்? அப்படியானால், அது சர்ப்பத்தின் வித்து என்பதைக் குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும், எப்படி இந்தக் குமாரன் தோன்றினான் என்று. என் நேரம் முடிவதற்கு முன்பு, இதைக்குறித்த கேள்வியை இவைகளிலிருந்து பொறுக்கியெடுக்க முயன்று கொண்டிருக்கிறேன், என்னால் அதை கண்டுபிடிக்க இயலவில்லை; எனவே, சர்ப்பத்தின் வித்தாகிய அந்த குமாரன் எப்படி தோன்றினான் என்று. பாருங்கள்? தேவனுக்கு ஒரு பிரமாணம் உண்டு. இப்பொழுது, இதன் பேரில், இந்த ஜீவனின் ஆவியைக்குறித்த பிரமாணத்தை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் சாத்தான் மெல்ல உள்ளே நுழைந்து விடுவான். யாருக்காகிலும் ஏதாவதொன்று வெளிப்படுமானால், அது சபைக்கு முன்னால் கூறப்படுவதற்கு முன்பு, குறைந்தது இரண்டு மூன்று பேர்களால் நிதானிக்கப்பட வேண்டும் என்று பவுல் கூறியுள்ளான். 61இப்பொழுது, இதையும் நான் கூற முற்படுகிறேன். நான் என் .... என் சகோதரன் இன்றிரவு இங்கில்லை என்று எண்ணுகிறேன். இக்கூட்டத்தை விட்டு சகோ. ஜூனியர் ஜாக்சன் சபைக்கு சென்ற ஒருவரைக் குறித்து, அவர் செத்துப் போன பறவைகளின் மத்தியில் சென்றுவிட்டார்'' என்று யாரோ ஒருவர் குறிப்பிட்டாராம். அவ்விதம் கூறுவது உங்களுக்கு வெட்கமாயில்லையா? நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் என் குழந்தையாக இங்கு இருப்பீர்களானால், உங்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யாதீர்கள். ஜுனியர் ஜாக்சன் என் சகோதரன். டான் ரட்டல் என் சகோதரன். நல்லது, அதற்கு காரணம் என்னவெனில், நான் சபையை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குக்குள் அமைத்து, வரங்களின் கிரியைகளை பெற்றுக்கொள்ள முடியுமா என்று காண நான் திரும்பி வரும்போது, அவர்களில் பாதி பேர் அந்த ஒழுங்கிலிருந்து அகன்று விட்டிருந்தனர். ஏனெனில் நீங்கள் பேசத் தொடங்கும்போது அல்லது பிரசங்கிக்கும் போது, அல்லது வேறெதாவதொன்றைச் செய்யும்போது... யாராகிலும் அந்நிய பாஷைகளில் பேசி, யாராகிலும் அதற்கு அர்த்தம் உரைக்காமல் உங்களால் பிரசங்கம் செய்ய இயலாது என்னும் நிலைக்கு அது வந்து விட்டது; அவைகளில் பாதி கூட நிறைவேறுவதில்லை. 62இப்பொழுது, அந்நிய பாஷைகள் பேசுவதில் எனக்கு நம்பிக்கையுண்டு, அர்த்தம் உரைப்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு, ஆனால் அது சபைக்கு நேரடியாக உள்ள ஒன்றாக இருக்க வேண்டும், “கர்த்தர் சீக்கிரமாக வருகிறார்” அல்லது அப்படி ஏதாவதொன்றல்ல. “நீங்கள் அஞ்ஞானிகளைப் போல் வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்.” என்று இயேசு கூறியுள்ளார். (மத்.6:7). அது இப்படி ஏதாவதொன்றாக இருக்க வேண்டும்: “நீ போய் சகோ. இன்னாருடன் அவர் இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்தார். என்றோ சகோதரி இன்னாருடன், அவள் அன்றொரு நாள் இந்த குறிப்பிட்ட காரியத்தை செய்த போது, அவள் தன் கணவனுக்கு செய்த பொருத்தனையை மீறினாள். அவள் அதை சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால், பரிசுத்த ஆவியினால் அவள் அறுப்புண்டு போவாள் என்று சொல் என்பதாக இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவர்களாயிருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் பாவத்தை உணர்த்துகிறீர்கள். அனனியாவும் சப்பீராளும் உள்ளே வந்தபோது இருந்தது போன்ற சபையை நாம் பெற்றிருப்போமானால், நாம் திடமான சபையைப் பெற்றிருக்கிறோம். நீங்கள், “ஓ, சகோ.பிரான்ஹாமே...' என்கிறீர்கள். ஒரு ஆளிடம் நான் இதைக் கூறினபோது, அவர்; ”நீங்கள் ஒரு இறுக்கமான நிலையில் எங்களை வைத்து விடுகிறீர்கள்“ என்றார். நான், “என் வாழ்நாளில் நான் கண்டிராத அந்நியர்களுக்கு முன்னால் நான் இறுக்கமான நிலையில் இல்லையா? ஆனால் இதைச் செய்ய என்னை அனுப்பின் என் தேவனிடம் எனக்கு விசுவாசமும் நம்பிக்கையும் உண்டு. ஒரு முறையாவது அது தவறாயிருந்ததில்லை, அது தேவனாயுள்ள வரைக்கும் அது ஒருபோதும் தவறாயிராது” என்றேன். அது உண்மை. 63அவ்விதமாக பாஷை பேசுதலும் மற்ற காரியங்களும் அல்ல... இந்த அந்நிய பாஷை பேசுதலும், அந்த வரங்களைப் பெற்றுள்ள மக்களும், அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாயிருந்து அதில் சிரத்தை கொண்டிருந்தால், அவர்கள் ஒன்று கூடி தங்கள் அந்நிய பாஷைகளையும் அதன் அர்த்தத்தையும் அளித்து, தேவனுடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்துக்காக அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு தங்கள் சொந்த ஊழியம் ஒன்றுண்டு, ஆனால் அது கூட்டங்களில் பாவிகளின் மத்தியில் இடைபட்டுக் கொண்டிருக்கும்போது அல்ல. “ அவர்கள் ''நீங்கள் கல்லாதவர்கள் என்பார்கள்” என்று வேதம் உரைக்கிறது. சிலசமயங்களில் அவர்கள் மிகவும் அவபக்தியுள்ளவர்களாகி விடுகின்றனர். நம்முடைய குழு அவ்விதமாக ஆகவில்லை என்றல்ல, சிறிது காலம் அவர்களை அவ்விதமே விட்டு விட்டிருக்கிறேன். “கவனித்து வாருங்கள்” என்று நான் சொன்னேன். 64இப்பொழுது, இந்த சகோதரரிடம் நான் (அதை அறிந்த சாட்சிகள் இங்குள்ளனர்), “அதை தனியே விட்டுவிடுங்கள், சற்று கழிந்து, அது தேவனால் உண்டானதா இல்லையா என்று நாம் பார்ப்போம். அது சிட்சையை சகிக்காவிட்டால், அது வேசிப்பிள்ளை” என்றேன். அப்படித்தான் வேதம் உரைக்கிறது (எபி. 12:8). சிட்சை வந்தபோது என்ன நடந்தது. நீண்ட காலம் முன்பு என்ன நடந்தது என்று நான் உங்களிடம் கூறியிருக்கிறேனா? பாருங்கள்? இங்குள்ள மேய்ப்பனைக் கேளுங்கள். அவர், “இதைக் குறித்தென்ன, அதைக் குறித்தென்ன?' என்று கேட்டார். நான், “அதை தனியே விட்டுவிடுங்கள். அவர்கள் குழந்தைகள். அதை நாம் நிதானிக்க முடியாது. ஆனால் அதை வார்த்தைக்கு உட்படுத்தும்போது என்ன நடக்கிறதென்று கவனியுங்கள்” என்றேன். இப்பொழுது, அதனுடன் இணங்காமலிருக்க சகோ. ''ஜூனியர் ஜாக்சனுக்கு உரிமையுண்டு. அவர் விரும்புவது, தமது சபை... சபையோரின் மத்தியில் ஜனங்கள் எல்லோரும் அந்நிய பாஷை பேச விரும்புகின்றனர். அது சகோ.ஜூனியரின் தொல்லை அது அவரைப் பொறுத்தது. ஆனால் நாம் விசுவாசிப்பது போலவே ஜூனியர் ஜாக்சனும் இந்த செய்தியை விசுவாசிக்கிறார். அவர் நம்மில் ஒருவர். அங்கு போவதனால் ஒருவர் 'செத்தபறவை' ஆகி விடுவதில்லை. ஜூனியர் ஜாக்சன் தேவனுடைய மனிதன், அவரை என் முழு இருதயத்தோடும் நான் நேசிக்கிறேன். அவர் இன்றிரவு இங்கில்லை, எனவே நான் விரும்பும் விதமாக இதை வெளிப்படையாகக் கூறலாம். 65டான் ரட்டல்... டான் இன்றிரவு இங்கில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு தங்கள் சொந்த சபை ஒன்றுண்டு. இந்த கூடாரத்துக்கு வரும் ஒவ்வொருவரும் வெளிவந்து டான் ரட்டல் அல்லது ஜே.டி.பார்னல், அல்லது நமது சகோதரர்களாயும் தேவனுடைய ராஜ்யத்தில் உடன் குடிமக்களாயும் உள்ளவர்கள் நடத்தும் சபை ஏதொன்றுக்கும் செல்வார்களானால், நான் மிக்க மகிழ்ச்சியடைவேன், எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது. நான், “கர்த்தாவே, இதை நீர் மறுபடியும் நிரப்புவீராக. அதை வெளியே ஊற்றிவிட்டு வேறொன்றை நிரப்புவீராக” என்பேன். அது எனக்கு பிரியமாயிருக்கும். இந்த பையன் நிரப்பப்படுவதைக் காண நான் பிரியப்படுவேன். அவர்கள் என் பிள்ளைகள். இப்பொழுது ஜே.டி. அல்லது மற்றவர்கள் நான் விசுவாசிப்பது போல் விசுவாசிக்க வேண்டியதில்லை; அவர்கள் அவ்விதம் செய்ய வேண்டியதில்லை. இன்று காலையில் நான் உங்களிடம் கூறினது போல், என் மனைவியுடனும் கூட நான் கருத்தொருமிப்பதில்லை, அவளும் என்னுடன் கருத்தொருமிப்பதில்லை. நான் உண்ணும் மேசைக்குச் சென்று, ஜூனியர் 'ஆப்பிள்பையும் நான் செர்ரிபையும் உண்கிறோம் என்றால், சகோதரனே, நாங்கள் இருவருமே 'பை' தான் உண்கிறோம். அவ்விஷயத்தில் எங்களுக்கு ஒருமைப்பாடு உண்டு, ஆனால்... நாங்கள் இருவருமே அதே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம். அவருடைய சபை ஒழுக்கம்... 66பேதுருவுக்கும் பவுலுக்கும் கருத்து வேற்றுமை உண்டாயிருந்தது, அது உங்களுக்குத் தெரியும், அவர்களுடைய உப்தேசங்களில் அல்ல, ஆனால் பேதுரு நடந்து கொண்ட விதத்தில். அவர்களுக்கு அந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை இருந்தது, ஆனால் அது அவர்களைப் பிரித்துவிடவில்லை. அவர்கள் சகோதரர்களாயிருந்தனர். நிச்சயமாக நமக்கும் கருத்து வேற்றுமைகள் இருக்கும்... எனக்கு அசெம்பிளீஸ் ஆப் காட் ஸ்தாபனத்துடன் கருத்துவேற்றுமை உண்டு. அவர்களுடைய முறைமைகளுடன் எனக்கு கருத்து வேற்றுமை உண்டு, ஆனால் அசெம்பிளீஸ் ஆப் காட் சபையில் உள்ள பலர் விலையேறப் பெற்றவர்கள். நான் பாப்டிஸ்டுகளோடும், பிரஸ்பிடேரியன்களோடும், அவர்களுடைய முறைமைகளுடனும் கருத்து வேற்றுமை கொண்டுள்ளேன், ஆனால் அவைகளில் உத்தமமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். 67இன்று பிற்பகலில் எனக்கு ஒரு தந்தி வந்தது. அதை நான் எங்கோ வைத்து விட்டேன். ஒரு சகோதரன், ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியார், மனிதர் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதற்கு பதிலாக, மனிதன் தேவனுக்கு மரியாதை செலுத்தும் ஒரு இடத்துக்கு வர அவர் நீண்ட காலம் முயன்று கொண்டிருப்பதாக கூறினாராம். இந்த சபைக்கு வரும் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன் அவரிடம் “அந்த விதமான இடத்துக்கு உங்களை நான் கொண்டு செல்கிறேன்” என்றாராம். அவர் இங்கு வருவதற்கு மிகுந்த ஆவல்கொண்டிருந்தார். ஒரு பாப்டிஸ்டு. பாருங்கள். அவர்கள் எல்லா விடங்களிலும் சிதறியுள்ளனர். அவர்களுடைய முறைமையுடன் நான் இணங்கமாட்டேன், ஆனால் அந்த குழுவின்பேரில் நான் அன்பு கெண்டுள்ளேன். எனவே சகோதரர்களைக் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லாதீர்கள். இங்கே, இந்த வரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. எந்த ஒரு வரமும்... அதை கவனிக்க வேண்டும். சாத்தான் எந்த ஒரு வரத்தையும் பாவனை செய்ய முடியும். இந்த 'பீட்டில்ஸ்'களை பாருங்கள், அவர்கள் இப்பொழுது தெய்வீக சுகமளித்தலை பாவனை செய்யப்போகின்றனர், அசுத்தமான, அழுக்கான, அழுகிப் போன நரகத்திலிருந்து பிறந்த இவர்கள். பாருங்கள்? சரி. 68கேள்வி: தானியேல் அக்காலத்து தீர்க்கதரிசியாயிருந்தபடியால் அக்கினி சூளையில் காணப்பட்ட நாலாம் ஆள் தானியேலா? இல்லை, அது இயேசு. நாலாம் ஆள் தேவ புத்திரனுக்கு ஒப்பாயிருந்தார். அது அந்த தீர்க்கதரிசியல்ல என்று எண்ணுகிறேன், ஏனெனில் அவன் சிங்கங்களின் கெபியில் இருந்தான்; தானியேல் அக்கினி சூளையில் இருந்ததாக நான் நம்பவில்லை. என்னால்.... ஒருக்கால் நீங்கள் கூறினது சரியாயிருக்கலாம், ஆனால் இது என்னுடைய அபிப்பிராயம். 69கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஆதியாகமம் 6ம் அதிகாரம் 12ம் வசனத்தில், மாம்சமான யாவரும் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்ததாக தேவன் உரைத்தார். அது விவாகரத்தையும் விவாகத்தையும் குறிப்பிடுகின்றதா? அப்படியானால், இயேசு மத்தேயு 24ம் அதிகாரம் 38ம், 39ம் வசனங்களில், “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வெளிப்படும் காலத்திலும் நடக்கும்” என்று உரைத்த போது, இயேசு அதே காரியத்தைத் தான் குறிப்பிட்டார் அல்லவா? 70கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஆயிரம் வருட அரசாட்சியின் போது, பூமியில் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியின் போது, குழந்தைகள் பிறக்குமா? அந்த காலத்தில் பூமியில் பாவம் உண்டாயிருக்குமா? அந்த காலத்தில் பூமியில் மனித சாரங்களில் ஜனங்கள் இருப்பார்களா? இக்கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க முயல்கிறேன். இப்பொழுது, ஆதியாகமம் 6ம் அதிகாரம் 12ம் வசனத்தில், மாம்சமான யாவரும் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்ததாக தேவன் உரைத்தார். ஆம், அது விவாகம், விவாகரத்து, மற்றெல்லாமே. “நோவாவின் காலத்தில் அவர்கள் எவ்வாறு விவாகம் செய்தனர். பெண் கொடுத்தனர்” என்று வேதம் விளக்குகிறது. அது கடைசி காலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும், அடையாளங்களில் ஒன்று. இப்பொழுது, உலகம் செய்தது அனைத்தும் அது ஒன்றே என்றால், அது மட்டுமே கடைசி காலத்தின் அத்தாட்சி என்று என்னால் கூற முடியாது - எவ்வாறு அந்நிய பாஷை பேசுதல்பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி என்று என்னால் கூற முடியாதோ, அவ்வாறே. நோவாவின் நாட்களில் இருந்தது போன்ற விவாகமும் விவாகரத்தும் உண்டாயிருக்கும் ஒரு காலம் வரும்என்பது உண்மையே. ஆனால் அதனுடன் வேறு பலகாரியங்களும் இருக்கும்; அது பல அடையாளங்களில் ஒன்றாகும். 71அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது பரிசுத்த ஆவியின் அடையாளங்களில் ஒன்று. ஆனால் அது பரிசுத்த ஆவியின் பிழையற்ற அடையாளம் அல்ல - பெண்களும் ஆண்களும் விவாகம் செய்துகொண்டு விவாகரத்து செய்து விட்டு, மறுபடியும் விவாகம் செய்வது எப்படியோ அதுபோன்று. அது மட்டும் ஒரே அடையாளம் இல்லை. அது ஒன்று மட்டும் இருக்குமானால், அதை அவ்விதம் என்னால் அழைக்க முடியாது. பாருங்கள்? அது தேவன் என்பதாகச் செய்ய, அந்நிய பாஷை பேசுவதுடன் மற்ற காரியங்களும் கூட இருக்க வேண்டும். இப்பொழுது, “ஆயிரம் வருட அரசாட்சியின் போது குழந்தைகள் பிறப்பார்களா?” அது என் மனதிலும் உள்ள கேள்வி, அன்றொரு நாள் அதை உங்களிடம் கூறினேன், எனக்குத் தெரியாது. அவ்விதம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த வரையில், நான் உங்களிடம் உண்மையாயிருக்கப் போகிறேன். இது வரைக்கும் எனக்கு அதைக் குறித்து தெரியாது. தேவன் எப்பொழுதாகிலும் அதை எனக்கு வெளிப்படுத்துவாரானால், நான் உங்களிடம் கூறுவேன். காத்திருங்கள்; அது தேவனிடத்திலிருந்து வர வேண்டும். நீங்கள் என் பிள்ளைகள். நான் எங்களிடம் கூற இயலாது. அவ்விதம் இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் கூற இயலவில்லை . 72“... அந்த காலத்தில் பூமியில் பாவம் உண்டாயிருக்குமா?” இருக்காது. பூமியில் அப்பொழுது பாவம் எதுவும் இருக்காது சாத்தான் கட்டப்பட்டிருப்பான். “அந்த காலத்தில் பூமியில் மனித சரீரங்களில் ஜனங்கள் இருப்பார்களா?” ஆம், ஐயா! நாம் நமது மகிமையின் சரீரங்களை உடையவர்களாய், பூமியில் புசித்தும், குடித்தும், வீடுகளைக் கட்டிக்கொண்டும், இப்பொழுது நாம் வாழ்ந்து வருவது போல, ஆயிரம் வருடங்கள் வாழ்வோம். அது மணவாட்டிக்கும் மணவாளனுக்கும் தேன் நிலவு காலம். 73கேள்வி: சகோ. பிரான்ஹாமே, இயேசு மத்தேயு 12ம் அதிகாரம், 32ம் வசனத்தில், “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை என்று கூறியுள்ளதன் அர்த்தம் என்ன? இந்த வேதவசனத்தை எனக்கு தயவுகூர்ந்து விளக்கித்தரவும். நன்றி. அந்த மனிதனின் பெயரை அது கொண்டுள்ளது; அவர் ஒரு ஊழியக்காரர். சரி. சகோதரனே, நான் - நீங்கள் ஒரு வேதசாஸ்திர பண்டிதர், நான் வேத சாஸ்திர பண்டிதன் அல்ல. ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். இயேசு, “எவனாகிலும் பரிசுத்தஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்று கூறியுள்ளார். வேறு சொற்களில் கூறுவோமானால், வேத வாக்கியங்களுடன் அதை இணைத்து பார்ப்போமானால், “மனிதனுக்கு எல்லாவிதமான பாவங்களும் மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம் சொல்லுதல் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தேவ தூஷணம் சொல்லுதல் என்பது, அதை பரிகாசம் செய்தல், அதைக் குறித்து பேசி. கேலி செய்தல். அவ்விதம் ஏதாவதொன்றைச் செய்யும் போது, சரியானதற்கும் தவறானதற்கும் இடையே உள்ள கோட்டை நீங்கள் தாண்டி விடுகிறீர்கள். 74இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைக் காண்பீர்களானால்... உதாரணமாக, பரிசுத்த ஆவி இங்கு இறங்கி வந்து வழக்கம் போல சிந்தனைகளைப் பகுத்தறிகிறார் என்று வைத்துக்கொள்வோம். அது பரிசுத்த ஆவியாக இருந்து, அதை நீங்கள் விசுவாசிக்காமல், நீங்கள் வெளியே சென்று அதை கேலி செய்து, அதைக் குறித்து பேசுவீர்களானால், நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் முடிந்துவிட்டீர்கள். நீங்கள் அதை செய்யக் கூடாது. நீங்கள் தேவனால் உண்டாயிருக்கவில்லை என்பதை அது அங்கேயே நிரூபித்து விடுகிறது. ஏனெனில் தேவனுடைய வித்து மனிதனில் தங்கியிருக்கும் போது, அவனால் பாவம் செய்ய முடியாது. பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். வார்த்தை வெளிப்படுவதை அவன் காணும் போது, அவன் அதை விசுவாசிப்பான். அவனால் ஒன்று மட்டுமே... பாருங்கள், ஒரே ஒரு பாவம் தான் உள்ளது. ஒரே ஒரு பாவம். எத்தனை பேருக்கு அது தெரியும்? அது அவிசுவாசம். அது உண்மை. விபச்சாரம் செய்தல் பாவம் அல்ல, சிகரெட்டு புகைத்தல், பொய் சொல்லுதல், சபித்தல் இவை பாவம் அல்ல. இவை அவிசுவாசத்தின் தன்மைகள் (attributes). நீங்கள் அதை செய்யும் காரணம், நீங்கள் விசுவாசி அல்ல என்பதனால். அது உண்மை. எனவே, பாருங்கள், ஒரே ஒரு பாவம் உண்டு, அதுதான் அவிசுவாசம். “விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று: (யோவான் 3:18). அவன் என்ன செய்த போதிலும், அவன் தொடக்கத்திலேயே ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டுவிட்டான். சரி. 75கேள்வி: சகோ. பிரான்ஹாமே, இளம் விவாகமாகாதவர் (அது யாரென்று குறிப்பிடவில்லை) தங்கள் தலைமயிரைக்கத்தரித்துக் கொள்வது தவறா? அது ஒரு ஸ்திரீயென்று நினைக்கிறேன். ஆம்! எந்த ஸ்திரீயும் அவளுடைய தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது தவறாகும். அது ஒரு சிறுகேள்வி. உங்களுக்கு உறக்கம் வருகிறதா? நல்லது, நம்மால் முடிந்தவரை, நாம் துரிதப்படுவோம். சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வியை தேடி எடுக்க நான் மிகவும் முயன்றேன். கேள்வி: என் மகனுக்காக ஜெபிக்கவும்.... அது ஜெப விண்ணப்பம். இவைகளை நான் பொறுக்கி எடுத்து... 76கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஸ்திரீகளுக்கு ஆரோக்கியமான கணவனும் பிள்ளைகளும் இருந்தால், அவர்கள் பொது ஜன அலுவலகங்களில் பணிபுரிய அனுமதியுண்டா? இந்தக் கேள்வியை நான் வேறொருவருக்காக கேட்கிறேன். நல்லது. எனக்கு அதைக் குறித்து தெரியாது. என்னால் சொல்ல இயலாது. ஆனால் நான் இவ்விதமாக உணருகிறேன். இதை நான் கூற விரும்புகிறேன். நான் ஒரு ஸ்திரீயாக இருந்து, என் கணவர் ஆரோக்கியமுள்ளவராயிருந்து, அவருக்கு ஒரு நல்ல வேலை இருந்து அவர் வேலை செய்துகொண்டிருப்பாரானால், நான் வீட்டில் தங்கி என் பிள்ளைகளைக் கவனித்து, அவர்களை வளர்த்து, கர்த்தரை நேசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். துணிகளை சலவை செய்தல் போன்ற வீட்டு வேலைகளை நான் செய்த பிறகு எனக்கு நேரம் கிடைக்குமானால், தேவனை எவ்விதம் சேவிப்பது என்பதைக் குறித்து என் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பேன். 77இப்பொழுது, உங்களுக்கு கடன் ஏதாகிலும் இருந்து அதை அடைப்பதற்கென உங்கள் கணவனுக்கு உதவி செய்யமுயன்றால், அவ்விதம் நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும் மென்று இருந்தால் நல்லது. நீங்கள் பண்புள்ள பெண்ணாக வாழுங்கள். ஆனால் அது கடினம் என்று எண்ணுகிறேன். நன்றாக புரிந்து கொண்டுள்ள எந்த ஒரு மனிதனும் தன் மனைவி அத்தகைய கூட்டத்தினரின் மத்தியில் வேலை செய்வதை விரும்பமாட்டான். அவர்கள் அவலட்சணமான, அசுத்தமான மனிதர்கள். ஆனால் ஒரு ஸ்திரீ அந்த சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டியது அவசியமானால், நான் நினைக்கிறேன், அவள். அவள் உத்தமமான கிறிஸ்தவள் என்றும், அவள் நம்பிக்கையுள்ள, நம்பிக்கைக்குப் பாத்திரமான ஸ்திரீ என்றும் அவளுடைய கணவன் அறிந்திருக்க வேண்டும். இப்பொழுது, அவள் வேலை செய்யக் கூடாது என்னும் விஷயம் வரும் போது, எனக்குத் தெரியாது. பாருங்கள், அதை ஆதரிக்க வேத வசனம் எதுவுமில்லை. என் கருத்தை மட்டும் நான் தெரிவிக்கிறேன். நான் நினைப்பது என்னவெனில், ஒரு ஸ்திரீ வேலை செய்ய விரும்பினால், அவளுக்கு வேலை செய்ய பிரியமானால்.... 78இப்பொழுது, ஸ்திரீகள் இப்படிப்பட்ட அலுவலர்கங்களில் வேலை செய்வதில் நான் நிச்சயம் விரோதமாக இருக்கிறேன், அங்கு இந்த வியாபாரிகள்.... அவர்கள் அசுத்தமான நகைச்சுவைதுணுக்குகளைக் கூறுகின்றனர். அங்கு ஒரு நல்ல சுத்தமான ஸ்திரீ உட்கார்ந்திருந்து, இந்த அசுத்தமான, அவலட்சணமான காரியங்கள் அங்கு கூறப்படும்போது, அதற்கு விரோதமாக நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட காரியங்களிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டுமென்பது என் கருத்தாகும். ஆனால் ஒரு ஸ்திரீ தன்னைப் பண்புள்ள பெண்ணாக காத்துக்கொண்டு, பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு துணிகள் வாங்கவும், கடனைச் செலுத்தவும், கடன் முடியும் வரைக்கும் வேலைசெய்து தன் கணவனுக்கு உதவி செய்ய முயன்றால்... இப்பொழுது, இது கர்த்தர் அல்ல, ஏனெனில் இதை ஆதரிக்க எனக்கு வேத வசனம் கிடையாது. நான் கூறுவது என் சொந்த கருத்து; அத்தகைய சூழ்நிலை எதுவுமின்றி, கொஞ்சம் அதிகம் பணம் சம்பாதித்து . மது கடைகளுக்கு சென்று குடிக்கவும், புகைக்கவும், இவ்விதம் நடந்து கொள்வதற்காக அவள் வேலை செய்ய விரும்பினால், அவள் அவ்விதம் செய்யக் கூடாது என்று எண்ணுகிறேன். அவள் வீட்டில் தங்கியிருந்து, ஒரு பண்புள்ள பெண்ணாக இருந்து, வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும். 79கேள்வி: இயேசு இரண்டாம்... (இல்லை!) இயேசு - நீங்கள் இரண்டாம் விவாகத்தில் ஈடுபட்டிருந்து அதில் இருவரும் ஏற்கனவே விவாகரத்து செய்து கொண்டவர்களாக இருப்பார்களானால், அதற்காக வருந்தி மனந்திரும்புதல் மட்டும் போதுமா, அல்லது அதைச் சரிசெய்து கொள்ள இந்த விவாகத்தையும் முறித்துக்கொள்ள வேண்டுமா? “நீங்கள் இரண்டாம் விவாகத்தில் ஈடுபட்டிருந்து, அதில் இருவரும் ஏற்கனவே விவாகரத்து செய்து கொண்டவர்களாக இருப்பீர்களானால்... இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன் என்று நினைக்கிறேன். பாருங்கள்? ஆம், ஏற்கனவே பதில் கூறி விட்டேன். இருவருமே ... நான் . மக்களே, இவைகளை நான் கூற வேண்டிய சூழ்நிலை இல்லாமலிருந்தால், நலமாயிருந்திருக்கும். இந்த கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் என் நண்பர்கள் உள்ளனர், எனக்குத் தெரியும்அவர்கள். இதைக் கூறுவது என்னைக் கொன்று விடுகிறது. ஆயினும் அதை நான் கூறியே ஆகவேண்டும். பாருங்கள்? உலகமானது இத்தகைய மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஏதோ ஒரு ஏழை ஸ்திரீ தவறு செய்து ஒரு குடிகாரனை மணம் செய்து கொண்டு, அந்த வழியே சென்றுவிடுகிறாள், அல்லது ஏதோ ஒரு ஏழை மனிதன் தெருவில் திரியும் ஒரு பெண்ணை அறியாமல் மணம் புரிந்து கொண்டு, அவன் உயிரோடுள்ள வரைக்கும் அந்த பெண்ணுடன் கட்டப்பட்டிருக்கிறான். அது மிகவும் பயங்கரமான ஒரு காரியம். விவாகம் என்பது புனிதமான ஒன்று. அநேக சமயங்களில், பாவிகளான இளைஞர்கள் இத்தகைய காரியங்களைச் செய்து விட்டு, இதெல்லாம் என்னவென்று வியக்கின்றனர். அது... இந்த விவாகமும் விவாகரத்தும் என்பதை, அதை விளக்க வேண்டிய விதத்தில் விளக்க கர்த்தர் என்னை அனுமதிப்பாரானால், அது எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் என்று எண்ணுகிறேன். இவை யாவும்.... (ஒலி நாடாவின் முதல்பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் கேள்வியின் நடுவில் துவங்குகிறது - ஆசி) 80கேள்வி: நாங்கள் காண்கிறோம். எங்களால் ஏன் எங்கள் வீட்டை விற்க முடியவில்லை- நன்றி. நாங்கள்... குறிப்பு அதை விற்க நாங்கள் ஜெபித்து உபவாசித்தோம். இதுவரை பயனில்லை. நல்லது. இப்பொழுது, சகோதரனே அல்லது சகோதரியே (அவர்கள் தங்கள் பெயரை கையொப்பமிடவில்லை), நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் சொத்தை நீங்கள் விற்க முயன்று, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருந்தால்... வேறொரு சொத்தை வாங்குவதற்காகவோ அல்லது வேறெதாவதைச் செய்வதற்காகவோ நீங்கள் அதை விற்க எண்ணுகிறீர்கள். என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. உங்கள் நோக்கம் சரியாயிருந்தால், நீங்கள் வேறொரு வீட்டை வாங்க முயன்று கொண்டிருக்கிறீர்கள்... உங்களுக்கு பிள்ளைகள் இருந்து, அவர்களுக்கு இதைக் காட்டிலும் நல்ல வேறொரு வீட்டை வாங்க விரும்புகிறீர்கள்... என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதைக் கூற விரும்புகிறேன்; நீங்கள் அதை விற்கமுயன்று, அது விற்றுப் போக வேண்டும் என்பதற்காக உபவாசத்தில் இருந்தீர்கள், அப்படியானால் அதை கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, அதைக் குறித்து மறந்துவிடுங்கள். பாருங்கள்? ஏனெனில் ஒருக்கால் தேவன்... நீங்கள் ஒருக்கால் வேறொரு வீட்டுக்குச்செல்லலாம். அது சரியானதாக இல்லாமல் இருக்கக் கூடும். பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவராயிருந்து கர்த்தரை நம்புவீர்களானால்; நீங்கள் நிச்சயமாக கிறிஸ்தவராயிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் உபவாசித்து ஜெபித்திருக்கமாட்டீர்கள். பாருங்கள்? நானாயிருந்தால் அதை கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு, “கர்த்தாவே, அதை நாங்கள் விற்க வேண்டிய உமது நேரம் வரும்போது, வாங்குபவரை அனுப்பும்” என்பேன். அப்பொழுது அது கர்த்தரிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறது. உங்கள் கரங்களை அதிலிருந்து விலக்கி விட்டு சென்று கொண்டேயிருங்கள். அது கிரியை செய்யும் என்று நம்புகிறேன். நான் வேகமாக பதில் கூறுகிறேன், ஏனெனில் நேரம் கடந்துகொண்டேயிருக்கிறது. 81கேள்வி: சகோ.பிரான்ஹாமே, ஒரு ஸ்திரீ தன் தலைமயிரை சுருள வைத்துக் கொள்வது தவறா? அதற்கு நான் ஏற்கனவே பதிலளித்திருக்கிறேன். நிச்சயமாக, எனக்குக் கவலையில்லை, அதை நீளமாக வைத்திருங்கள். பாருங்கள்? நான் ..... எனக்குத் தெரியும் நீங்கள்... பெண்களாகிய உங்களிடம் இதை நான் கேலியாக கூறவில்லை. பாருங்கள்? நான் உண்மையாகவே கூறுகிறேன். நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள், நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். உங்களுக்கு என்மேல் நம்பிக்கை உள்ளது, இல்லையென்றால் நீங்கள் என்னைக் கேட்கமாட்டீர்கள். சகோதரியே, நான் உன்னிடம் என்ன கூறுகிறோனோ அதை செய்வாய் என்று எனக்கும் உன் பேரில் நம்பிக்கை உண்டு. இதை நான் வேத வசனத்தைக் கொண்டு ஆதாரப்படுத்த இயலாது. உனக்கு வேண்டுமானால்... உனக்கு அழகான சுருண்ட தலைமயிர், நீ ஒரு பெண்ணாயிருந்து, உன் கணவன், அல்லது நீ காதலனுக்காக அல்லது அது போன்ற ஏதாவது பார்வையில் அழகாக காணப்பட வேண்டுமென்று விரும்பினால், நீ தலைமயிரைச் சுருள வைத்துக் கொள்வதைக் குறித்தோ, அல்லது - அவர்கள் அதை எப்படி அழைக்கிறார்கள் - தலைமயிருக்கு சாயமிடுவதைக் குறித்தோ என்னால் கூற இயலாது. அதைக் குறித்து கூற எனக்கு ஒன்றுமில்லை; அது உன்னைப் பொறுத்தது. பார்? நான் - நான்.....நீ, இடையே... என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேள், அவர் உன்னிடம் கூறுவார். நான் வேதவாக்கியங்களின் அடிப்படையில் காரியங்களை விளக்க முயல்கிறேன். பார்? 82கேள்வி: தயவு செய்து 1 கொரிந்தியர் 13:8-12 வசனங்களை விளக்கவும். தற்பொழுது சபைக்கு பரிபூரண வார்த்தை திரும்ப அளிக்கப்பட்டு விட்டதால், இந்த வேத வசனங்கள் நிறைவேறி விட்டனவா? சற்று முன்பு தான் அதைக் குறித்து பார்த்தோம் என்று நினைக்கிறேன், இல்லையா? 'நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம்“ பவுல், ''நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், இவை எல்லாவற்றையும் நான் செய்தா லும்..... ஆனால் நிறைவானது வரும்போது...' என்கிறான். தேவனைத் தவிர வேறெதாகிலும் நிறைவானதாய் இருக்கமுடியுமா? இல்லை, ஐயா! தேவன் நிறைவானவரா? ஆதியிலே (சபையோர் ”வார்த்தை இருந்தது'' என்று பதிலளிக்கின்றனர்- ஆசி.) அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது''. வார்த்தை இன்னும் தேவனாயிருக்கிறது. பாருங்கள்? சரி, நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 83கேள்வி: சகோ. பிரான்ஹாமே, மேல் தட்டை தலை மயிர்கத்தரிப்பு (Flattop hair cut) செய்து கெள்வது தவறா? இதைக் கேட்டது ஒரு ஆண் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்று நினைக்கிறேன். நல்லது, சில ஸ்திரீகளும் அவ்விதம் செய்து கொள்கின்றனர். நிச்சயமாக நான் இங்கு வேட்டை அதிகாரியாக இருந்த சமயத்தில் ஒரு முறை பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்தேன்..... நான் போய்க்கொண்டிருந்தபோது, நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன், ஒரு மனிதன் என்னுடன் பேசிக் கொண்டு வந்தான். அவன் வெல்டர்களின் தொப்பியை அணிந்து கொண்டிருந்தான். நான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவன் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அவன் வெல்டர்களின் மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்டு, அதை இப்படி மேலே தூக்கிவிட்டிருந்தான். அது இங்கு செல்லர்ஸ்பர்க் என்னுமிடத்தில் நடந்தது. நான் உட்கார்ந்து கொண்டு அந்த ஆளிடம் பேசிக் கொண்டு வந்தேன். அவன் ஏதோ ஒன்றைச் சொன்னான். நாங்கள் இருவரும் சிரித்தோம். நான் அவனை காலில் அடித்தேன். நான், “பையனே, அது உண்மையில் சிரிப்பாக இருக்கிறது இல்லையா?” என்றேன் . நான் அவ்விதம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தபோது, எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருத்தி “ரூத், நீ என்ன செய்யப்போகிறாய்...' என்று என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த நபரைப் பார்த்துக் கேட்டாள். இவள் மேல் கோட்டை போட்டுக் கொண்டிருந்தாள், ஒரு ஆணைப் போல் பெரிய உருவமைப்பு கொண்டவளாய் இருந்தாள். அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு புகைபிடித்துக் கொண்டு, மூக்கின் வழியாய் புகையை வெளியே விட்டுக்கொண்டிருந்தாள். அது ஒரு ஆண் என்று எண்ணினேன். அவள் வெல்டர்கள் உபயோகிக்கும் டார்ச்சை யாரோ ஒருவர் கைத் தவறிப் போட்டு அதுவேறொருவர் தலையில் விழுந்து அவர் மயங்கி விழுந்ததைப் பற்றி ஹாஸ்ய பாணியில் கூறி சிரிக்கத் தொடங்கினாள். நானும் சிரித்து, அவள் மனிதன் என்று நினைத்து அவள் காலை என் கையினால் அடித்தேன். எனக்கு வித்தியாசம் தெரியவேயில்லை. உங்களால் அதை கண்டுபிடிக்க முடியாது. “புருஷரின் உடைகளை ஸ்திரிகள் தரித்தால், அது அருவருப்பானது என்று வேதம் உரைக்கிறது (உபா.22:5). பார்த்தீர்களா? 84இல்லை, சகோதரனே, உங்களுக்கு மேல் தட்டை தலைமயிர் கத்தரிப்பு விருப்பமானால், நீங்கள் ஏறக்குறைய என் வயதை அடையும் வரைக்கும் காத்திருங்கள், அப்பொழுது உங்களுக்கு அது கிடைக்கும். (சகோ. பிரான்ஹாம் வழுக்கைத் தலையைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). எனவே அது பரவாயில்லை. நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை. நண்பனே, சகோ.பிரான்ஹாம் உங்களுக்கு உண்மையை உரைக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்ததால், உங்கள் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக தேவன், ஒரு மனிதன் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும் என்பதை தவிர, அவன் தலைமயிரால் மூடிக் கொள்வது பற்றிவேறெதையும் கூறவில்லை என்று எண்ணுகிறேன். அவன் ஸ்திரீயைப் போல் தலைமயிரை நீளமாக வளர விட்டால், அப்படி செய்வது ஒரு மனிதனுக்கு அவமானம் என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது, நீங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, ஒரு சிறு பையனாக இருந்தால்... அதைக் குறித்து நான் அதிகம் கூறியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். “மேல் தட்டை தலைமயிர் கத்தரிப்புசெய்து கொள்ளும் சிக்கிகளே” என்பது போன்றவைகளை, அதை நான் கூறியிருக்கிறேன்.பாருங்கள்? ஒரு மனிதன் தன் தலைமயிரை எவ்விதம் கத்தரித்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறித்து தேவன் கவலைப்படுவதில்லை என்று எண்ணுகிறேன், அவன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால் சரி. ஏனெனில் அவனுக்கு தலை தேவன், ஆனால் ஸ்திரீக்கு தலை மனிதன், எனவே அவள். அவள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். அப்படியானால் கனவீனமான ஒரு ஸ்திரீ விவாகரத்து செய்யப்பட்டு தள்ளப்பட வேண்டும். அதுசரியா? எனவே ஒரு ஸ்திரீ தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டால், அவள் தவறான வாழ்க்கை வாழ்ந்தது போல் அவளைத் தள்ளிவிட அவளுடைய கணவனுக்கு வேதப் பிரகாரமான உரிமையுண்டு. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? வேதம் அவ்விதம் தான் உரைக்கிறது, ஏனெனில் அவள் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். கனவீனமான எந்த பெண்ணுடனும் வாழலாகாது. 85கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஏசாயா சீயோன் குமாரத்திகளிடம் பேசினபோது... (அது. “சீயோன் குமாரத்திகளைக் குறித்து” என்று இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்)... குப்பிகளையும், மயிர்ச் சுருளுக்குப் பதிலாக மொட்டையும் என்று சீயோன் குமாரத்திகளைக் குறித்து சொன்னவை... இந்நாளுக்குப் பொருந்துமா அல்லது சிலர் கூறுவது போன்று பழைய வேதாகமம் தற்காலத்திற்கு பொருந்தாதா? பழைய வேதாகமம் எக்காலத்தும் பொருந்தும், தேவன் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமானது. ஆம், ஐயா! ஒரே ஒரு காரியம் என்னவெனில், பழைய வேதாகமத்திலிருந்து புதிய வேதாகமத்துக்கு வரும்போது, அது விரிவடைகிறது. உதாரணமாக இயேசு, “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக (நீங்கள் அந்த செயலில் ஈடுபட்டிருத்தல்) என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று' என்றார் (மத். 5:27-28). இவை எவ்வளவு தலை சிறந்த காரியங்கள்! இப்பொழுது, நான் முடிக்க வேண்டும், நண்பர்களே, சற்று தாமதமாகி விட்டது. இப்பொழுது, அது மிகவும் நீளமான ஒன்று. வேறு ஏதாவதொன்றை எடுத்துக்கொள்ள முடியுமா என்று பார்ப்போம். 86கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஸ்திரிகள் எவ்விதம் (ஓ,என்னே !) தங்கள் தலைமயிரை அணிந்து கொள்ள வேண்டும்? மறுபடியும், நீங்கள் விரும்பும் எந்தவிதத்திலும், 1 தீமோ. 2:9. பாருங்கள்? “ஸ்திரீகள் தகுதியான வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்க வேண்டும்”. தேவனுக்கு பிரதியாயுள்ள விதத்தில் என் தலைமயிரை அணிந்து கொள்ள விரும்புகிறேன். (அருமை சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக). நன்றி. தேவன் உங்களை ஆசீவர்திப்பாராக. எங்களுக்காக ஜெபியுங்கள். அவள் தன் பெயரை கையொப்பமிட்டிருக்கிறாள். ஷாரோன், நிச்சயமாக, சகோதரியே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அதை எவ்வளவு நீளமாக வைத்துக்கொள்ள முடியுமோ; அவ்விதம் வைத்துக்கொள், சகோதரியே. அது ஒரு சிறு பெண். தேவன் உன்னை ஆசீர்வதிப்பராக, இனியவளே, அது சரியாயுள்ளது. அவ்விதமே செய். 87கேள்வி: மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, புத்தியில்லாத கன்னிகை எவராகிலும் இரட்சிக்கப்படுவார்களா, அல்லது எல்லோருமே இழக்கப்படுவார்களா? இல்லை! பாருங்கள், மணவாட்டி பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, புறஜாதி சபைக்கு எல்லாமே முடிவடைந்திருக்கும். தேவ ஆவியானவர் பூமியை விட்டுப்போய் விடுகிறார். “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” (வெளி.22:11). வேறு சொற்களில் கூறுவோமானால், பரிசுத்த ஸ்தலம் புகையினால் நிறைகிறது. அங்கு தான் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காட வழக்கறிஞர் நின்று கொண்டிருக்கிறார். கிறிஸ்து பரிசுத்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுகிறார்; அவர் மத்தியஸ்தம் செய்த காலம் முடிவடைகிறது. எடுத்துக்கொள்ளப்படுதல் வருகிறது. அவர் பரிசுத்த ஸ்தலத்தை விட்டுப்புறப்பட்டுச் சென்று, மீட்பின் புத்தகத்தை வாங்கிக் கொண்டு, அவர் மீட்டுக் கொண்ட எல்லாவற்றையும் உரிமை கோரிப் பெற்றுக் கொள்கிறார். மத்தியஸ்த ஊழியம் அதன் பிறகு கிடையாது. எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? அது முத்திரைகளில் ஒன்றில் உள்ளது. அல்லது ... ஆம், முத்திரைகளில், அப்படித்தான் நினைக்கிறேன், கிறிஸ்து தமது மத்தியஸ்த ஊழியத்தினால் கிடைக்கப்பெற்றவர்களை உரிமை கோருவதற்கென புறப்பட்டு வருகிறார். 88இப்பொழுது, ஒரு நிமிடம், “புத்தியில்லாத கன்னிகை இரட்சிக்கப்படுவாளா?” இல்லை! நடப்பது என்னவானாலும், இப்பொழுதே நடக்கிறது. அந்த காலத்துக்குப் பிறகு அவள்... இப்பொழுது, அவள் உபத்திரவ காலத்தின் வழியாய் கடந்து செல்ல வேண்டும். அதற்கு காரணம் என்னவென்றால், அவள் பிராயச்சித்தத்தை அதன் முழுமையில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து விட்டாள். அவள் ஒரு விசுவாசி, விசுவாசியைப்போல் நடந்துகொண்டவள், ஆனால் அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். “வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றிவிட்டு, அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப் போயிற்று என்று வேதம் உரைக்கிறது (வெளி. 12:15-17). அது எத்தகைய ஒரு நேரமாயிருக்கும்! பெயர் கிறிஸ்தவ சபைகள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற வேண்டுமென்று இப்பொழுது பசிகொண்டிருப்பதைப் போல் வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இருந்ததில்லை. நான் கிறிஸ்தவ வர்த்தகர், பிரஸ்பிடேரியன், லூத்தரன், கத்தோலிக்கர், நூற்றுக்கணக்கான பாப்டிஸ்டுகள், கிறிஸ்து சபை, நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தார் ஆகியோரைக் குறிப்பிடுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் அதைக் கண்டுக்கொள்ள முயல திரளாக உங்களிடம் வருகின்றனர். பாருங்கள்? 89இப்பொழுது, இது ஒரு குறிப்பிடத்தக்க காரியம். தயவு செய்து இதை ஒரு உபதேசமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவ்விதம் சம்பவிக்கும் போது, என்ன நடக்குமென்று வேதம் உரைத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? காலமானது முடிவடைந்துவிட்டது. கவனியுங்கள், ஏழு கன்னிகைகள் - இல்லை, பத்து கன்னிகைகள் மணவாளனைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் பாதி பேருக்கு தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. பாதி பேருக்கு எண்ணெய் இல்லை. அது தான் மரித்துப்போன சரீரத்தின் பாகமும் உயிரோடிருக்கிறவர்களின் பாகமும். ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள். “இதோ, மணவாளன் வருகிறார்' என்னும் சத்தம் புறப்பட்டுச் சென்று போது அவர்கள் எல்லோரும் தீவட்டிகளைச் சுத்தம் செய்து. கலியாண விருந்துக்குச் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் புத்தியில்லாத கன்னிகையோ, ”உங்கள் எண்ணெயில் கொஞ்சம் தாருங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து விட்டன (பாருங்கள்?), உங்கள் எண்ணெயில் கொஞ்சம் தாருங்கள்“ என்றனர். அவர்கள் எண்ணெய் வாங்க சென்றிருந்தபோது, மணவாளன் வந்துவிட்டார். 90“மணவாளன் வந்து கொண்டிருக்கிறார்” என்னும் அறிக்கை, பிரகடனம் புறப்பட்டுச் சென்று போது, எல்லோருமே தங்களை வேகமாக சரிப்படுத்திக் கொள்ள விரும்பினர். கையுறுப்பு சுவற்றில் காணப்படுகின்ற நேரம் அதுவல்லவா? “ஓ, எங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. ”எங்களுக்கு இது; அது, மற்றது தேவை. அவர்கள் அதை வாங்கச் சென்றிருந்த போது, மணவாளன் வந்து விட்டார். புத்தியுள்ள கன்னிகைகள் உள்ளே பிரவேசித்தனர். அவர்களோ புறம்பே விடப்பட்டனர். அங்கு அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அதனுடன் சம்பந்தப்பட்ட அழகான கேள்விகள் என்னிடம் உள்ளன. “கலியாண வஸ்திரத்துடன் உள்ளே பிரவேசித்த மனிதன் யார்? அதனுடன் இணைந்துள்ள கேள்விகள்... 91கேள்வி: ஒருவன் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா, அல்லது கிறிஸ்தவன் வேலைசெய்ய வேண்டுமா? நிச்சயமாக, அவன் வேலை செய்ய வேண்டும். கிறிஸ்தவன் வேலை செய்யும் ஒரு மனிதனாயிருப்பான். “தனிப்பட்ட நபர் ஒருவருக்கு தசமபாகம் செலுத்த வேண்டுமா? அந்த தனிப்பட்ட நபர் யாரென்பதை அது பொறுத்தது. அது உண்மை. எபிரெயர் 7ம் அதிகாரத்தில், தசமபாகத்தைக் குறித்து முதன் முதலாக பேசப்படுகிறது. நாம் எந்த நிலையில்.... ஒரு நிமிடம் பொறுங்கள், இரண்டாம் கேள்வி, இல்லை! உ, ஊ. இல்லை! ஏனெனில் சகோதரன், ''சகோ.பிரான்ஹாமுக்கு இரண்டு கேள்விகள்” என்று கூறியுள்ளார். அப்பொழுது... எபிரெயர் 7ம் அதிகாரத்தில், ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்து விட்டுதிரும்பி வருகையில், மெல்கிசேதேக்கை சந்தித்து, அவனுக்கு தசமபாகம் செலுத்தினான். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா , நீதியின் ராஜா, அது தேவனைத் தவிர வேறு யாருமில்லை. பாருங்கள்? ஆனால் நீங்கள் தசமபாகம் செலுத்தும் போது... உண்மையில் நீங்கள் எங்கு ஆகாரத்தைப் பெறுகிறீர்களோ, அங்குதான் நீங்கள் தசமபாகம் செலுத்த கடன்பட்டிருக்கிறீர்கள். “உங்கள் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கெண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்.3:10). தசம்பாகம் செலுத்தாத எந்த ஒரு மனிதனும் அல்லது ஸ்திரீயும் இதை ஏற்றுக்கொள்ளும்படி நான் சவால் விடுகிறேன். 92அதை நான் கண்ட போது, என்ன நடந்ததென்றும், நான் என்ன நிலையில் இருந்தேன் என்றும், காலை வரையில் இங்கு நின்று கொண்டு என்னால் உங்களிடம் கூற முடியும். ஆனால் என்னால் கூடுமான வரையில் நான் விசுவாசமுள்ளவனாய் தசமபாகங்களை செலுத்தி வந்திருக்கிறேன். இந்த சபையிலிருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை நான் எடுத்துக்கொள்ளும் போதும், அல்லது கூட்டங்களில் எனக்கு கூடுதல் கிடைக்கும் போதும் - நான் தசமபாகம் கொடுக்கிறேன்.. நான் அதை ஊழியக்காரர்களுக்கு கொடுத்து விட்டு, கூட்டங்களில் கிடைக்கும் மற்றதை ஊழியக்காரர்களுக்கு கொடுக்கிறேன். அப்படி என்னால் செய்ய முடியாமல் போனால், நான் என்ன செய்கிறேன் என்றால், நான் பத்து சதவிகிதம் வைத்துக்கொண்டு தேவனுக்கு தொண்ணூறு சதவிகிதம் செலுத்தி வந்தேன். பிறகு, அவ்விதம் நான் செய்யக் கூடாதென்று பிரமாணம் எனக்கு எடுத்துரைத்தபோது... அவ்விதம் நான் செய்தால், அது அதன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நான் அதை எடுத்து வெளிநாடுகளில் நடக்கும் மிஷன் ஊழியங்களுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வாரத்துக்கு நூறு டாலர் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதிலிருந்து என் தசமபாகத்தை செலுத்துகிறேன். ஆம். ஐயா! தசமபாகம் கொடுப்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். அது தேவனுடைய ஆசீர்வாதங்களில் ஒன்று, அது ஆசீர்வாதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள், “அது பழைய ஏற்பாட்டில் உள்ள ஒன்று எனலாம். அது புதிய ஏற்பாட்டில் உள்ள ஒன்றும் கூட! ஆம் ,ஐயா! 93கேள்வி: அன்புள்ள சகோ. பிரான்ஹாமே, விவாகமாகாமல் ஒரு குழந்தை பிறந்தால், அது இரட்சிக்கப்படக் கூடுமா, அல்லது எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல முடியுமா? இரட்சிக்கப்படக் கூடுமா? ஏன் நிச்சயமாக, நான் விசுவாசிக்கிறேன் அந்த குழந்தை... நடந்த ஒரு காரியத்துக்கு அந்த குழந்தை பொறுப்பல்ல. அது உண்மை. ஆனால் நான்.... எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லும் விஷயத்தில்... இரட்சிக்கப்படக் கூடுமா என்னும் விஷயத்தில் நான் “ஆம்” என்பேன். ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதல் என்னும் விஷயத்தில், தெரிந்து கொள்ளப்பட்ட வித்துதான் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்கின்றது. விபச்சாரத்தினால் உண்டாகும் குழந்தை தெரிந்துகொள்ளப்பட்ட வித்து என்பதை என்னால் நம்ப முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? அந்த குழந்தை இரட்சிக்கப்படக் கூடுமென்று நான் நம்புகிறேன்; அந்த குழந்தை இதற்கு பொறுப்பல்ல. அது பயங்கரமான ஒரு செயல். இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், முறை தவறிப் பிறந்த குழந்தை கர்த்தரின் சபைக்குள் பத்து தலைமுறைக்கு பிரவேசிக்கக் கூடாது - அதாவது நானூறு சொச்சம் ஆண்டுகளுக்கு. அந்த சாபம் அவ்வளவு கொடியது. அதை யோசித்துப் பாருங்கள். ஒன்றும் அறியாத குழந்தை, அதன் பத்து தலைமுறை பேரப் பிள்ளைகள் கர்த்தருடைய சபையில் பிரவேசிக்க முடியாது. அது உண்மை . ஆனால் பாருங்கள், அந்த பாவத்தை மன்னிப்பதற்கு வலிமையான எதுவும் இருக்கவில்லை. பழைய ஏற்பாட்டின் இரத்தம் பாவங்களை மன்னிக்கவில்லை; அது பாவங்களை மூடினது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ அதை புறம்பாக்குகிறது. இப்பொழுது அது வித்தியாசமாயுள்ளது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வரும்போது, அது வித்தியாசமடைகிறது. 94கேள்வி: சகோ. பிரான்ஹாமே; கூடுமான வரையிலும் உமது செய்திக்கு நாங்கள் நெருங்கியிருக்க விரும்புகிறோம். நாங்கள் அரிசோனா அல்லது ஜெபர்ஸன்வில்லுக்கு குடிபுகலாமா? உங்கள் செளகரியத்துகேற்ப ஏதாவது ஒன்றில். நான் நிச்சயம் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்றோ, என்ன செய்கிறீர்கள் என்றோ எனக்கு கவலையில்லை. ஆனால் இப்பொழுது, ஆலோசனையாக, நானாயிருந்தால் ஜெபர்ஸன் வில்லுக்கு குடிபுகுவேன். நீங்கள் எப்படியும் இடம் மாற விரும்பினால், ஜெபர்ஸன் வில்லுக்கு வாருங்கள். நான் அரிசோனாவை விட இங்கு தான் அதிக நாட்கள் இருக்கிறேன். அது நல்லது. 95கேள்வி: சகோ. பிரான்ஹாமே, பாவிகளுக்கு இனி பிரசங்கிப்பதற்கு இப்பொழுது நேரம் மிகவும் தாமதமாகி விட்டதா? இல்லை! இல்லை! அவ்விதம் உங்கள் மனதில் சிந்திக்காதீர், நண்பரே, வீட்டை தொடர்ந்து கட்டிக்கொண்டேயிருங்கள். உங்களால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்து கொண்டே யிருங்கள். நீங்கள் அழைத்துக் கொள்ளப்படும் வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள், பாருங்கள்? 96கேள்வி எண் 2: இரட்சிக்கப்பட்டவர்கள் பாவிகளிலிருந்து ஆராதனையில் தங்களை பிரித்துக்கொள்ள வேண்டுமா? நீங்கள் என்ன அர்த்தத்தில் இதை கூறியிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வெளியே உள்ள பாவிகளை குறிப்பிடுகிறீர்கள் என்றால்... நீங்கள் தேவனை எங்கும் தொழுதுகொள்கின்றீர்கள். அவ்விதம் நாம் செய்வோமென்றால், நாம் எப்படி சபைக்குச் செல்லமுடியும்? ஏனெனில் சபைக்குள் பாவிகள் வந்து கிறிஸ்தவனின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கின்றனரே! நீங்கள் பாவத்தைத் தவிர வேறெதிலிருந்தும் உங்களைப் பிரித்துக்கொள்ளாதீர்கள், பாவிகளிலிருந்து உங்களை பிரித்துக் கொள்ளாதீர்கள். கூடுமானால் பாவியை கொண்டு வாருங்கள். ஆனால் அவனுடைய பாவத்தில் பங்கு கொள்ளாதீர்கள். 97கேள்வி: இரட்சிக்கப்பட்ட ஒரு மனைவி தன் கணவர் பாவியாயிருந்தால் அவர் அணுகினால் மறுக்கவேண்டுமா? இல்லை, ஐயா! இல்லை ஐயா! அவர் உன் கணவர். அவ்விதம் செய்வதனால் அவரை தேவனிடத்திலிருந்து அதிக தூரம் துரத்தி விடுவாய். பார்? அது உண்மை , சகோதரனே, சகோதரியே. நீ அவரை விவாகம் செய்து கொண்டாய்; அவர் உன்னுடையவர், நீ அவருடையவள். 98கேள்வி: சகோ.பிரான்ஹாமே, 'ஆனல்மெண்ட்' என்னும் சொல்லின் பொருள் என்ன? ஜனங்கள் விவாகம் செய்துகொள்ள சுயாதீனம் பெறுகின்றனரா? அல்லது இது விவாகரத்தைக் குறிக்கும் மற்றொரு சொல்லா? இதன் பேரில் சில தகவல் அறிய விரும்புகிறேன். நிச்சயமாக அவர்கள் விவாகமானவர்களே, அவர்கள் பொருத்தனை செய்து கொண்ட வரைக்கும் அவர்கள் விவாகமானவர்களே. உதாரணமாக, ஒரு பையன் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக நல்விசுவாசத்துடன் வாக்குகொடுத்திருந்தால், அவன் அந்த பெண்ணை விவாகம் செய்ய கடமைப்பட்டிருக்கிறான். அவன் அவளை விவாகம் செய்து கொண்டதற்கு சமானம். நாட்டின் சட்டம் செய்கின்ற ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, நீங்கள் ஒன்றாக வாழ்வதற்கு அது உங்களுக்கு உரிமை பத்திரம் அளிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயிடம், “நான் உன்னை விவாகம் செய்து கொள்வேன், தேனே; உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்வேன், நீ என்னை ஏற்றுக்கொள்வாயா?” என்று கேட்டால், அவன் விவாகமானவன். உங்கள் விவாக பொருத்தனை புனிதமானது; அது தான் உங்களை விவாகம் செய்து வைக்கிறது. எந்த பிரசங்கியும். எந்த மாஜிஸ்ட்ரேட்டும் அல்லது எவருமே உங்களை விவாகம் செய்து வைக்கிறதில்லை; நீங்கள் தேவனுக்கும் இந்த மனிதனுக்கும் செய்யும் பொருத்தனையே விவாகம் செய்விக்கிறது. நீங்கள் வாக்கு கொடுக்கும் போது, உங்களுக்கு விவாகமாகிவிடுகிறது. 99பாருங்கள், நீங்கள், “சகோ பிரான்ஹாமே, அது சரி தானா? நீங்கள் வேதத்தைக்கொண்டு மாத்திரமே பதில் சொல்வீர்கள் என்று கூறினீர்களே” எனலாம். அதைக்குறித்த வேத ஆதாரம் உங்களுக்கு வேண்டுமா? வேண்டுமானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, நமக்கு ஆறு அல்லது எட்டு நிமிடங்கள் உள்ளன. சரி. யோசேப்பு, அவளுடைய புருஷன் நீதிமானாயிருந்தபடியால் (அவளுடைய புருஷனாக அவன் நியமிக்கப்பட்டிருந்தான், ஆனால் அவன் ஏற்கனவே அவளுடைய புருஷன் என்று அழைக்கப்பட்டான்)... “யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் தள்ளி விட யோசனையாயிருந்தான். அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (பாருங்கள்?) கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு : தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்றான் (மத்.1:19, 20). அவனுக்கு ஏற்கனவே விவாகமாகிவிட்டது. அவன் ஏற்கனவே அவளுக்கு வாக்கு கொடுத்தாகிவிட்டது. 100மற்றும் சிறு பெண்ணே, அந்த பையனை விவாகம் செய்து கொள்வதாக நீ வாக்கு கொடுத்திருந்தால், அதை செய்ய நீ கடமைப்பட்டிருக்கிறாய். அந்த கடமைக்கு பிறகு, நீ வேறொருவனை விவாகம்செய்து கொண்டால் - இப்பொழுது முதல் அதை நீ எப்படியும் செய்வாய் - நீ விபசாரத்தில் வாழ்கிறவளாயிருப்பாய். கவனி, ஒரு பையன் ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தாலும், அதே காரியம் தான். நீங்கள் கைக்கொள்வதாக இருந்தால் மாத்திரமே நீங்கள் வாக்குபண்ணுங்கள், இல்லையென்றால் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். அதற்கு வேத ஆதாரம் உண்டென்பதை ஞாபகம்கொள்ளுங்கள். யோசேப்பு மரியாளை விவாகம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தான். அதுதான் விவாகமான நிலை என்பதாக தேவன் கூறினார். அதைக்குறித்த பழைய ஏற்பாட்டு பிரமாணத்தைப் படியுங்கள். பாருங்கள்? பழைய ஏற்பாட்டு பிரமாணத்தின்படி நீங்கள் ஒரு பெண்ணை மணந்துகொள்வதாக வாக்கு கொடுத்து விட்டு, வேறொருத்தியை மணந்து கொண்டால், நீங்கள் விபச்சாரம் செய்பவராகிவிடுகிறீர்கள், அது உங்களை பாளயத்திலிருந்து புறம்பாக்கும். ஆம். ஐயா! ஒரு பெண்ணுக்கு நீங்கள் வாக்குகொடுத்தால், அதை நிறைவேற்ற வேண்டும். அவள் புனிதமான சிறுபாண்டம், அது உலகிற்கு ஒரு குழந்தையை கொண்டு வர வேண்டியதாயுள்ளது. எனவே நீங்கள் அவளுக்கு வாக்குகொடுக்கும்போது, அவளை நீங்கள் விவாகம் செய்துகொள்ள வேண்டும். 101கேள்வி: சிறை ஆராதனைகளுக்கும், ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கென சாட்சி கூறும் ஊழியத்துக்கும் மிகவும் கால தாமதமாகி விட்டதா? மேலும், கர்த்தர் சீக்கிரம் வரப்போவதனால், ஒருவர் தனக்கு இப்பொழுதுள்ள எல்லாவற்றையும் விற்று விட வேண்டுமா? நல்லது. உங்களுக்கு எப்படி.... அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் விசுவாசிக்க, நான் ஒன்றையும் கூறவில்லை என்று நம்புகிறேன். நான் அவ்விதம் ஏதாகிலும் கூறினதுண்டா? அவ்விதம் கூறியிருந்தால், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் அந்த அர்த்தத்தில் கூறியிருக்கமாட்டேன். பாருங்கள்? இவைகளை நீங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் தொடர்ந்து சென்று, பிரசங்கித்து, சிறை ஆராதனை நடத்தி, எல்லோருக்கும் சாட்சி சொல்லுங்கள். இங்கு பாருங்கள். ஏழாம் நாள் ஆசரிப்பு சபையினர் அண்மையில், ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு - அதை நான் 'குரியர் ஜாணல் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன் (அது என் பெட்டியில் எங்கோ உள்ளது), 'குரியர் ஜாணல் செய்தித்தாளில் ஒரு பெரியபாகம். அவர்கள் தங்கள் பழைய பெயரைக் களைந்து விட்டு, அவர்கள் 'மில்லரைட்ஸ்' என்று அழைக்கப்படுவதை தவிர்த்து, ஏழாம் நாள் ஆசரிப்பு சபை என்று அழைக்கப்படலாயினர்: 'குரியர் ஜர்னல்' என்னும் செய்தித்தாளின் ஒரு பெரிய தாளில் - அது ப்ராக்ளின், கென்னடி என்னுமிடத்தில் வெளியிடப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக்களை விற்றுவிட.... அவர்கள் ஒரு தேதியை குறித்து, அதை வேத வசனங்களின் மூலம் நிரூபித்து- இயேசு அந்த குறிப்பிட்ட தேதியில் வருவாரென்று அறிவித்து, தங்கள் கின்னரங்களுடனும் மற்றவைகளுடனும், மலைக்கு மேலே சென்று அங்கு உட்கார்ந்து காத்துக்கொண்ருந்தனர். அடுத்த நாள் காலையில் பனி பெய்து அவர்களுடைய சிறகுகளையெல்லாம் நனைத்து விட்டது. காற்றெல்லாம் போய் விட்டவர்களாக அவர்கள் கீழே இறங்கி வந்தனர், பாருங்கள்? அது கொள்கைகளும் (cults) மற்றவைகளும். 102அதை நம்பாதீர்கள். இயேசு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வராமலிருக்கக்கூடும். அவர் எப்பொழுது வருகிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் எப்பொழுது வருகிறார் என்று எந்த மனிதனுக்கும் தெரியாது. ஆனால் அவர் வரும் வரைக்கும் நான் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டும், என்னாலான எல்லாவற்றையும்செய்து கொண்டிருக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கப் போகிறேன். அவர் இன்று இங்கு இல்லாமல் போனால், நாளை அவரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் இந்த வாரம் இங்கு இல்லாமல் போனால், அவருக்காக அடுத்த வாரம் காத்திருப்பேன். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் வராமலிருந்து, நான் உயிர் வாழ்வேனானால், அடுத்த முப்பது ஆண்டுகள் அவருக்காக காத்திருப்பேன். பாருங்கள்? நான் அப்பொழுதும் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் எப்பொழுது வருவாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய வார்த்தைக்கும் அவருடைய மக்களுக்கும் நான் உண்மையாய் ஜீவித்து, ஒரு கிறிஸ்தவனைப் போல் வாழ்ந்து, அவருடைய வருகைக்காக காத்திருக்க விரும்புகிறேன். பாருங்கள்? சிறை ஆராதனைகளில் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு உங்களாலான மட்டும் எல்லோரையும் இரட்சிப்புக்குள் கொண்டு வாருங்கள். அவர் எப்பொழுது வருகிறாரென்று எனக்குத் தெரியாது; யாருக்குமே தெரியாது. ஆனால் இந்த ஒரு காரியத்தை நான் கூறவிரும்புகிறேன். இதற்காகத் தான் இதை நான் உங்களுக்கு கூற முயல்கிறேன், உங்கள் சொந்த வியாக்கியானத்தை இதற்கு தர மாட்டீர்கள் என்று நம்புகிறேன்... அந்த நபரைப் பார்த்து நான் கூச்சலிடவில்லை. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரனே, சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும், இது இந்நகரிலிருந்து வெளியே உள்ள ஒருவர் போல் தோன்றுகிறது, ஏனெனில் அது அஞ்சல் கார்டில் எழுதப்பட்டுள்ளது. அது கொலராடோவிலுள்ள டென்வர் என்று நினைக்கிறேன்... ஆம், பைக் பீக், கொலராடோ யாரோ ஒருவர் அதை அஞ்சல் வழியாக அனுப்பியிருக்கக் கூடும். அதனால் பரவாயில்லை. அவர்கள் ஒலிநாடாவை ஒருக்கால் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் நாம் ஞாபகம்கொள்வோம், நீங்கள் ஒன்றையும் மாற்றி விடாதீர்கள், பாவத்திலிருந்து நீதிக்கு மாத்திரம் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பணியில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திருந்து, அதை அப்படியே செய்து கொண்டிருங்கள். இதை புரிந்துகொண்டவர்கள் “ஆமென்” என்று சொல்லுங்கள் (சபையோர் “ஆமென்” என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). பாருங்கள்? அதை இப்பொழுது செய்யுங்கள். 103கேள்வி: சகோ. பிரான்ஹாமே, மத்.12:40ல், “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் இரவும் பகலும், மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” என்று கூறப்பட்டுள்ளதே, அப்படியிருக்க, அவர் கல்லறையில் வெள்ளிக்கிழமை மாலையில் வைக்கப்பட்டு ஞாயிறு காலையில் உயிர்த்தெழுந்தார் என்று அவர்கள் எப்படி கூறமுடியும்? அந்த கணக்குப்படி இரண்டு இரவுகளும் ஒரு பகலும் தான் ஆகின்றதே? நீங்கள் கவனிப்பீர்களானால் “போல” (பாருங்கள்?) என்று கூறப்பட்டுள்ளது. “யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல ...” அது மூன்று பகல்கள் மூன்று இரவுகளுக்குள்ளாக இருக்க வேண்டும், ஏனெனில் வேத வசனத்தை பொய்யுரைக்க வைக்க உங்களால் முடியாது. “அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில்விடேன்; என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன் என்று தீர்க்கதரிசி கூறியிருக்கிறான்'' (சங்.16:10). மனித உடலில் அழிவு எழுபத்திரண்டு மணி நேரத்தில் உண்டாகிறது. எனவே இரவும் பகலும் மூன்று நாட்களுக்குள் எப்பொழுதாவது அவர் கல்லறையை விட்டு வெளிவர வேண்டும். எனவே இரவும் பகலும் மூன்று நாட்கள் என்றால் சரியாக அப்படியே என்று அர்த்தமல்ல, அது இரவும் பகலும் மூன்று நாட்களுக்குள்ளாக எப்பொழுதாவது, அதற்குள் அவர் உயிரொடெழுந்து வெளிவர வேண்டும், ஏனெனில் தீர்க்கதரிசனம் பொய்யாயிருக்க முடியாது.... அவர் அழிவைக்காண முடியாது. அவர் சரியாக அந்த நேரம் வரைக்கும் தங்கியிருந்தால், அது அழிவைக் கண்டிருக்கும். 104கேள்வி: சகோ. பிரான்ஹாமே, ஒரு மனிதனுக்கு விவாகமாகியிருந்து விவாகரத்து செய்திருந்தால் (அது பயங்கரமான செயல் இல்லையா (பாருங்கள்), எத்தனையோ பேர்? இப்பொழுது. நான் மக்களுக்கு விரோதமாக எதையும் கூறவில்லை; இதுவே ஜனங்களின் மனதில் உள்ளது. நிச்சயமாக, அவர்கள் கலக்கமுற்றிருக்கின்றனர் முன்பெல்லாம் ஜனங்கள் எடுத்துகொள்ளப்படுதல் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை, அது முக்கியமாக காணப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ அது உலகம் முழுவதிலும் பரவிவிட்டது. ஜனங்கள் வேதாகமத்தில் இதைக் குறித்து படிக்கின்றனர். அங்குள்ள தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் அது என்னவென்று காண வருகின்றனர். அவர்கள் அதை அறிந்து கொள்கின்றனர், அவர்கள் உத்தமமாயுள்ளனர். அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர். ஆகையால் தான் இதைக்குறித்து மிகுந்த ஞானத்தோடு உங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். விவாகமாகியிருந்து விவாகரத்து செய்துவிட்டு, அதன் பிறகு ஏற்கனவே விவாகமாகி விவாகரத்து செய்திருந்த ஒருத்தியை மறுபடியும் விவாகம் செய்திருந்தால், இவ்விருவரும் கர்த்தருடைய பார்வையில் விவாகம் செய்தவர்களாக எண்ணப்படுவார்களா? எப்படி இவ்விருவர் அல்லது இவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லமுடியும்? எப்படி? எனக்குத் தெரியாது. என்னால் கூற இயலாது. கேள்வி என்னவெனில் அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்களா?'' என்பதே. விவாகரத்து செய்வதர்கள், இருவருமே விவாகரத்து செய்தவர்கள், இவர்கள் இருவருக்குமே உயிரோடிருக்கும் துணையார் உள்ளனர். அதன்பிறகு இருவமே மறுபடியும் விவாகம் செய்து கொண்டனர். இப்பொழுது... இந்த ஸ்திரீக்கு உயிரோடிருக்கும் கணவர் இருக்கிறார்; இந்த மனிதனுக்கு உயிரோடிருக்கும் மனைவி இருக்கிறாள். இப்பொழுது, அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர்; அவர்கள் தேவனிடம் வர விரும்புகின்றனர். அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லமுடியுமா? அது பரலோக பிதாவைப் பொறுத்தது. என்னால் அதற்கு பதிலுரைக்க இயலாது. பாருங்கள்? நான் ஒரு காரியத்தைக் காண்கிறேன். அவர்கள் விபச்சாரக்காரர் என்று அழைக்கப்படுவார்கள் என்று வேதம் உரைக்கிறது. மேலும் விபச்சாரக்காரன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை' என்றும் வேதம் உரைக்கிறது. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். அதைக் கூறுவது என்னைக் கொன்றுவிடுகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் வார்த்தை உரைப்பதைத் தவிர வேறெதையும் என்னால் கூற இயலாது. நான் அதில் நிலைத்திருக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவையெல்லாம் தவறாயிருக்கக் கூடாதா என்று எண்ணுகிறேன். வேதத்தில் சில இடங்களில்.... 105நான் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை. தயவு செய்து, ஒரு சிறு வேத வசனத்தை உங்களுக்கு நான் தர விரும்புகிறேன். தயவு செய்து, தயவு செய்து செய்யாதீர்கள் - செய்யாதீர்கள் ....நீங்கள் சந்தோஷமாக உங்கள் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்தால், சந்தோஷமாக உங்கள் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தால், அப்படியே வாழ்ந்து கொண்டிருங்கள். அதற்காக நீங்கள்... நான் கூறினேன் என்பதற்காக அந்த சிறு பிள்ளைகளை விட்டு விலகி, அவர்களுக்கு வீடு இல்லாமல் செய்து விடாதீர்கள். தவறு செய்த ஜனங்களுக்கு தேவன் பரிகாரம் செய்ததாக வேதத்தில் சில இடங்கள் உண்டு. இயேசு தாவீதைக் குறித்து கூறினது உங்களுக்கு ஞாபகமுள்ளதால், அவன் பசியாயிருந்த போது, தேவாலயத்துக்குள் பிரவேசித்து, ஆசாரியர்கள் மட்டும் புசிக்கத் தகுந்த சமூகத்தப்பத்தை புசித்து, குற்றமற்றவனாக காணப்பட்டான். ஆசாரியனும் ஓய்வு நாளில் செய்யத்தகாததை செய்து குற்றமற்றவனாக காணப்பட்டான், ஓய்வு நாளிலும் பெரியவர் இங்கிருக்கிறார். பாருங்கள்? அங்கே... நான்.... இதை நாம் தேவனிடம் சமர்ப்பித்து விட்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே வாழ்ந்து .... இப்பொழுது கிறிஸ்துவுக்காக நாம் வாழ்வோம். நாம் பார்க்கலாம், நீங்கள் உட்பிரவேசிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கக்கூடும். மற்றொரு தவறைச் செய்து விடாதீர்கள். இரண்டு தவறுகள் ஒரு தவறை நேராக்கி விடாது. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற விதமாகவே தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தால், ஒருக்கால் உங்களுக்கு ஒரு தவறான துணை இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை யில் உங்களுக்கு தவறான துணை இருக்குமானால், மற்ற வாழ்க்கையில் உங்களுக்கு அப்படி இருக்காது. எல்லா தவறுகளும் சரியாக்கப்படும். 106மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளும் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்களா? “இல்லை, ஒரு பங்கு மாத்திரமே, ஒரு பங்கு, மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளும் அல்ல. ”மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' என்று வேதம் உரைக்கிறது (வெளி. 20:5). அதன் பிறகு அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு, வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகள் பிரிக்கப்படுகின்றனர். மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளுமே செல்வதில்லை... வேதத்தின்படி . 107ஒருவர் உண்மையில் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி என்ன? யோவான்: 14:26, அவர்... “பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது (பாருங்கள்?), வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13). பாருங்கள்? அவர் ஒரு... அவர் அதை பரிபூரணப்படுத்துவார். “மனிதனால் உண்டாக்கப்பட்டவை அதை செய்ய முடியாது - அவர் வார்த்தையாயிருக்கிறார், பரிசுத்த ஆவியாகிய அவர் வரும்போது, அவர் வேதவாக்கியங்களுடன் தம்மை உங்களில் அடையாளம் கண்டு கொள்வார். அதுவே பரிசுத்த ஆவி உங்களில் உள்ளதென்பதற்கு உண்மையான அடையாளம், ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. இப்பொழுது பாருங்கள்! நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதனால் என்ன? அதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் என்ன செய்வாரென்று இயேசு கூறியுள்ளார். நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, மேலும் கீழும் குதித்து, கூச்சலிட்டு, மற்ற அனைத்தும் செய்து, அதன் பிறகு வார்த்தைக்கு வருகின்றீர்கள்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப்பெயர்களை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுப்பதென்பது வேதவாக்கியங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவு என்பதை நான் வேத வாக்கியங்களின் மூலம் உங்களுக்கு நிரூபிக்க முடியும். எவருமே அவ்விதம் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, இருப்பினும் நீங்கள் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட ஒன்றைச் செய்வாரென்று என்னிடம் நீங்கள் கூற முடியுமா? அவர் எவ்விதம் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியும்? 108இந்நாளில் என்ன நடக்கவிருக்கிறது என்றும், எவ்வாறு மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்துவார் என்றும், அவர் என்ன செய்வாரென்றும், இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கிற வேத வாக்கியங்களை நான் உங்களுக்கு காண்பித்து விட்டு, அவர் இறங்கிவந்து அதை நிரூபிப்பதை கண்ட பிறகும், நீங்கள் ஸ்தாபனத்திலேயே தங்கியிருந்து நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் என்று எப்படி உங்களை அழைத்துக் கொள்ள முடியும்? அதில் ஏதாகிலும் அர்த்தம் உள்ளதா? என் மனைவியிடம் அவளை நான் நேசிப்பதாக கூறி விட்டு, வேறொருத்தியுடன் நான் சல்லாபம் செய்து, அவளுடன் சுற்றித் திரிந்து, என் இருதயத்திலிருந்து என் மனைவியை நான் நேசிப்பதாக கூற முடியுமா? அது உண்மையான அன்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் என்னை நேசிப்பதாக கூறிக்கொண்டு, நான் வெளியே சென்ற பிறகு வேறொரு மனிதனுடன் திரிய முடியுமா? அதைதான் இஸ்ரவேல் ஜனங்கள் செய்தனர். வேதத்தில் அவர் இஸ்ரவேலரை நோக்கி, “நீ உன் கரங்களை விரித்து வருகின்ற ஒவ்வொரு மனிதனையும் ஏற்றுக்கொண்டு. அவர்களோடு வேசித்தனம் பண்ணினாய். நான் உன்னைப் புறம்பாக்குவேன்” என்றார். முற்றிலுமாக! அது என்ன? நீங்கள் உங்கள் சரீரத்துக்கு விரோதமாக வேசித்தனம் பண்ணுகிறீர்கள். ஒரு ஸ்திரீ வெளியே சென்று வேறொரு மனிதனுடன் வாழும்போது அல்லது ஒரு மனிதன் வேறொரு ஸ்திரீயுடன் வாழும் போது, அவர்களை அவர்கள் விவாகம் செய்து கொள்ளும் போது, தங்கள் சொந்த மாம்சத்தை அசுசிப்படுத்துகின்றனர். ஒரு நபர் தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொண்டு, வேதவாக்கியங்கள் உண்மை என்பதை மறுத்தால், தான் இருப்பதாக உரிமைகோரும் சரீரத்துக்கு விரோதமாக அவன் விபச்சாரம் செய்கிறவனாயிருப்பான். பாருங்கள். அது அந்திக் கிறிஸ்துவின் முத்திரை, அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். 109கேள்வி: சகோ.பிரான்ஹாமே, ஒரு வாலிபப் பிள்ளை ஸ்லாக்குகளையும் குட்டைகால் சட்டையும் அணிவது சரியா? எவ்வளவு வாலிபம்? நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், நீங்களே அதை தீர்மானிக்கும்படி விட்டுவிடுகிறேன். ஒரு சிறு பெண் அல்லது மிகவும் சிறிய பெண், நான் நினைக்கிறேன், எனக்குத் தெரியாது, நான்.... எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று. “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது என்று வேதம் உரைக்கிறது”(உபா.22:5). பாருங்கள்? அது “ஸ்திரீ” என்று சொல்லுகிறது. 'பிள்ளை என்று சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது நான் .... அதைக் குறித்து உங்களுக்கு தோன்றுகிறதை செய்யுங்கள். நான்... என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறு பெண், ஐந்து அல்லது ஆறு வயதுடையவள் அவ்விதம் உடுப்பது தவறென்று எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் சிறுமிகளாக இருக்கும் போது அவர்கள் முற்றத்தில் ஓடி விளையாடுகின்றனர். ஒரு சிறுமி நீங்கள் 'ஸ்லாக்குகள் என்றழைப்பதை உடுத்தினால் அதில் தவறொன்றும் எனக்குக் காணவில்லை. பாருங்கள், நான் வார்த்தை உரைப்பதையே உங்களிடம் கூறுகிறேன். புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது அருவருப்பானது. 110கேள்வி: நாங்கள் எங்கே ஒன்று கூட வேண்டும்? நாங்கள் எக்காளங்களின் போது ஒன்று கூட வேண்டுமென்று நீர் சொன்னீர். கூட்டாளியே, சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும், அதில் நீங்கள் தவறு செய்கிறீர்கள். எக்காளங்களின் போது நீங்கள் ஒன்று கூடுங்கள் என்று நான் சொல்லவேயில்லை. இஸ்ரவேலர் எக்காளங்களின் போது ஒன்று கூடுவார்கள் என்று தான் சொன்னேன், புறஜாதி மணவாட்டியல்ல. இல்லை, இல்லை, எக்காளங்கள், எழு எக்காளங்களின் முழக்கம் இஸ்ரவேலரை உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் ஒன்று கூட்டுவதற்கே (எத்தனை பேருக்கு அது தெரியும்?).... ஆம், புறஜாதி மணவாட்டி அல்ல... இல்லை, இல்லை! உ, ஊ, இல்லை. எனவே அது புறஜாதி மணவாட்டியல்ல.. நாம் எக்காளங்களின் போது ஒன்று கூடுவதில்லை. மணவாட்டி ஒன்று கூடுவதில்லை. எக்காளங்கள் பெந்தெகொஸ்தே பண்டிகைக்குப் பிறகு வருகிறது. பாருங்கள் ? எடுத்துக்கொள்ளப்படுதல் வருகிறது...அது... இந்த கேள்வி அதை குறித்ததல்ல. 111கேள்வி: சகோ.பிரான்ஹாமே, உங்களுக்கு நேரமிருந்தால் மத். 10:41ஐ தயவு கூர்ந்து விளக்கவும். தீர்க்கதரிசிக்கேற்ற பலன் என்னவென்று அறிய விரும்புகிறேன். நல்லது, இயேசு, “தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக் கேற்ற பலனை அடைவான் என்றார் (ஆங்கிலத்தில் ''Prophet's reward”, அதாவது “தீர்க்கதரிசி அளிக்கும் பலன்” என்றுள்ளது - தமிழாக்கியோன்). தீர்க்கதரிசி அளிக்கும் பலன், தீர்க்கதரிசியின் நண்பராயிருப்பதே. நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். அது சரியா? தீர்க்கதரிசியின் பலன் என்னவென்று அவர்கள் அறிய விரும்பினால், அது தீர்க்கதரிசியின் நண்பராயிருப்பதே, பாருங்கள்? அது ஒரு பலன். அவர் உங்கள் நண்பர். சூனேமியாளைப் போல, அது எப்பொழுதாவது உபயோகப்படும் பாருங்கள்? அது அவளுக்கு உபயோகமாயிருந்தது. பாருங்கள்? தேவனுடைய ஊழியக்காரரை கவனியுங்கள். ஓ, என்னே! இப்பொழுது, நாம்... நான் முடிக்க வேண்டும், நண்பனே, அவ்விதம் செய்ய எனக்கு பிரியமில்லை, ஆனால் இங்கு பாருங்கள், நூற்றுக்கணக்கான கேள்விகள் (சபையோர், மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்க, சகோ. பிரான்ஹாமை கேட்டுக் கொள்கின்றனர் - ஆசி). இல்லை! ஆனால், பாருங்கள், அவ்விதம் கூறினதற்காக உங்களை நான் நேசிக்கிறேன், ஆனால்இன்றிரவு நூற்றுக் கணக்கான மைல்கள் காரோட்டி செல்ல வேண்டிய இந்த ஏழை மக்களை எண்ணிப் பார்க்கிறேன். என்ன, அநேக கேள்விகள் இங்குள்ளன. . 112கேள்வி: சகோ.பிரான்ஹாமே, நான் ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து அறிய விரும்புகிறேன். அது கலியாண விருந்துக்குப் பிறகா அல்லது அது பூமியில் இருக்குமா?இவையெல்லாவற்றையும் குறித்து என்னால் அதை புரிந்துகொள்ள இயலவில்லை. நல்லது, சகோதரனே அல்லது சகோதரியே, எனக்கே இதை புரிந்து கொள்வது கடினமாயுள்ளது. நான் கூறக்கூடிய ஒன்றே ஒன்று இது : அதாவது கலியாண விருந்து ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு வருகிறது. இப்பொழுது. பாருங்கள், இங்கு எங்கோ உள்ள. ஒருவருக்கு அதன் பேரில் ஒரு கேள்வி உள்ளது என்று எனக்குத் தெரியும். அவர், “சகோ. பிரான்ஹாமே, அந்த தானியேலின் எழுபது வாரங்களின் பேரில் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள். இன்னும் ஏழு வாரங்கள் இருக்கும்” என்கிறார். இல்லை, மேசியா வந்து தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும், அந்த எழுபதாம் வாரத்தின் மத்தியில் - அது ஏழு வருடங்கள் - அவர் ஜீவனுள்ளோர் மத்தியிலிருந்து பலியாக சங்கரிக்கப்பட வேண்டும். எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? சரி, அப்படியானால் எத்தனை ஆண்டுகள் இயேசு, அந்த மேசியா, பிரசங்கித்தார்? மூன்றரை ஆண்டுகள். அப்படியானால் இன்றும் மூன்றரை ஆண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில், இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். புறஜாதிமணவாட்டி போய்விட்ட பிறகு, இஸ்ரவேலருக்கு மூன்றரை ஆண்டுகள் வாக்களிக்கப்பட்டடுள்ளது. எத்தனை பேர் அதை புரிந்துகொண்டீர்கள்? பாருங்கள்? சரி, சரி. 113கேள்வி: இது ஒரு... நான் பகல் உணவு விடுதி ஒன்றை நடத்தி பெரும்பாலும் உயர்நிலை பள்ளிமாணாக்கர்களுக்கு உணவு வழங்குகிறேன். நான் வெளிச்சத்துக்கு வந்த முதற்கு, நான்' பின் பால் மெஷினை'யும், 'ஜக் பாக்ஸையும் அகற்றி விட்டேன் (அவர்களிடமிருந்த ஜூக்பாக்ஸ்). இளைஞர்கள் புகை பிடித்து, வானொலியில் 'ராக் அண்டு ரோல்' இசையை கேட்க விரும்புகின்றனர். நான் ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே திறந்து வைக்கிறேன். நான் புகை பிடிப்பதையும் குடிப்பதையும் ஆதரிப்பதில்லை, ஆனால் அந்த இடத்தில் வைத்திருப்பதைக் குறித்து நான் கவலையடைந்துள்ளேன். உங்களுக்குத் தெரியுமா, அது ஒரு பிரச்சினை. பாருங்கள்? காரியம் என்னவெனில், நீங்கள் பிழைப்புக்கு ஒருக்கால் இதை செய்தாக வேண்டும். ஆனால் இது எனக்கு என்ன செய்து விடும் தெரியுமா? அது என்னை நரம்பு தளர்ச்சிக்குள்ளாக்கும். அதனால் நான்... நான்... உங்களால் ஒருக்கால் அதை பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால்அந்த சிறு கூட்டம் 'ரிக்கி' களும் 'ரிக்கெட்டாக்களும் அந்தவிதமாக நடந்துகொள்ளும்போது, அது என்னை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கும். பாருங்கள்? நான் உங்களிடம் கூறுகிறேன்; நான்... அது நானாக இருந்தால், நான் என்ன செய்வேனென்று எனக்குத் தெரியும். நான், “அதை நிறுத்துங்கள், இல்லையென்றால் வெளியே போங்கள்” என்பேன். பாருங்கள்? நான் சரியான விதமான இடம் ஒன்றை நடத்துவேன், இல்லையென்றால் அதை நடத்தவே மாட்டேன். ஆனால் நீங்கள், உங்கள் பிழைப்புக்கு அதைசெய்ய வேண்டுமென்றால், உங்களை அவமதிக்க நான் விரும்பவில்லை, சகோதரனே அல்லது சகோதரியே. இவைகளை கூறுவது கடினமென்று நான் அறிவேன்; ஆனால் அது - அது வெறுமனே.... அது சரியல்ல (பாருங்கள்?), ஏனெனில் அது ஒருவிதமாக காணப்பட்டது..... 114இன்று காலை யாரோ ஒருவர் நமது ஸ்திரீகள் தங்கள் உடைகளை குட்டையாக அணிகிறார்கள் என்று கூறினது போல, வயதான நமது ஸ்திரீகள். அது வாலிப் பெண்களுக்கு ஒரு மோசமான உதாரணமாயுள்ளது. அவர் கூறினது சரியென்று நான் எண்ணுகிறேன். பாருங்கள்? அதேவிதமாகத்தான் இதையும் எண்ணுகிறேன். புகைபிடித்தலும் மற்றவைகளும் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் உங்களைக் காணும்போது, உங்கள் சாட்சியை அவர்கள் அறியும் போது, இந்த பிள்ளைகள் சுற்றிலும் வந்து கெட்ட வார்த்தைகளை உபயோகித்து, அவ்விதம் நடந்து கொண்டு, அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்யாமலிருந்தால், அது உங்கள் சாட்சிக்கு கேடுண்டாக்குகிறது. கர்த்தர் உங்களை எப்படி நடத்துகிறாரோ அப்படி செய்யுங்கள். தேவன் உங்களை சரியான வழியில் நடத்தும்படியாக ஜெபிக்கிறேன். 115கேள்வி: சபைக்குள் செல்வதற்கு வரிசையில் நிற்பது ஞாபகார்த்தமாக மட்டுமே இருக்குமானால், நாம் உபத்திரவ காலத்தின் வழியாக பிரவேசிக்காமல் போனால், என்ன நடக்கும்? நாம் சில கஷ்டங்களை காண வேண்டுமா? பாருங்கள்? நான்... இந்த கேள்வி ஒருக்கால் இதுவாக இருக்கலாம். நான் துரிதப்பட முயல்கிறேன். நான் அவ்விதம் செய்யக் கூடாது. இவைகளை வைத்து விட வேண்டும். ஏனெனில் ஒரு மணி நேரம் கழிக்க வேண்டிய சில இடம் கேள்வியில் வருகிறது, அதை விரிவாகக் கூற வேண்டும். நான் நிறுத்திக் கொள்கிறேன். பாருங்கள்? ஜனங்கள் இதை கூற விரும்புகின்றனர், அதாவது சபையானது உபத்திரவ காலத்தை சந்திக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? அது சந்திக்காது, அது சந்திக்க முடியாது (பாருங்கள்), ஏனெனில் அது ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது. இப்பொழுது, சபையானது, லோத்தைப் போல் பெயர் விசுவாசிகள், அவன் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று, அக்கியினின்று இரட்சிக்கப்பட்டான். நோவா உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சென்று, அதற்கு மேல் தூக்கப்பட்டு, ஆபிரகாமுடன் வெளிவந்து, அவனும் பூமியை மறுபடியும் மாசுபடுத்தினான். பாருங்கள்? லோத்து வெளியே வந்தான், அவனுடைய சொந்த குமாரத்திகள் அவனுடன் படுத்தனர், அவனுடைய குமாரத்திகளின் மூலம் அவனுக்கு பிள்ளைகள் பிறந்தனர். பாருங்கள்? ஆனால் ஆபிரகாமோ ராஜரீக சந்ததியை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியை, பிறப்பித்தான். ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுதலில் மகிமைக்கு சென்றான். அவன் நடக்கச் சென்று வீட்டுக்கு சென்றுவிட்டான். அவன் உபத்திரவ காலத்தின் வழியாக செல்லவில்லை. பார்த்தீர்களா? பாருங்கள்? வேதம் முன்னடையாளத்தின் மூலம் ஒருபோதும்...முன்னடையாளங்கள் ஒருபோதும் தவறாவதில்லை. பாருங்கள் ? மணவாட்டி உபத்திரவ காலத்தின் வழியாக செல்வாள் என்று முன்னுரைக்கவில்லை... சபையானது உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும். 116இப்பொழுது, ஜனங்கள், “ஆதிகாலத்து பரிசுத்தவான்களைக் குறித்தென்ன?” என்று கேட்கின்றனர். அது யுகங்கள் மாறுதலாகும். அது துன்புறுத்தலின் கீழ், சபை காலங்களின் செய்தியைக் கேட்க நீங்கள் இங்கு இருந்திருந்தால், அவர்கள் எவ்விதம் இருளின் காலங்களின் வழியாக செல்ல வேண்டியிருந்ததென்றும், அவர்கள் துன்புறுத்தலை சகிக்க வேண்டியிருந்ததென்றும் அது காண்பிக்கிறது. ஏனெனில் சபை காலங்கள் ஒவ்வொன்றும் மேலும் மேலும் இருளடைந்து, முடிவில் அவர்கள் அவருடைய நாமத்தை மறுதலிக்கும் நிலையையடைந்து, வேறொரு நாமத்தை எடுத்துக்கொண்டு வாழ்ந்து, ஆனால் மரித்தவர்களாயிருந்தனர் என்பதை அது காண்பிக்கிறது - சர்தை சபையின் காலத்தில். அதன்பிறகு அது பிலதெல்பியா காலத்துக்குள் வந்து, முடிவில் மணவாட்டியை வெளியே அழைக்கும் நேரத்தை அடைகிறது. மணவாட்டி எல்லா ஆக்கினைக்கும் தப்புகிறாள். பூமியின் மேல் வரவிருக்கும் ஆக்கினைக்கும் கோபாக்கினைக்கும் தப்பித்துக்கொள்ள அவள் பாத்திரராயிருக்கிறாள் - அதன் வழியாக செல்வதற்கு அல்ல, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள. பாருங்கள்? இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? ஒவ்வொருவரும்? பாருங்கள்? 117சபை, வெதுவெதுப்பான சபை, தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு புறம்பேயுள்ள எதுவுமே உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து சொல்லும். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருக்கமாட்டார்கள். “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” (வெளி.19:5). முன் குறிக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட , தேவனால் சொந்தமாக தெரிந்து கொளப்பட்ட மணவாட்டி மட்டுமே. அது யார். சகோ. பிரான்ஹாமே?“ எனக்குத் தெரியாது. அது யாரென்று என்னால் கூற இயலாது, ஆனால் அது இருக்கப்போகிறதென்று எனக்குத் தெரியும், ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்துள்ளார். பாருங்கள்? அவர்கள் தான் உபத்திரவ காலத்துக்கு தப்பி மேலே எடுத்துக்கொள்ளப்படுவார்கள், மற்றவர்களோ உபத்திரவ காலத்தின் வழியாக இங்கு கீழே கடந்து செல்வார்கள். எல்லாமே ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு கொல்லப்படும். அதன்பிறகு நீதிமான்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது வந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள் . . . இந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வருகிறது. அப்பொழுது மரித்தோர், நல்லோர் தீயோர் இருவரும், உயிரொடெழுவார்கள். புத்தகங்கள் திறக்கப்படுகின்றன, ஜீவபுஸ்தகமும் திறக்கப்படுகிறது; அப்பொழுது பரிசுத்தவான்கள் - மனைவியும் கணவனும் - உட்கார்ந்து கொண்டு நியாயந்தீர்ப்பார்கள். அப்பொழுது “அவர் இருப்புக் கோலால் சகல ஜாதிகளையும் நியாயந்தீர்ப்பார்” என்னும் வசனம் நிறைவேறுகிறது. எல்லா தேசங்களும் அங்கு அவருக்கு முன்பாக நிற்கும், அவர் இருப்புக் கோலால் அவர்களை நியாயந்தீர்ப்பார். அவர் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரித்து, வெள்ளாடுகளை நோக்கி “அகன்று போங்கள்” என்றும், செம்மறியாடுகளிடம், “வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே” என்பார். 118பூமியின் பரப்பு முழுவதிலும் பரிசுத்தவான்களின் காம்ப் கூட்டம் ஒன்று நடைபெறும். சாத்தான் தன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணச்செல்கிறான் - அவன் தொடக்கத்தில் மகிமையில் செய்த அதே விதமாக. அப்பொழுது தேவன் வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷப்பார் . முழு பூமியும் அகற்றப்படுகிறது... அது எரிந்து அழிக்கப்படுகிறது. அப்பொழுது சமுத்திரம் இனி இல்லாமல் போகும், தண்ணீர் இனி இல்லாமல் போகும், ஒன்றுமே பூமியின் மேல்விடப்பட்டிருக்காது. எரிமலைகள் வெடித்து சிதறித் தெளித்து, எல்லாமே.... “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான் பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக்கண்டேன்; அதுதான் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” (வெளி 21:1-2). அது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? இந்த மணவாட்டியில்... “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது” (வெளி. 21:3). தேவன் அவர்களிடத்திலே கூர் நுனிக் கோபுர வடிவிலுள்ள ஆயிரத்தைந்நூறு சதுர மைல்பரப்புள்ள அந்த நகரத்திலே வாசமாயிருப்பார். நகரத்தின் உச்சியில் வெளிச்சம் இருக்கும். ஆமென். ஓ, சீயோன் மலையின் மேலுள்ள அந்நகரம் அந்நியனாயிருந்தும், அதை இன்னும் நேசிக்கிறேன் நான் மலையின் மேலுள்ள அந்நகரத்தை அடையும்போது காலாகாலங்களில் உம்மை சந்திப்பேன். . . 119சீயோன் மலையின் உச்சியில் ஆட்டுக்குட்டியானவர் வீற்றிருப்பார். நகரத்துக்கு வெளிச்சம் தேவையில்லை, ஆட்டுக் குட்டியானவரே அதற்கு விளக்கு. ஆட்டுக் குட்டியானவருக்கு மேல் பிதா, அந்த 'லோகாஸ் இருப்பார். தேவன், அந்த மகத்தான வெளிச்சம், நித்தியவெளிச்சம், சிங்காசனத்துக்கு மேலே பிரகாசிப்பார். இயேசு அவருடைய பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்கமாட்டார், தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பார். பிதா குமாரனின் மேல் வட்டமிட்டுக் கொண்டிருப்பார், பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்“ (ஏசா. 65:24). அது உண்மை . இயேசு ஒரு பரிபூரண, பரிபூரண காலத்தை, பரிபூரணமான ஜீவனுள்ள தேவனுக்கு ஒப்புவிப்பார் - அவர் மீட்டுக் கொண்டதை பிதாவினிடம் ஒப்புவிப்பார். அது சரியா? ஆவியாயிருக்கிற பிதாவாகிய தேவனிடம் ஒப்புவிப்பார், மனிதனிடம் அல்ல, ஆவியாயிருக்கிற பிதாவினிடம். நன்மையானவைகளின் எல்லா சுபாவமும் ஒன்று திரண்டுள்ளது தான் தேவன். நன்மையானவைகளில்... நன்மை தாறுமாறாக்கப்படுதலே பொல்லாங்கு; அது சாத்தானின் ராஜ்யம். நன்மையான எல்லாமே தேவனுக்குச் சொந்தமானது. பொல்லாங்கு அனைத்தும் சாத்தானுக்கு சொந்தமானது. 120அதன் பிறகு தேவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனுக்குள் திடமான பொருளானார். அது தான் அவருடைய குமாரன். இந்த குமாரன், மற்ற குமாரர்களைக் கொண்டுவரும் பொருட்டு தம்முடைய ஜீவனை ஈந்தார் - தேவன் காணக்கூடியவராய் அவர்கள் எல்லோரிலும் கிரியை செய்யும் பொருட்டு, “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள் யோவான்:14:20. ஓ, சகோரதரனே, அது ஒரு உண்மையான நாளாயிருக்கும். நீங்கள் செய்தியைக் கேட்பதற்காக பர்மிங்ஹாமிலிருந்து காரோட்டிக் கொண்டு வரவேண்டிய அவசியமிராது; அப்பொழுது செய்தி நம்முடனே கூட இருக்கும். இல்லையா? ஓ, அது மிகவும் அருமையான, அற்புதமான தருணமாயிருக்கும். நாம் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்; அந்த நாள் வர தேவன் துரிதப்படுத்துவாராக. அங்கு அமர்ந்திருக்கும் அந்த மகத்தான நகரம் (இப்பொழுது, பாருங்கள்?), அது... நீங்கள் நினைக்கலாம் “ஆயிரத்தைந்நூறு மைல் உயரமா?” என்று. அப்படித்தான் வேதம் கூறுகிறது. இப்பொழுது, அது செங்குத்தாக இப்படி ஆயிரத்தைந்நூறு மைல் இருக்காது. பாருங்கள்? எல்லா பாகங்களும் சமமாயுள்ள மற்றொரு பூகோள் அளவு நமக்குள்ளது; அது தான் கூர்நுனிக் கோபுரம். பாருங்கள்? அந்த நகரம் ஒருக்கால் ஏறக்குறைய அறுபது டிகிரியில் துவங்கும். அவ்விதம் அது தொடங்குமானால், அதன் ஆயிரத்தைந்நூறு மைல்கள், அது எவ்வளவு உயரம் என்றும், அங்கு அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ஆனால் மலையின்மேல் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவே தெரியாது. அறுபது டிகிரி சரிவில் ஆயிரத்து ஐந்நூறு மைல் உயரம். நீங்கள் இப்படி இருப்பீர்கள். பாருங்கள்? நகரம் அனைத்தும் இந்த மலையின் மேல் தான் இருக்கும். அது எவ்வளவு உயரமோ அவ்வளவு நீளமும் கூட; அது எவ்வளவு நீளமோ அவ்வளவு அகலமும் கூட - உயரம், ஆழம், உயரம் எல்லாமே சமம்; எல்லா சுவர்களும் சமம் . கூர்நுனிக் கோபுரத்துக்கு நான்கு சுவர்கள் உள்ளன. இந்த நான்கு சுவர்களும்..... 121இப்பொழுது. நகரத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் 216 அடி உயரம், 144 முழங்கள், அவை ஒவ்வொன்றும் ஒரு கல் - அந்த நகரத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே. ஓ.என்னே! நாம் ஏன் இந்த உஷணமான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் இந்த காரியங்களைச் செய்கிறோம்? நாம் ஏன் இவ்விதம் காரோட்டி வருகிறோம்? நான் ஏன் கஷ்டப்படுகிறோம்? அது வழியில் ஒவ்வொரு அங்குலமும் தகுதியுள்ளது. ஓ, நான் வழியின் முடிவை அடையும் போது பாதையில் பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லாதது போல் தோன்றும். அது உண்மை . ஓ, அது எவ்வளவு இனிமையான நேரமாயிருக்கும்! 122அங்கு இயேசு சிங்காசனத்தில் வீற்றிருப்பார். 'சிங்காசனத்துக்கு கீழே ஜீவ நதி ஓடி, இந்த நான்கு சுவர்களின் வழியாக பாய்ந்து சிறு ஓடைகளாகப் பிரிந்து, பிறகு நதியாக உருவாகி. நகரத்தின் வழியாக ஓடும். அது இப்படி தெருக்களின் வழியாக பாய்ந்தோடும். நதியின் இரு பக்கங்களிலும் ஜீவ விருட்சங்கள் நின்று கொண்டிருக்கும், அவை முப்பது நாட்களுக்கு ஒரு முறை தங்கள் கனியை மாற்றி வேறொரு கனியைக் கொடுக்கும், ஓ, என்ன ஒரு நகரம்! வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தராகிய தேவன் இப்பொழுது மகிமையில் இருந்து கொண்டு அந்த நகரத்தை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாம் அந்த நகரம் வருவதற்காக காத்திருந்தான்.... ஏன்? அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் ஆவியுடன் தொடர்பு கொண்டிருந்து, ஆவியின் ஒரு பாகமாயிருந்தான். அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனிடம், “ஒரு நகரம் உண்டு' என்று உரைத்தது. அவன் அது வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அவன், ''நான் ஒரு அந்நியன், ஒரு சஞ்சாரி. தேவன் கட்டி உண்டாக்கின நகரத்துக்காக நான் காத்திருக்கிறேன்” என்றான். அந்த நகரம் எங்கோ உள்ளது என்று அவன் அறிந்திருந்தான். ஒ, என்னே! அவன் அது எந்த இடத்தில் வரும் என்று காத்திருந்தானோ. அந்த பாலஸ்தீனாவில், அங்கு தான் அது எழும்பும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அது சீயோன் மலையின் மேல் உள்ளது. அங்குதான் அந்த நகரம் இருக்கும். அது எங்கு பரம்புகிறது என்று பாருங்கள் - சமுத்திரத்துக்குள், ஒரு சமுத்திரத்திலிருந்து மறு சமுத்திரம் வரைக்கும். கர்த்தருடைய பர்வதத்தின் மேல் ஆயிரத்தைந்நூறு மைல் நகரம் அமர்ந்திருப்பதை எண்ணிப் பாருங்கள். ஓ, அது அற்புதமாயிருக்கும்! 123அங்கு சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும். சிங்கம் மாட்டைப்போல் வைக்கோலைத் தின்னும். கரடி சாந்தமாயிருக்கும், ஓனாய் அடங்கியிருக்கும். அது எப்படிப்பட்ட நேரமாயிருக்கும்! எதுவுமே தீங்கு செய்து அழிக்காது; எல்லாமே சமாதானத்திலும் அன்பிலும் இருக்கும். அங்கு வயோதிபம் இருக்காது, அங்கு வியாதியோ மரணமோ இராது. ஜனங்களே, இது சாண்டா க்ளாஸ் கதை அல்ல, ஏதோ ஒரு கட்டுக்கதை அல்ல, இது வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது. வார்த்தை ஒருபோதும் தவறினதில்லை. அந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து எண்ணிப் பார்க்கும் போது... இது வேதாகம நாட்களில் அல்ல, இந்நாளில், தேவன் நியமித்துள்ள இந்நாளில் நிறைவேறும். அவருடைய வார்த்தையில் ஒரு சிறு அணுவும் கூட ஒருபோதும் தவறினதில்லை. ஓ, அந்த நகரத்தை நோக்கி நான் சென்றுகொண்டிருக்கிறேன். அதை நான் நேசிக்கிறேன், நீங்களும் நேசிக்கிறீர்கள் அல்லவா? 124இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, கடிகாரம் ஒன்பது மணி இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது என்று காண்பிக்கிறது. என்னுடைய சில நண்பர்கள் கென்டக்கியிலிருந்து வந்துள்ளனர். சில நண்பர்கள் நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்துள்ளனர் என்று எனக்குத் தெரியும். இன்றிரவு முழுவதும் நீங்கள் தங்க எண்ணினால், உங்கள் அறைக்கான கட்டணத்தை நான் செலுத்தி விடுகிறேன். உங்கள் இரவு உணவு உங்களுக்காக காத்திருக்கிறதென்றும், நீங்கள் தங்க விரும்பினால் விடுதி கட்டணத்தை நான் செலுத்தி விடுவேன் என்றும் ஏற்கனவே நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, பின்னால் உள்ள பில்லியை சந்திக்க வேண்டும். நான் நிச்சயம் அதை செய்வேன். உங்களுக்கு உதவிசெய்ய 'நான் எதையும் செய்வேன். உங்களை நான் நேசிக்கிறேன் இந்த கேள்விகளுக்கு முரணாக பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நீங்கள் நம்பாவிட்டால், அதனால் பரவாயில்லை. நீங்கள் எப்படியானாலும் என்னை நேசிக்க வேண்டும்மென்று விரும்புகிறேன், ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிவார். எனக்குத் தெரிந்த வரையில் இந்த கேள்விகளுக்கு நான் சிறந்த முறையில் பதிலளிக்கிறேன். நண்பர்களே, சில கேள்விகளுக்கு நான் தவறாக பதிலுரைக்கக் கூடும். ஆனால் வேண்டுமென்றே நான் தவறாக பதில் கூறவில்லை. எனக்கு ஆறு அல்லது எட்டு கேள்விகளே இருந்திருக்குமானால் அவைகளில் நீண்ட நேரம் நிலைத்திருந்து அவைகளை விவரித்திருப்பேன். ஆனால் அவைகள் அனைத்தையும் இப்பொழுது வேகமாக , பார்ப்பதற்கு பதிலாக... விவாகமும் விவாகரத்தும் என்னும் பேரில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. அவைகளில் சிலவற்றிற்கு பதிலுரைக்கலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் இந்த கேள்விகள் குவியலிலிருந்து அவைகளை என்னால் பொறுக்கி எடுக்க முடியவில்லை. என்னிடம் மிகவும் முக்கியமான சில கேள்விகள் உள்ளன, மிகவும் முக்கியமான கேள்விகள். என்னால் கூடுமானால், அவைகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். 125இப்பொழுது, நீங்கள் அருகில் வசிக்க நேர்ந்தால் பில்லியை புதன் கிழமையன்று தொலைபேசியில் கூப்பிடுங்கள். நான் திரும்பி வந்து விடுவேனா என்று அதற்குள் எனக்குத் தெரிந்துவிடும். இந்த வாரம் நான் ஜெபத்தில் தரித்திருப்பேன். ஆனால் எனக்கு நிறைய தனியார் பேட்டிகள் உள்ளன, ஓ, இவ்வளவு பெரிய குவியல். அரிசோனாவிலும் ஏறக்குறைய இவ்வளவு உள்ளன. இந்நாட்களில் ஒன்றில், என்னால் முடியும் போது, அவைகளை நான் கவனிக்க வேண்டும். அது அதிகமாக வியாதிப்பட்டுள்ள ஜனங்கள். அவர்களில் சிலருக்கு பிரச்சினைகள் உள்ளன, அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை - பிரச்சினைகள் உள்ள கணவன்' மார்களும் மனைவிமார்களும். இங்குள்ள சில கேள்விகள் தனியார் பேட்டிகளுக்கு திருப்பப்பட வேண்டும். ஏனெனில் ஜனங்கள் தங்கள் திருமண விவகாரங்களைக் குறித்து கூறியுள்ளவைகளை என்னால் வெளிப்படையாய் படிக்கமுடியவில்லை - அப்படிப்பட்ட காரியங்கள். நான் பில்லியை அனுப்பி, அவர்கள் யாரென்று கண்டறிந்து, அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, இந்த விவகாரங்களைக்குறித்து நான் நேர்முகமாக பேசுவதற்காக அவர்களை பேட்டியில் சேர்த்திருக்கிறேன் என்று அறிவித்தேன். சில கேள்விகள் மிகவும் பிரச்சினைக்குரியவை, இவை பதில் சொல்லப்பட வேண்டிய கேள்விகள். 126உங்களுக்கு உதவி செய்ய முயலவே நான் இங்கிருக்கிறேன், ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் நான் கிறிஸ்துவுக்கு பெற்றெடுத்த என் பிள்ளைகள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் உரிமை கோருகிறேன். இன்றிரவு உங்களை நான் உரிமை கோருகிறேன், எல்லா நேரத்திலும் உங்களை நான் உரிமை கோருகிறேன். உங்களை நான் எப்பொழுதும் என் சகோதரனும் என் சகோதரியுமாக உரிமை கோருகிறேன். நீங்கள் என் பிள்ளைகள். நான் சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், குருவானவர்களை பிதா (father) என்று அழைக்கின்றனரே, அவ்விதம் அல்ல. நான், பவுல் கூறியதுபோன்று, சுவிசேஷத்தில் உங்கள் தகப்பனாக இருக்கிறேன், கிறிஸ்துவுக்கு உங்களை நான் பெற்றெடுத்தேன், இப்பொழுது நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன் (espouse). அதாவது உங்களை கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு நிச்சயதார்த்தம் செய்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்! என்னை ஏமாற்றி விடாதீர்கள்! நீங்கள் கற்புள்ள கன்னிகையாக நிலைத்திருங்கள்.. “அதை நான் எவ்விதம் செய்வேன், சகோ.பிரான்ஹாமே?” வார்த்தையில் நிலைத்திருங்கள்: சுத்தமாகவும் தூய்மையாகவும் வாழுங்கள்; உலகத்தின் காரியங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாதிருங்கள். உலகத்தின் மேல் அன்பு உங்கள் உள்ளத்தில் இருக்குமானால், “ஓ, இயேசுவே, அதை என்னிடமிருந்து விலக்கிவிடுவீராக. நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை” என்று கூறுங்கள். ஏதோ இதை வெறுமனே கூறுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்னும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. நீங்கள் உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டும் என்றே நான் கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்காக ஒவ்வொரு நாளும் வாழுங்கள். எந்த பொல்லாப்பையும் செய்யாதிருங்கள். 127அநேக சமயங்களில் நான் கால்வீனிய விசுவாசத்தைக் குறித்து பேசுகிறேன். அதனால், நீங்கள் விரும்பின் எதையும் செய்வதற்கு அது உங்களை அவிழ்த்து விட்டுள்ளது என்று எண்ணி விடாதீர்கள். அன்றொரு நாள் ஒருவன்... நான் அவனிடம், “நீ சபைக்கு செல்லவில்லையா?' என்று கேட்டேன். அவன், “நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன்” என்றான். அந்த மனிதனின் மனைவி என்னிடம் வந்தாள், அவள் துணிகளை சலவை செய்யுமிடத்திலிருந்து ஞாயிறன்று வந்து கொண்டிருந்தாள். நான், “நீ ஏன் சபைக்குச் செல்லவில்லை?” என்று கேட்டேன். அவள், “நான் துணிகளை சலவை செய்து கொண்டிருந்தேன்” என்றாள். நான், “நீ அவ்விதம் செய்திருக்கக் கூடாது” என்றேன். அவள், “நான் சட்டங்களை கைக்கொள்பவள் (legalist) அல்ல: என்றாள். நான், “நீ கிறிஸ்தவள் என்று நான் எண்ணினேன். வேறொருவருடைய வழியில் நீ இடறலைப்போடுகிறாய் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். பாருங்கள்? அவள் “நல்லது , ஆ, இதை நான் விசுவாசிக்கிறேன். இவைகளை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. நான் சட்டங்களை கைக்கொள்பவள் அல்ல” என்றாள். நல்லது. பாருங்கள் என் சகோதரனே, சகோதரியே, இங்கு பாருங்கள். “மாம்சம் புசிப்பது, என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்குமானால், இந்த உலகம் உள்ள வரைக்கும் நான் மாம்சம் புசியேன்” என்று பவுல் கூறியுள்ளான். நான் நினைக்கிறேன், இது. மிகவும் சிறந்ததாயிருக்கும்...., 128இப்பொழுது நீங்கள், “சகோ.பிரான்ஹாமே, நீங்கள் வேட்டையாடுகிறீர்கள். நீங்கள் ஞாயிறன்று ஒருபோதும் வேட்டையாடினதில்லையா?” எனலாம். உங்களுக்கு ஒன்றை கூறவிரும்புகிறேன். நான் இதைக் குறித்து என்னை புகழ்ந்து கொள்வதில்லை, ஆனால் நான்...நான் ஓய்வு நாளை ஆசரிக்கும் ஒருவன் அல்ல, பரிசுத்த ஆவியே நமது இளைப்பாறுதல் என்று விசுவாசிப்பவன் நான். அதை நான் விசுவாசிக்கிறேன், ஆனால் உயிர்த்தெழுதலை ஒரு ஞாபகார்த்தமாக நாம் மதிக்க வேண்டும் என்பது என் கருத்து. அது ஒரு ஞாபகார்த்தம்... நீங்கள் ஏதாவதொரு நாளை கெளரவிக்க விரும்பினால், உயிர்த்தெழுதல் நாளை கௌரவியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளை ஆசரிக்க வேண்டும் என்னும் பிரமாணம் எதுவும் கிடையாது. ஏனெனில் நாம் அவருக்குள் பிரவேசிக்கும் போது, சமாதானத்தின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறோம். ஓய்வு நாள் என்றால் என்ன என்னும் கேள்வி என்னிடம் உள்ளது. கர்த்தருக்கு சித்தமானால் அந்த கேள்விக்கு வெகுவிரைவில் பதில்கூறுவேன். தேவனுக்கு சித்தமானால் அதை நான் விவரிப்பேன், இப்பொழுது கவனியுங்கள், இதை ஞாபகம் கொள்ளுங்கள் பாருங்கள்? நான் சிறுபையனாக இருந்த போது, இந்த சாலையில் எய்க் குடும்பத்தினர் வசித்துக் கொண்டிருக்கும் இடத்தில் நான் இருந்த போது, எனக்கு ஏறக்குறைய பதினான்கு வயது இருக்கும் நான் பிழைப்புக்காக சிறு மிருகங்களை கண்ணி வைத்து பிடித்து வந்தேன் (trapper). எங்கள் வீட்டுக்கு தேவையான ஆகாரத்தை நான் வாங்குவதற்கு உதவி செய்த ஒரே வழி, ஸ்கங்க்கள் (skunks). மஸ்க்ராட்டுகள்(muskrats), ஒப்பஸம்கள் (oppossums) போன்றவைகளை பிடித்தலின் மூலமாகவே. எனக்கு மிருகங்களைப் பிடிப்பதில் மிகவும் பிரியம். அதை நான் செய்ய வேண்டியதாயிற்று. எனக்கு ஒரே ஒரு உடுப்பு மாத்திரம் இருந்தது. எனக்கு உடுக்க அவ்வளவுதான் இருந்தது. அம்மா அதை கழற்றி துவைத்து, மறுபடியும் அணிய வைப்பார்கள். அப்படித்தான் நான் சிறுபையனாயிருந்த போது பள்ளிக்குச் சென்றேன். ஒரு இரவு நான் அங்கு நின்று கொண்டிருந்தபோது, “வாத்தன் என்னுமிடத்தில் சற்று மேலே நான் கண்ணியை வைத்திருக்கிறேன்” என்று கூறினேன். இந்த கண்ணிகளை வைக்க நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சுமார் 2 மணிக்கு கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்துக்கு நேரத்தோடே செல்வதற்காக திரும்பி வருவது வழக்கம். நான் ஒரு முயலைப் பிடித்தால் எனக்கு பதினைந்து சென்டுகள் கிடைக்கும். அந்த பணத்தை கொண்டு ஒரு பெட்டி வெடிமருந்துகள் வாங்குவேன். அது மூன்று அல்லது நான்கு முயல்களைக் கொல்லும். நாங்கள் குழம்புக்காகவும் இரவு உணவுக்காகவும் வேண்டிய முயலை வைத்துக்கொண்டு, மற்றதை விற்று விடுவேன். அதில் கிடைக்கும் பணம் ரொட்டி அல்லது சிறிது ஆகாரம் வாங்கவோ அல்லது குழம்பு செய்வதற்காக கொஞ்சம் மாவு வாங்கவோ போதுமானதாயிருக்கும். நீங்கள் அவ்வளவு வறுமையான வாழ்க்கை வாழ நேரிட்டதோ என்னமோ, எனக்குத் தெரியாது. 129நான் ஆற்றில் ட்ரவுட் (trout) மீன்களைப் பிடிப்பதற்காக கண்ணி வரிசைகளை போட்டு, அவைகளைப் பிடித்து ஒரு பவுண்டு மீனை பத்து சென்டுகளுக்கு விற்பது வழக்கம். கண்ணி வரிசைகளை அமைக்க என்னிடம் படகு இருக்கவில்லை. நான் ஒரு மரக்கட்டையுடன் நீந்திச்செல்வேன். நான் ஆற்றில் இறங்கும்போது அது மிகவும் குளிராக இருக்கும். கண்ணிகள் உள்ள பக்கெட்டை நான் மரக்கட்டையின் மேல் வைத்து, உடுப்பில்லாத என் உடல் ஆற்றில் இருக்க, இப்படி நீந்தி நீந்திச் சென்று, கண்ணியை போடுவேன். இந்தப் பக்கத்தில் உள்ள கயிற்றில் நான் என் மீனைக் கட்டுவேன். நான் நீந்திக் கொண்டிருக்கும் போது 'காட்ஃபிஷ் மீன்கள் என் காலை உராய்ந்து கொண்டு போகும். அந்த விதமாக நான் கண்ணியைப் போடுவது வழக்கம். ஆனால் பாருங்கள், எத்தனையோ இரவுகளில் நான் 11 மணிக்கு அந்த ஆற்றுக்குச் சென்று அந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு கண்ணியையும் குலுக்கிப் பார்த்திருக்கிறேன். ஆறு நாட்களில் நான் போதிய மீன்களைப் பிடிக்காமல் போனால், அது ஏழாம் நாளில் கிடைப்பதை நான் விரும்பினதில்லை. நான் மழையில் அங்கு நின்றதுண்டு. 130ஒரு இரவில் நான் நின்று கொண்டு நிலைக்காலின் மேல் சாய்ந்து கொண்டிருந்ததை எண்ணிப்பார்க்கிறேன்... நான் ஒரு பாவியாய் இருந்தேன், ஆனால் நான் நின்று கொண்டு இப்படி வாசலின் நிலைக்காலின் மேல் சாய்ந்து கொண்டிருந்தேன். ஓ , மழை அதிகமாக பெய்துகொண்டிருந்தது. அப்பொழுது சுமார் 11 மணி இருக்கும். நான், “இன்றிரவு எனக்கு நேரமாகி விடும். நான் போய் அந்த கண்ணிகளில் ஒவ்வொன்றையும் வெளியே எடுத்துவிடுவேன். நான் ஓய்வு நாளன்று மீனைப் பிடிக்கமாட்டேன். அன்று நான் கண்ணியை போடமாட்டேன்” என்றேன். தேவன் அதை கெளரவித்தார். நான் எப்போதும் விரும்பிய நேரத்தை நினைவில் கொள்கிறேன், நான் எப்போதும், என் வாழ்நாள் முழுவதும் வேட்டையாட விரும்பினேன். என் தாத்தா இருந்தார். உங்களுக்கு தெரியும், என் பாட்டி அவள் ஓய்வூதியம் பெற்றாள். நான் வெளிப்புறங்களில் செல்வதை விரும்புகிறேன். நான் என் வாழ்நாள் முழுவதும் வேட்டைக்காரனாயிருக்க விரும்பினதை எண்ணிப் பார்க்கிறேன்..... 30 - 30 துப்பாக்கியை சொந்தமாகப் பெற எனக்குப் போதிய பணம் கிடைத்தால், அப்பொழுது நான் சில வெடிமருந்துகளை வாங்கிக் கொண்டு, மலைகளுக்குச் சென்று உலகத்தையே மறந்து விடுவேன்' என்று எண்ணினேன். “சில சமயங்களில் என்.22 துப்பாக்கியை எடுத்துச் சென்று நன்றாக சுடப் பழகினால், வேட்டைக்காரன் எவனாகிலும் அவனுடன் கூடச் செல்ல என்னைக் கேட்டுக்கொள்ளக் கூடும். நான் குறி தவறாமல் சுடுபவனாயிருந்தால், அவனுடைய பாதுகாப்புக்காக என்னை கூடக் கொண்டு செல்வான்; நான் வேட்டைக்குச் செல்ல வாய்ப்புண்டாகும்” என்று எண்ணியதுண்டு. இப்பொழுது நான் பார்க்கும் போது, பணத்தால் வாங்கக் கூடிய மிகச் சிறந்த துப்பாக்கிகள் என் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஜனங்கள் வேட்டைக்குச் செல்வதற்காக என் துப்பாக்கிகளை அவர்களுக்கு கடனாகக் கொடுக்கிறேன். 131நான் மலைகளுக்குச் சென்று பிரசங்கிக்க அவர் என்னை அனுமதிக்கிறார்; உலகிலேயே மிகச்சிறந்த வழிகாட்டிகள் என்னை இலவசமாக வேட்டைக்கு கொண்டு செல்கின்றனர். 'திகைப்பூட்டும் கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது.' நான்.... இன்று காலையிலும் கூட இங்குள்ள மான் வேட்டையாடும் ஒரு முதியவர் அவருடைய 35 ரெமிங்டன் துப்பாக்கியை கொண்டு வந்து - அந்த துப்பாக்கி உண்மையில் எனக்குத் தேவையும் கூட இல்லை — தமது கரங்களை என் தோள் மேல் போட்டு, வேட்டையாடுவதற்கு அவருக்கு வயது அதிகமாகி விட்டதென்று கூறி “என் துப்பாக்கியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்” என்றார். நான் சிறுவனாயிருந்த போது, அப்படிப்பட்ட ஒரு துப்பாக்கியை சொந்தமாக வாங்க வேண்டுமென்று எண்ணியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். இப்பொழுது என் சுவற்றில் மிகச்சிறந்த துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருப்பதையும், வேட்டைக்காக பல இடங்களுக்குச் செல்வதையும் எண்ணிப் பார்க்கிறேன். நான் சிறுவனாயிருந்த போது நடந்தது என் நினைவுக்கு வருகிறது. பையன்கள் 'ஐஸ்கிரீம் கோன்கள் வாங்குவார்கள். சில சமயங்களில் சில பையன்களுக்கு கூடுதல் காசு இருந்தால், அவர் கள் எனக்கு ஒரு 'கோன்' வாங்கித் தருவார்கள். அவர்களுக்கு திருப்பி வாங்கித்தர என்னிடம் காசு இருந்ததில்லை. நான் நினைத்தேன், “நான் மட்டும்...'' 132சில சமயங்களில் அவர்கள் எனக்கு “மட்லார்க் ஹாம்பர்கர்” என்று நாம் அழைப்பதை வாங்கித் தருவது வழக்கம். உங்களுக்கு அது ஞாபகமுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பழங்காலத்தவரான உங்களில் சிலருக்கு.... அது ஐந்து சென்டு காசுக்கு கிடைக்கும், அதனுடன் கூட நிறைய பொறித்த வெங்காயம் கொடுப்பார்கள். ஓ, அப்படிப்பட்டவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சிறுவனாயிருந்த போது எங்களுக்கு அது கிடைக்கவில்லை .... வெறும் சோள ரொட்டியும் (Cornbread) சர்க்கரை குழம்பும்(molasses). அதை சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். யாராகிலும் ஒருவர் எனக்கு ஒரு ஹாம்பர்கர் வாங்கிக் கொடுத்தால், அதைப்பிடித்திருந்த என் விரல்களையும் கூட நான் நக்குவது வழக்கம். அது அவ்வளவு ருசியாக இருக்கும். “அந்த மனிதனுக்கு நான் திருப்பி ஒரு ஹம்பர்கர் வாங்கிக் கொடுக்க முடிந்தால் என்று நினைத்ததுண்டு'' ஆனால் இப்பொழுதோ சபை முழுவதுக்கும் அவர்களுடைய இரவு உணவை வாங்கித் தர என்னால் முடிகிறது. இவையனைத்தையும் நான் எண்ணிப் பார்க்கிறேன். இவை எங்கிருந்து வந்தன? தேவனுடைய கிருபை, நான் செய்தது ஒன்றுமில்லை. 133நான் இங்குள்ள தெருவில் நடந்து சென்று யாராகிலும் ஒருவருடன் பேசுவதை எண்ணிப்பார்க்கிறேன். என் தகப்பனார் குடிப்பது வழக்கம், அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் விஸ்கி தயாரிப்பார். யாருமே என்னுடன் சாவகாசம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். நான் தெருவில் நடந்து சென்று மனிதர்களுடன் பேச முயற்சிப்பேன்; அந்த மனிதர்களை நான் இன்றைக்கும் சந்திக்கிறேன். நான் யாரிடமாவது பேச முயன்றால், பேசுவதற்கு அவர்களுக்கு வேறு யாருமில்லை என்றால் அவர்கள் நின்று கொண்டு, “ஆம், உ, ஊ” என்று மட்டும் சொல்லுவார்கள். பாருங்கள்? ஏனெனில் நான் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் மிகவும் வருத்தப்பட்டு நடந்து சென்று விடுவேன். “அதைக் குறித்து நான் குற்றவாளியல்லவே. என் தகப்பனார் செய்து கொண்டிருப்பதை நான் செய்யவில்லையே. என் வாழ்நாளில் நான் குடித்ததே கிடையாது. அப்படியிருக்க நான் ஏன் இதை சகித்துக் கொள்ளவேண்டும்?” என்று எண்ணியதுண்டு. அண்மையில் நான் என் மனைவியிடம், “ஜனங்களை சந்திக்காமலிருக்க, நான் நகர்புறத்தில் தங்க வேண்டியுள்ளது” என்று கூறினேன். தேவன் எனக்கு மிகவும் நல்லவராக இருந்து வருகிறார். 134ஒருமுறை தாவீது நாத்தான் தீர்க்கதரிசியிடம் கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். நாத்தான்... தாவீது அவனிடம், “நான் கேதுரு மர வீட்டிலே வாசம் பண்ணுகையில் என் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி திரைகளின் கீழ் இருக்கிறது சரியா யிருக்குமோ” என்று கேட்டான் (1 நாளா. 17:1) அதற்கு தீர்க்கதரிசியாகிய நாத்தான். “உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார்” என்றான். தீர்க்கதரிசி தவறு செய்தான், ஆனால் வேண்டுமென்று இல்லை. அன்றிரவு கர்த்தர் தீர்க்கதரிசியிடம் வந்து, “நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: ஆடுகளின் பின்னே நடந்து, ஒரு சில ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் எடுத்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன் (அவர் அவனுக்கு மிகப் பெரிய நாமத்தை கொடுத்ததாக கூறவில்லை, அவர் பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை கொடுத்ததாக மட்டும் கூறினார்). தாவீதே, இவையெல்லாம் உனக்கு நான் செய்தேன். நீ போன இடமெல்லாம் உன் சத்துருக்களையெல்லாம் நான் நிர்மூலமாக்கினேன். நான் உன்னோடே இருந்தேன். நான் உனக்கு எந்த விதத்திலும் தவறவில்லை, நான் ஒருபோதும் தவறவும் மாட்டேன். ஆனால் நீ எனக்கு ஒரு வீட்டைக்கட்ட நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார் (1நாளா.17:4-10). 135அதைக்குறித்து நான் சிந்தித்துப் பார்த்தேன், தேவன் எனக்குதவி செய்து, பெரிய மனிதர்களை நான் அறியவும், உலகம் முழுவதும் சென்று வரவும் தக்கதான ஒரு நிலைக்கு என்னை கொண்டுவந்துள்ளார். உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்கள் தங்களுக்காக ஜெபம் பண்ணும்படி என்னை அழைக்கின்றனர். வியாதிப்பட்டோர் அவர்களுடன் சில நிமிடங்கள் நான் செலவிடவேண்டுமென்று விரும்புகின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் என்னைத் தெருவில் ஏறெடுத்தும் பாராமல் தலையைத் திருப்பிக் கொண்டு சென்றனர். இப்பொழுது என் மூலம் நகருக்கு வரும். ஜனங்களினால், அவர்களுக்கு உணவளித்து அவர்கள் விடுதிகளில் அவர்கள் தங்குவதன் மூலம், வியாபாரிகள் செழிக்கின்றனர். ஜனங்கள்... ஜனங்கள் என்னை முன்பு நேசிப்பதில்லை, என்னால் அவர்களுக்கு ஒருஉபயோகமும் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நான், தேவனுடைய உதவியைக் கொண்டு, இயேசுகிறிஸ்துவின் மணவாட்டியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். ஓ. “திகைப்பூட்டும் கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது”. . 136இது எங்கிருந்து வந்தது? என் கல்வியா? எனக்கு கல்வி எதுவுமில்லை. இது எங்கிருந்து வந்தது? என் குறிப்பிடத்தக்க தோற்றமா? எனக்கு அது ஒன்றும் கிடையாது. அது என் வேதசாஸ்திர அறிவினால் உண்டானதா? எனக்கு அது ஒன்றும் தெரியாது. அப்படியானால் இதற்கு காரணம் என்ன? என்னை இரட்சித்த தேவனுடைய கிருபையே. கிருபையே என் இருதயம் பயப்பட போதித்தது கிருபையினால் என் பயங்கள் நீங்கின. நான் முதலில் விசுவாசித்த அந்த நேரத்தில் அந்த கிருபை எவ்வளவு சந்தோஷமாக காணப்படட்து. பல ஆபத்துகள், கஷ்டங்கள், கண்ணிகள் வழியாக நான் ஏற்கனவே வந்து விட்டேன் கிருபையே என்னை இதுவரை பாதுகாப்புடன் கொண்டு வந்தது கிருபையே என்னை வீடு கொண்டு செல்லும். சூரியனிலும் பிரகாசமுள்ள அந்த நகரில் நாம் பத்தாயிரம் ஆண்டுகள் இருந்த பிறகும் அவருடைய துதியைப் பாட நாம் முதலில் தொடங்கின முதற்கொண்டு நமக்கு நேரம் போதாமல் இருக்கும். ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், நான் பாவியாயிருந்தபோது என்னை இரட்சித்ததும். நான் வியாதியாயிருந்தபோது என்னை சுகமாக்கினதும், அந்த நகரத்தில் எனக்கு ஒரு வீட்டை வாக்குத்தத்தம் செய்ததுமான அந்த அழகான நாமம். அந்த கன்மலையில் எனக்கு ஒரு வீடு உண்டு. தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, “நாம் போவோம்” என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் இப்பொழுது முக்கியம் வாய்ந்ததல்ல. நள்ளிரவு நேரம் வந்திருக்கின்றது; நாம் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகி விட்டது. நாம் ஜெபம் செய்வோம்: 137கர்த்தராகிய இயேசுவே, ஒரு பரிபூரண நாளின் முடிவு. நாங்கள் மலை உச்சியில் நின்றுகொண்டு சூரியனைக் கவனிக்கையில், அதன் சிகப்பு கதிர்கள் தூரத்திலுள்ள அந்த மகத்தான மேற்கு மலைகளில் வந்து படரும் போது, அந்த மகத்தான கண் தன்னை மூடிக்கொண்டு, பறவைகள் தங்கள் கூடுகளுக்கு பறந்து செல்லத் துவங்குகையில், இராக்காலம் வருகிறது. பரிசுத்த ஆவியானவர் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எங்களுக்கு உதவின மற்றொரு மகத்தான ஆவிக்குரிய நாளை நாங்கள் கண்டோம். இப்பொழுது, நாங்கள் எங்கள் கூடுகளுக்குச் செல்கிறோம், கர்த்தாவே. எங்களைக் காத்துக்கொள்ளும்; எங்களை ஒன்றும் தாக்குவதற்கு இடம் கொடாதிரும்; கர்த்தாவே. எல்லா நேரங்களிலும் தேவன். தாமே எங்கள் அருகில் இருந்து கொண்டு எங்களைப் பாதுகாத்து, எங்களுக்கு உதவி செய்வாராக. பரலோகப் பிதாவே, இந்த கூட்டத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும், வரக் கூடாதவர்களையும், ஒலிநாடாக்களை கேட்பவர்களையும் நீர் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். கேள்விகள் அதிககடினமாயிராமல் இருப்பதாக நான் தவறு செய்திருந்தால், கர்த்தாவே, என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர்; நான் வேண்டும்மென்று தவறு செய்யவில்லை. தேவனே, ஏதாகிலும் தவறாயிருந்திருந்தால், அது அப்படியே செல்லும்படி விட்டுவிடாதேயும் என்று ஜெபிக்கிறேன்; ஒலிநாடா அப்பொழுது நின்று விடட்டும். நான் யாரையும் ஏமாற்ற விடாதேயும், கர்த்தாவே . நான் உமக்கு உண்மையுள்ள ஊழியக்காரனாய் இருப்பேனாக. அதுவே என் இருதயப் பூர்வமான வாஞ்சையாயுள்ளது. அவர் வரும்போது நான் பிழைத்திருந்தாலும் மரித்துப்போயிருந்தாலும், நான் தங்கினாலும் புறப்பட்டுச் சென்றாலும், நான் உறங்கினாலும் விழித்திருந்தாலும், அதனால் எனக்கு ஒன்றுமில்லை, பிதாவே, உமது சித்தம் செய்யப்படுவதாக. “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன். (யோபு - 19:25-26). கர்த்தருடைய வருகையை தீர்க்கதரிசி யோபு கண்ட போது இதை உரைத்தான். 138கர்த்தாவே, இன்றைக்கு உம்முடைய ஊழியக்காரர்களாக நாங்கள் உமது வருகையைக் காண எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அது எப்பொழுது, எப்படி, எங்கே இருக்கும் என்பதைக் குறித்தெல்லாம் பாதகமில்லை, கர்த்தாவே, நாங்கள் உம்மைப் பிரீதிப்படுத்தவே விரும்புகிறோம். நாங்கள் உமது கரங்களில் இருக்கிறோம். சூரியன் உதிக்கும் வரையிலும் எங்களைக் காத்துக்கொள்ளும், கர்த்தாவே . அதை அருளுவீராக. அதன் பிறகு நாங்கள் எல்லோரும் ஆட்டுக்குட்டியானவரே விளக்காயிருக்கும் அந்த சீயோன் நகரத்துக்கு அணிவகுத்து செல்வோம்.' இங்குள்ள என் அருமையான பிள்ளைகள், கர்த்தாவே, இவர்களை நான் வேதாகம இணைப்பின் மூலம் உமக்கு நான் பெற்றெடுத்தேன். இவர்கள் இந்த வார்த்தையினால் உண்டான கனிகள். இவர்கள் என்னை நேசிக்கின்றனர், நானும் அவர்களை நேசிக்கிறேன். நீர் எங்கள் அனைவரையும் நேசிக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். தேவனே, நாங்கள் அவரை மட்டும் காணத்தக்கதாக, எங்களை உமது வார்த்தையினால் கருத்தரிக்கச் செய்யுமாறு ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இதை அருளும். நாங்கள் அவருடைய வார்த்தையினால் முற்றிலும் நிறையப்பட்டு, ஆவியானவர் தாமே, எங்களை எங்கும், எந்தவிடத்திலும் உபயோகித்து, அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள எந்த வார்த்தையையும் வெளிப்படுத்துவாராக. இதை எங்கள் அனைவருக்கும் அருளுவீராக. இந்த கூட்டத்தின் மத்தியில் உள்ள இந்த..... 139என் சகோ. ஜாக்சன் இப்பொழுது தொலைவிலுள்ள தென் ஆப்பரிக்காவுக்கு திரும்பிச் செல்கிறார். அவருடனும் அவருடைய மனைவியுடனும் செல்வீராக. அவர்களோடு கூட இருப்பீராக, கர்த்தாவே, அவர்களுடைய பிரயாணத்தில் அவர்களை வழி நடத்தும். இங்குள்ள சகோ. வேயில் நான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் குறித்துக் கொண்டு, ஒரு புத்தகம் எழுத முயன்று கொண்டிருக்கிறார். ஓ, தேவனே, சகோதரன் சகோதரி வெயிலுக்கு உதவி செய்வீராக. “ஆர்கன்ஸாவிலிருந்து வந்துள்ள இந்த சகோதரர் இங்குள்ளனர் - மார்டின் சகோதரரும் இன்னும் மற்ற சகோதரர்களும். அவர்கள் ஒவ்வொருவரோடும் கூட நீர் இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். சகோ. நெவில், சகோ. காப்ஸ், சகோ. ரட்டல், சகோ. ஜூனியர் ஜாக்சன், இவர்கள் அனைவருடனும் இருப்பீராக. ஓ, தேவனே, நிறைய பேர் உள்ளனர். இவர்கள் ஜார்ஜியா, அலபாமா, நாட்டின் எல்லாவிடங்களிலுமிருந்தும், உலகம் முழுவதிலுமிருந்தும் வந்துள்ளனர். இந்த பாடலை நினைவு கூருகிறோம். ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் அவர்கள் தூர தேசங்களிலிருந்து வருகின்றனர் நமது ராஜாவுடன் விருந்துண்ண அவருடைய விருந்தாளிகளாய் புசிக்க (அவரில் பங்குகொள்ள அவர் நம்மை அழைத்திருக்கிறார்) இந்த யாத்திரீகர் எவ்வளவாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் திவ்ய அன்பினால் பிரகாசிக்கும் அவருடைய பரிசுத்தமான முகத்தை நோக்கினவர்களாய் அவர் கிருபையில் பங்கு கொண்டு அவர் கிரீடத்தில் இரத்தினங்களாய் ஜொலிக்க 140ஓ, தேவனே, மற்றவர்கள் அவரைக் கண்டு அவரை சேவிக்க வாஞ்சை கொள்ள, அவருடைய கிரீடத்தில் நாங்கள் இரத்தினங்களாய் ஜொலிப்போமாக. கர்த்தாவே, இதை அருளும். அவர்கள் பிரயாணப்பட்டு போகும் வழியில் அவர்களைப் பாதுகாரும். ஒவ்வொருவரையும் ஆசிர்வதியும். பிதாவே, நீர் குறித்துள்ள நேரத்தில்... நான் உம்முடைய ஊழியக்காரன் . நான் அடுத்த வாரம் இங்கு தொடர்ந்து இந்த பேட்டிகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நீர் விரும்பினால், கர்த்தாவே, அதை எனக்கு வெளிப்படுத்துவீராக. இப்பொழுது முதல் புதன்கிழமைக்குள் அதை எனக்குத் தெரியப்படுத்துவீராக, அப்பொழுது நாங்கள் அறிந்து கொள்வோம். கர்த்தாவே, ஜனங்கள் வரத்தக்கதாக இதை அருளுவீராக. நீர் எங்களுக்கு உதவிசெய்து, அடுத்த கூட்டத்தின் சமயத்தில் எங்களை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்னும் இந்த ஆசீர்வாதத்துக்காக ஜெபிக்கிறேன். சகோ.நெவிலோடும், வார்த்தையை டெக்ஸாஸிலும், ஆர்கன்ஸாவிலும் இன்னும் பல்வேறு இடங்களிலும் கொண்டு வரும் இந்த மனிதரோடும் இருப்பீராக; பிதாவே, அவர்களோடு கூட இருப்பீராக. சகோ.பெர்ரீ கீரீனுடனும் அங்குள்ள அந்த குழுவின் ருடனும் இருப்பீராக. இவர்கள் அனைவருடனும் இருப்பீராக, கர்த்தாவே; அவர்கள் உம்முடைய சிறு பிள்ளைகள். அவர்கள் உலகம் பூராவிலும் உம்முடைய வருகையை எதிர்நோக்கியிருக்கின்றனர். பிதாவே, எங்களை உம்மிடம் இப்பொழுது ஒப்படைக்கையில், எங்களுக்கு உதவி செய்வீராக. இயேசுவின் நாமத்தில் எங்களை உபயோகியும். ஆமென். 141அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் என்னும் பாடல் எனக்கு மிகவும் பிரியம். எத்தனை பேருக்கு அது தெரியும்? எனக்கு முழு பாடலுமே பாராமல் தெரியாது. ஆனால் ஒரு சரணம் எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சகோதரியே, நீ அதை பிடித்துக்கொள்ளலாம். அவர்கள் அவ்விதம் செய்வார்களோ என்று எனக்குத் தெரியவில்லை. ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் அவர்கள் தூர தேசங்களிலிருந்து வருகின்றனர் நமது ராஜாவுடன் விருந்துண்ண அவருடைய விருந்தாளிகளாய் புசிக்க இந்த யாத்திரீகர் எவ்வளவாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - திவ்ய அன்பினால் பிரகாசிக்கும் அவருடைய பரிசுத்தமான முகத்தை நோக்கினவர்களாய் அவர் கிருபையில் பங்கு கொண்டு, அவர் கிரீடத்தில் இரத்தினங்களாய் ஜொலிக்க. ஓ, இயேசு சீக்கிரம் வருகிறார் அப்பொழுது நமது துன்பங்கள் முடிவுறும் பாவத்திலிருந்து விடுதலையடைந்தவர்களுக்காக ஒ, இந்த க்ஷணத்திலே நமது கர்த்தர் வருவாரானால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருமா, அல்லது துயரையும் மிகுந்த நம்பிக்கையின்மையுமா? மகிமையில் நமது கர்த்தர் வரும் போது நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம் (உங்களுக்கு அது பிடிக்கிறதா? நாம் மறுபடியும் இதை பாட முயல்வோம்.) . ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் ஓ, அவர்கள் தூர தேசங்களிலிருந்து வருகின்றனர் நமது ராஜாவுடன் விருந்துண்ண அவருடைய விருந்தாளிகளாய் புசிக்க இந்தயாத்திரீகர் எவ்வளவாய் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் திவ்ய அன்பினால் பிரகாசிக்கும். அவருடைய பரிசுத்தமான முகத்தை நோக்கினவர்களாய் ஓ, அவர் கிருபையில் பங்கு கொண்டு அவர் கிரீடத்தில் இரத்தினங்களாய் ஜொலிக்க ஓ, இயேசு சீக்கிரம் வருகிறார் அப்பொழுது நமது துன்பங்கள் முடிவுறும் பாவத்திலிருந்து விடுதலையடைந்தவர்களுக்காக ஓ, இந்தக்ஷணத்திலே நமது கர்த்தர் வருவாரானால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருமா, அல்லது துயரையும் மிகுந்த நம்பிக்கையின்மையுமா? மகிமையில் நமது கர்த்தர் வரும்போது நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம் (எத்தனை பேர் அவரை ஆகாயத்தில் சந்திக்க விரும்புகிறீர்கள்? 'ஓ, என்னே!) ஒ, இயேசுசீக்கிரம் வருகிறார் (உங்கள் கண்களை மூடி எக்காள சத்தத்தை கேட்பதாக கற்பனை செய்யுங்கள்) அப்பொழுது நமது துன்பங்கள் முடிவுறும் பாவத்திலிருந்து விடுதலையடைந்தவர்களுக்காக ஓ, இந்த க்ஷணத்திலே நமது கர்த்தர் வருவாரானால் அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவருமா, அல்லது துயரையும் மிகுந்த நம்பிக்கையின்மையுமா? மகிமையில் நமது கர்த்தர் வரும்போது நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம் (அது உங்களுக்கு பிடிக்கிறதா?) 142பாட், தைரியமாயிருங்கள்! இக்காலை வேளைகளில் ஒன்றில் உங்களுக்கு காலை விடியும். அது எங்கு சென்றது என்று நான் காணவில்லை, ஆனால் அது நன்றாக காணப்பட்டது. ஆமென்! சகோதரனே உங்களுக்கு நீண்ட காலம் உள்ளது, அது திரும்பி வரும். தண்ணீரின் மேல் போடப்பட்ட ஆகாரத்தைப் போல, என்றாவது ஒருநாள் அது உங்களிடம் திரும்ப வரும். அது உண்மை . சரி. ஓ, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, ஓ, திவ்ய இரட்சகரே! நான் ஜெபிக்கும்போது எனக்கு செவிகொடும், என் பாவங்கள் அனைத்தும் நீக்கியருளும், உம்மை நான் ஒருபோதும் விட்டு விலக விடாதேயும். இருள் சூழ்ந்த வாழ்க்கையில் நான் நடந்து சென்று என்னைச் சுற்றிலும் துயரம் பரவியிருக்கையில் என் வழிகாட்டியாயிரும் இருள் வெளிச்சமாக கட்டளையிடும் துயரின் பயங்களை, போக்கியருளும் ஓ, இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருப்பேனாக!. (அது உங்களுக்கு பிரியம் அல்லவா?) என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது . கல்வாரியின் ஆட்டுக்குட்டியே ஓ, திவ்ய இரட்சகரே! நான் ஜெபிக்கும்போது எனக்கு செவிகொடும் என் பாவங்கள் அனைத்தும் நீக்கியருளும் உம்மைநான் ஒருபோதும் விட்டு விலகவிடாதேயும். நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக (ஓ., என்னே !) ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும் நமது பிதாவின் சிங்காசனத்தின் முன்னிலையில் நமது ஊக்கமான ஜெபத்தை நாம் ஊற்றுகிறோம் நமது பயங்கள், நமது நம்பிக்கைகள், நமது நோக்கங்கள் நமது ஆறுதல்கள், நமது கவலைகள் அனைத்தும் ஒன்றே நாம் பிரிந்து செல்லும் போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது ஆனால் நாம் இருதயத்தில் இன்னும் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 143சகோதரி வில்ஸன், உங்களுக்கு ஞாபகமுள்ளதால், ஏறக்குறைய முப்பத்து மூன்று அல்லது முப்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பு நாம் நடத்தின சிறு வீட்டு கூட்டத்தில் நாம் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக் கொள்வோமே? அது உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று எனக்குத் தெரியும். ஓ, நாம் கையை நீட்டி வேறொருவர் கையைப் பிடித்துக் கொள்வோம். நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும் நமது பிதாவின் சிங்காசனத்தின் முன்னிலையில் நமது ஊக்கமான ஜெபத்தை நாம் ஊற்றுகிறோம் நமது பயங்கள், நமது நம்பிக்கைகள், நமது நோக்கங்கள் நமது ஆறுதல்கள், நமது கவலைகள் அனைத்தும் ஒன்றே நாம் பிரிந்து செல்லும்போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது ஆனால் நாம் இருதயத்தில் இன்னும் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்களா?“ “சிறு பிள்ளைகளே. ஒருவரிலொருவர் அன்புகூருங்கள். நாம் சந்திக்கும் வரை. நாம் சந்திக்கும் வரை நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை தேவன் உங்களுடன் இருப்பாராக. 144நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவர் அல்லவா? நீங்கள் ஒருவரிலொருவர் அன்புகூருகிறீர்களா? நீங்கள் கை குலுக்கி, ஒருவருக்கொருவர் ஏதாவதொன்று சொல்லுங்கள். “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே” என்று சொல்லுங்கள். சகோதரி வில்ஸன், நதிக்கப்பால் அவர்கள் இன்றிரவு நமக்கு செவிகொடுத்துக்கொண்டிருக்கின்றனர். சகோ.சூவர்ட் தரையில் நடந்து, தமது கரங்களைக் கொட்டுவதை என்னால் காண முடிகிறது. தாடி வைத்துள்ள நமது சகோதரன் தமது கரங்களையுயர்த்தி, தேவனைத் துதிப்பதை நான் கண்டேன். நான் சகோ.ரையனை நினைத்துக் கொண்டேன், அவர் எவ்விதம் அந்த பழைய கூடாரத்தில் நீண்ட தாடியை வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார் என்று. அவர் இன்றிரவு மகிமையின் வாசலில் நின்று கொண்டு நமக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார், ஒரு அருமையான பரிசுத்தவான். அவர் அற்புதமானவர் அல்லவா? இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரும் துக்கமும் நிறைந்த பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும் ஓ , நீ செல்லும் எல்லாவிடங்களுக்கும் அதை கொண்டு- செல் “விலையுயர்ந்த நாமம், ஓ. என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் (எதற்காக?) ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக (என்ன நடக்கிறது?) சோதனைகள் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் போது அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம். விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! புவியின் நம்பிக்கையும் பரத்தின் மகிழ்ச்சியுமாம் - - - - - (சகோ.பிரான்ஹாம் சபையிலுள்ள யாரோ ஒருவரிடம் பேசுகிறார் -ஆசி). 145பேட்டிகளுக்காக : வரவிருக்கும் பேட்டிகளுக்காக இன்றைக்கும் புதன் கிழமைக்கும் இடையில் அல்லது புதன் கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடையில் பில்லியிடம் தொடர்பு கொள்ளுமாறு அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான். புதன் கிழமைக்கு பிறகு நமக்கு கூட்டங்கள் இல்லாமல் போனால், பேட்டி உள்ளவர்கள் அவனுடன் தொடர்பு கொள்ளவும். உங்களிடம் எவ்விதம் தொடர்பு கொள்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எனவே அவன்....பேட்டியை விரும்பும் அனைவரும் பில்லியுடன் தொடர்புகொள்க. அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? சரி. நாம் சந்திக்கும் வரை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் தலை வணங்குவோம், நான் என் நல்ல விசுவாசமுள்ள நண்பரை, ஒரு காலத்தில் கர்த்தருடைய நாமத்தில் நான் மிஷனரி ஊழியம் செய்த ஆப்பிரிக்காவுக்கு கடல் கடந்து செல்லவிருக்கும் சகோ. ஜாக்சனை... அவரும் அவருடைய மனைவியும் இந்த கடந்த சில ஆராதனைகளின் போது நம்முடன் இருந்ததற்காக நாம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தோம். தேவன் அவரை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்! நான் சகோ.ஜாக்சனிடம், அவர் ஜெபம் செய்து இக்கூட்டத்தை முடிப்பாரா என்று கேட்டுக்கொள்ளப் போகிறேன். சகோ.ஜாக்சன், உமக்கு விருப்பமானால்.